Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 APR, 2025 | 04:57 PM

image

கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (28)  இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

  • பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருங்கள்

  • வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
    திறந்த வெளியில்  உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது

  • மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

  • சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றை பயன்படுத்தவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்

  • கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதால் விழப்புடன் இருங்கள்

  • அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

    5.jpg

    https://www.virakesari.lk/article/213158

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

புதிய இணைப்பு

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்ய அதிக வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாம் இணைப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Today Weather Heavy Rain With Thunderstorms

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (29.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்காலிகமாக பலத்த காற்று

மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Today Weather Heavy Rain With Thunderstorms

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் அனர்த்தம்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Today Weather Heavy Rain With Thunderstorms

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட J 208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 279 கிராம சேவகரபிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J426 கிராம சேவகர் 1குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/today-weather-heavy-rain-with-thunderstorms-1745891520

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.