Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-05-29-at-11.26.22-AM

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை!

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு  குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2025/1433718

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

501069983_1122420089922962_8007706123625

501088288_1122356753262629_1113460731534

502905652_1122349379930033_9745610079230

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்களைக் காப்பாற்றுங்கள்! கண்ணீர் வடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்

தங்களைக் கைவிடாமல் காப்பாற்றுமாறு முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கதறியழத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது 14 ஆயிரம் கரம் பலகைகள் மற்றும் 11 ஆயிரம் டாம் விளையாட்டுப் பலகைகள் என்பவற்றைக் கொள்வனவு செய்து முறைகேடான வழியில் விநியோகித்த குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை 

நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகளும், மஹிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களைக் காப்பாற்றுங்கள்! கண்ணீர் வடிக்கும் முன்னாள் அமைச்சர்கள் | Sri Lanka Political Crisis Npp

இந்நிலையில் மஹிந்தானந்தவின் மைத்துனரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான அனுராத ஜயரத்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்றிருந்த சமயம், அவர்கள் இருவரும் அழுதுபுலம்பியுள்ளனர்.

தங்களைக் கைவிடாமல் காப்பாற்றி வெளியில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளனர்.

https://tamilwin.com/article/sri-lanka-political-crisis-npp-1750086103

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடைய ஆசான்களுக்கு எத்தனை வருடங்களாம்? ம், ஒரு குற்றமா அவர்கள் இழைத்தார்கள்? அவ்வளவுக்கும் கணக்குப்போட்டால் வழ்நாள் முழுவதும். தமிழ் இளைஞர் யுவதிகளைசிறையிலடைத்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு, இப்போ உதறல் எடுத்து உளறித்திரிகிறார்கள், அந்த உளறலே இவர்களை சிக்க வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணவர் அப்பாவி ; மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன

23 JUN, 2025 | 03:42 PM

image

20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது கணவர் குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு,

மஹிந்தானந்த அளுத்கமகே, 2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

எனது கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். அவருக்காக செய்வதற்கு இன்னும் எதுவும் என்னிடம் மீதி இல்லை.  இதனால் நான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இனி என்னை கொன்றாலும் எனக்கு வலிக்க போவதில்லை.

எனது கணவர் அப்பாவி என எனக்கு தெரியும். அவர் மிகவும் அன்பானவர். இப்போது நான் தனிமையில் உள்ளேன்.

எனது கணவர் அவரது அரசியல் கடமைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்த்தார்.

குடும்பத்தை போன்றே தனது அரசியல் கடமைகளையும் கவனித்தார்.

எனது கணவர் தனது அரசியல் வாழ்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தார். அவர் குண்டு வெடிப்பினாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது காலில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. 

எனது கணவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

எனக்கும் எனது கணவருக்கும் எதிராக பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இதனால் நான் எனது கணவரை விட்டு பிரிந்து அமேரிக்காவுக்கும் சென்றேன். ஆனால் அவரை பிரிந்து என்னால் இருக்க முடியாததால்  எங்களது நண்பன் டிலான் பெரேராவின் உதவியுடன் மீண்டும் கணவருடன் இணைந்தேன்.

எனது கணவரின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்தனர்.

ஆனால ்எனது கணவர் அந்த விசாரணைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்தார்.

தனது அரசியல் கடமைகளையும் தவறாமல் செய்தார்.

எனது கணவருக்கு எதிராக 12 வருட காலங்களாக சுமார் 14 வழக்குகளும்/ விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. 

இதனால் அவர் இரு தடவைகள் சிறைச்சாலைக்கும் சென்றார்.

இதனையடுத்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் எனது கணவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் எனது கணவருக்கு எதிராக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதியை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும்.

ஆனால் எனது கணவருக்கு அரசாங்க அதிகாரத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதா?

எனது கணவருக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் 5 மாத காலப்பகுதிக்குள் 2 நீதிபதிகள் மாற்றப்பட்டனர்.

எனது கணவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என பதிவிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/218222

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.