Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - சுமந்திரன்

30 MAY, 2025 | 12:40 PM

image

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது?

https://www.virakesari.lk/article/216073

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“வாங்கோ, வாங்கோ” என அழைக்கிறீர்கள்?, நம்பி வந்தால் கைது செய்வதா?; மனோ எம்.பி. கேள்வி

“வாங்கோ, வாங்கோ” என அழைக்கிறீர்கள்?, நம்பி வந்தால் கைது செய்வதா?; மனோ எம்.பி. கேள்வி

வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால் – திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக  சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து விசாரித்து ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்து பிணையில் வெளியே விடாமல் சிறையில் அடைக்கிறீர்கள்?

75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா?

வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா?  எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://thinakkural.lk/article/318567

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் அகதிமுகாமில் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை, உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது - ஜனாதிபதிக்குகனடியத் தமிழர் பேரவை கடிதம்

Published By: RAJEEBAN

02 JUN, 2025 | 12:01 PM

image

தமிழ்நாட்டின் அகதிமுகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய  நபர்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக  வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடியத் தமிழர் பேரவைதெரிவித்துள்ளது

கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்நாட்டின் அகதி முகாமில் பல வருடங்கள் வாழ்ந்த பின்னர் பலாலி விமானநிலையம் ஊடாக தாயகம் திரும்பிய 75 இலங்கை தமிழர் மே 29ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.

ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகரலாயத்தினால் அகதி என  ஏற்றுக்கொள்ளப்பட்ட, உரிய அதிகாரிகளிடமிருந்த தனது பயணத்திற்கான அனுமதி, பெற்ற செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருந்த ஒருவரையே கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக  வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது.

பலவந்தமாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை அவர்கள் தப்பிவெளியேறிய சூழ்நிலைகளுக்காக குற்றவாளியாக்க கூடாது.குறிப்பாக அவர்கள் நல்லெணத்துடன்,சட்டபூர்வமாக மீளதிரும்பும் சூழ்;நிலையில்.

தங்கள் பகுதிகளிற்கு மீளதிரும்பும் அகதிகளை கைதுசெய்வது பாதிக்கப்பட்ட நபருக்கு மாத்திரமல்ல,மீளதிரும்புவது குறித்து சிந்திக்கும் ஆயிரக்கணக்கானவர்களிற்கும் தவறான செய்தியை தெரிவித்துவிடும்.இது நம்பிக்கையின்மை,அச்சம் ஏமாற்றம் போன்றவற்றை உருவாக்கும்

தமிழ்நாட்டின் முகாம்களில் 58,000 இலங்கை தமிழ் அகதிகள் வாழ்வதையும்,40,000 பேர் முகாமிற்கு வெளியே வாழ்வதையும் நீங்கள் அறிவீர்கள்.

இவர்களில் சுமார் பத்தாயிரம் பேராவது மீளதிரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மீளத்திரும்பும் அகதிகளை இவ்வாறு தன்னிச்சையான தண்டிக்கும் விதத்தில் நடத்துவது மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்காது.

மோதல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் உட்பட நாட்டிற்கு மீள திரும்புபவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என இலங்கையின் சட்டம் தெரிவிக்கின்றதென்றால்,அவர்கள் பாதுகாப்பான கௌரவமான தடையற்ற விதத்தில் நாட்டிற்கு திரும்புவதை உறுதி செய்யவேண்டிய தார்மீக கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்குள்ளது.

நீங்கள் உடனடியான தவறை திருத்தும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என உங்களை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.கைதுசெய்யப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்,இலங்கை திரும்பும் அகதிகளை பாதுகாப்பதற்கான தெளிவான மனிதாபிமான விதிமுறைகளை உருவாக்குங்கள்.

https://www.virakesari.lk/article/216321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து 37 வருடங்களின் பின் நாடு திரும்பியவருக்கு பிணை !

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 03:59 PM

image

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில், குறித்த நபர் இன்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/216353

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 75 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பலாலியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விளக்கமறியலில்... 

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம் | Sri Lankan Refugee Arrested In Sri Lanka

பின்னர் அவர் தொடர்பான வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக அவரது உறவினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட முதியவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.

அரசியல் சூதாட்டம் 

ஆனால் தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார்.

யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம் | Sri Lankan Refugee Arrested In Sri Lanka

குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம்தான் செய்துள்ளார்.

அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே கூறினார்கள் அவரை விடுதலை செய்யலாம் என்று, ஆனால் அந்த சட்டத்தரணி அவரை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார்.

https://tamilwin.com/article/sri-lankan-refugee-arrested-in-sri-lanka-1748872059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; இவ்விவகாரத்தை அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தாதீர் - வெளிவிவகார பிரதி அமைச்சர்

02 JUN, 2025 | 04:59 PM

image

(நா.தனுஜா)

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச்சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய  75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, 'இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன்.

 எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216360

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார்.

இதிலே சுமந்திரன் எப்படி சம்பந்தப்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதிலே சுமந்திரன் எப்படி சம்பந்தப்பட்டார்.

அண்ணை, தானாகச் சென்று வாதாடி வெளில வர இருந்தவரை உள்ளுக்கை போக வைச்சிற்று அதை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அண்ணை, தானாகச் சென்று வாதாடி வெளில வர இருந்தவரை உள்ளுக்கை போக வைச்சிற்று அதை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.

4 hours ago, ஏராளன் said:

அண்ணை, தானாகச் சென்று வாதாடி வெளில வர இருந்தவரை உள்ளுக்கை போக வைச்சிற்று அதை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.

அவர் செய்யக் கூடிய ஆள் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.