Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01 JUN, 2025 | 10:57 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,  இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/216228

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் : யாழ்., முல்லைத்தீவுக்கு விஜயம்

08 JUN, 2025 | 09:39 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயமானது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச தரப்புகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் என பலதரப்பையும் சந்தித்து பொறுப்புக்கூறல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய உள்ளதுடன், உள்நாட்டு போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்திக்கவும், விஜயத்தின் இறுதியில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கு எதிராக வெளிக்கள சர்வதேச விசாரணை ஒன்றுக்கான தீர்மானமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்து கொண்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நட்பு நாடுகள் பலவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், போர் குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை கண்டறிதல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன சர்வதேசத்தின் அழுத்தங்களாக உள்ளன.

இதனை பின்னணியாக கொண்டு தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளக பொறிமுறை ஒன்றின் கீழ் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று 58 ஆவது அமர்வில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டிருந்தார்.

எனவே அரசாங்கத்தினால் ஜெனிவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆராயும் வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு செப்டம்பரில் எழுத்து மூல அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216893

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை எதிர்க்கும் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள்

08 JUN, 2025 | 10:16 AM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்னும் இரு வாரங்களில் நாட்டுக்கு வருகைதரவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ளன.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்விஜயத்தின்போது அவர் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம், கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகள் என்பவற்றைக் கண்காணிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் எனும் கரிசனையின் அடிப்படையிலேயே சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவரது வருகைக்குஎதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி உள்நாட்டு சிவில் சமூகப்பிரதிநிதிகளால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் அறிந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இதுபற்றி சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடியதாகவும், அவர்களது கருத்தைக் கேட்டறிந்ததன் பின்னர் அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதன் நியாயத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

இது இவ்வாறிருக்க, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகை தொடர்பில் எழுந்திருக்கும் எதிர்ப்புக் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சே, உயர்தானிகரின் இலங்கை விஜயமானது எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் அவர் வெளியிடவிருக்கும் அறிக்கையை எவ்விதத்திலும் மலினப்படுத்தாது எனவும், உயர்ஸ்தானிகர் அலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளுக்கு விரோதமாக செயற்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய பின்னணியில், ஏற்கனவே திட்டமிடப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் 23 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தருவார் என்பதை உறுதிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இன்னமும் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பிவைக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/216900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.உயர்ஸ்தானிகரிடம் மாகாணசபை தேர்தலுக்கான அழுத்தத்தை கோர வேண்டும்; கலாநிதி தயான்

08 JUN, 2025 | 12:26 PM

image

ஆர்.ராம்-

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ரிடத்தில் வடக்கு, கிழக்கு அரசியல், சிவில் தரப்பினர் கூட்டிணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறே வலியுறுத்த வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்திய கோரிக்கைளை முன்னெடுத்தால் ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் சுயாட்சிக்கோரிக்கைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருடைய விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தீர்மானித்திருப்பது முக்கியமானதொரு விடயமாகும். அவர் அவ்வாறு வருகை தருகின்றபோது உள்நாட்டில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவது இயல்பானது.

அவ்வாறான நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல், சிவில் பிரமுகர்கள் இந்த விடயத்தினை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதொரு விடயமாகும்.

தற்போதைய நிலையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ, பொறுப்புக்கூறல் தொடர்பாகவே எவ்விதமான கரிசனைகளையும் கொண்டிருப்பதாக வெளிப்படுத்தவில்லை.

அவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலே அதிகாரப்பகிர்வுக்கான ஆரம்பமாக இருக்கின்றது. அதனை எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாது இருக்கும் நிலையே காணப்படுகின்றது.

டில்லிக்கும், கொழும்புக்கும் இடையிலான உறவுகளால் மாகாண சபைகளுக்கான வலியுறுத்தல் பிரதமர் மோடியின் விஜயத்தில் காணமாலக்கப்பட்டுள்ளது. இது மிகப்பாரதூரமான விடயமாகும்.

ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியான தீர்வு தான் அடிப்படையாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறே கூட்டுக் கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

அதன்மூலமாகவே சுயாட்சி, அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட தமிழ் மக்களின் நீண்டகாலக்கோரிக்கைகளை நோக்கி நகரமுடியும். இதனைவிடுத்து பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்வைக்கின்றபோது தென்னிலங்கையில் மீண்டும் தேசியவாத சக்திகள் தீவிரமாக தலையெடுக்கும்.

ஆவ்விதமான சூழல் ஏற்பட்டால் அரசங்கம் சுயாட்சி என்பதை உச்சரிக்க முடியாத அளவுக்கு கடுமையாக நடந்துகோள்வதற்கு வாய்ப்புக்களே அகதிகமுள்ளன. காரணம் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் அதற்கு காரணமாகின்றன. ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வருகையை எதிர்காலத்தை மையப்படுத்தி பயன்படுத்துவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/216918

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் அளியுங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

08 JUN, 2025 | 01:37 PM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ர் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தாம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக வருகைதரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அதேவேளை நாட்டுக்கு வருகைதரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.

அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும், அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும்.

பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர். ஆனால் எமது வயோதிபம் மற்றும் உணர்வு ரீதியான சோர்வுக்கு மத்தியிலும் நாம் நீதியைக்கோரி அமைதியான முறையில் போராடிவருகின்றோம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் ஜெனீவாவுக்குச்சென்று உரையாற்றியிருப்பதுடன், எமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு விளக்கமளித்துவந்திருக்கின்றோம். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது.

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் நீங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதனை நாமறிவோம். இருப்பினும் உங்களது இவ்விஜயம் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடருக்கு மத்தியில் இடம்பெறவிருப்பதனால், அது எம்மத்தியில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

குறிப்பாக ஜெனீவாவில் உங்களைச் சந்திப்பதற்கு நாம் பல தடவைகள் முயற்சித்த போதிலும், அது சாத்தியமாகாத நிலையிலேயே இவ்விஜயம் தொடர்பான எமது கரிசனைகள் வலுப்பெற்றிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் உங்களது இலங்கை விஜயத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு இடமளிக்குமாறு கோருகின்றோம். நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, நாட்டில் இருப்பதன் ஊடாக உங்களை நேரடியாகச் சந்தித்துப் பேசமுடியும் எனக் கருதுகின்றோம்.

அவ்வாறானதொரு சந்திப்பு நாங்கள் முகங்கொடுத்துவரும் யதார்த்த சூழ்நிலையையும், எமது வலிகளையும் உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்காலுக்கான விஜயமானது மக்களின் வலிமிகு துயரம் ஏற்கப்படுவதைக் காண்பிக்கக்கூடிய வலுவான செயலாக அமைவதுடன் மாத்திரமன்றி, உண்மையை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும்.

அது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் நீதியை அடைந்துகொள்வதை நோக்கிய அர்த்தமுள்ள நடவடிக்கையாகவும் அமையும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/216927

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம் செய்வது அவசியம் : பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து

11 JUN, 2025 | 07:40 PM

image

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பதுடன் செம்மணி மனித புதைகுழு அகழ்வுபப்பணிகளையும் நேரில் பார்வையிட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடல் தொடர்பில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய கூட்டத்தொடர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழியொன்றை ஏற்படுத்தித் தரும் என நாம் நம்புகிறோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது கடற்த 9 வருட காலப் பகுதியில் உயர்ஸ்தானிகரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதுடன் அது வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்காலில் கடந்த காலத்திலும் தற்போதும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சாட்சியமளிக்கவும் உரையாடவும் முக்கிய வாய்ப்பொன்றை வழங்குவதாக உள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையால்  ஐக்கிய  நாடுகள் மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு   தாக்கல் செய்யப்பட்ட அடையாள வழக்கின்  முழுமையாக நிருபிக்கப்பட்ட ஆவணங்கள் மத்தியில்  செம்மணி  புதைகுழி மற்றும் கிரிஷாந்தி  குமாரசுவாமி படுகொலை என்பன குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கொண்டிருந்தன.

இந்த 2025 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்   இலங்கைக்கு 3 நாட்கள்  விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் பாரம்பரிய தமிழ் பிராந்தியமான  திருகோணமலைக்கு மட்டுமே  விஜயம்  செய்யவுள்ளமை பிரித்தானிய தமிழர் பேரவை அறிந்தவுடன்   அது செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவும்  அந்தப் பிராந்தியங்களில் இடம்பெற்ற  கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கலந்துரையாடவும் வலியுறுத்தி  உயர்ஸ்தானிகருக்கு கடந்த மே 27 ஆம் திகதி கடிதமொன்றை எழுதி அனுப்பி வைத்திருந்தது..

அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து  சில மீற்றர்கள் தொலைவில்   குழந்தைகளின் எலும்புக்கூடுகள்  மற்றும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக 17 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை என்பன  தொடர்பில் வோல்கர் டர்க்   செம்மணிக்கு விஜயம் செய்வதற்கும் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கும்  பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கலந்தாலோசனைகளுடன் இணைந்த நீதி மற்றும் பொறுப்புப்கூறலுக்கு உறுதிப்படுத்துவதற்கும்  நெறிமுறை ரீதியான கடப்பாட்டுக்குரியவராகிறார்.

பிரித்தானிய தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகருருடன் இதுவரை ஏற்படுத்தியிருந்த தொடர்பாடல்களைின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 திகதியிடப்பட்ட கடிதமானது ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தோல்வியானது இலங்கை மாதிரியை தம்மைப் பிணைக்கும் நீதியிலிருந்து தப்பிக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியாக்குவதுடன் இலங்கையை அதன் மோசமான மாதிரியிலிருந்து நல்ல மாதிரிக்கு மாற்றுவதற்கான அவசியத்திலிருந்து வழுவுவதாக உள்ள அதேசமயம் இது மற்றைய நாடுகள் பின்பற்றுவதற்கு ஒரு தடையாக அமைவதாக எச்சரிக்கிறது.

அத்துடன் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட மின்அஞ்சலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் தீர்மானத்துக்காக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பொதுப் பிரேரணை குறித்து அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உயர்ஸ்தானிகராலயத்தின் மந்தமான முன்னேற்றம்தொடர்பில் கவலையை வெளிப்படுத்துகிறது.

இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 10 திகதியிடப்பட்.ட கடிதமானது புதிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டு அதன் சிங்கள அடிப்படைவாதக் கொள்கைகள் சம்பந்தமாக மேற்கோள்காட்டி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு வழியமைத்துத் தர வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்துகிறது.

அதேசமயம் இந்த வருடம் மே மாதம் 27 திகதியிடப்பட்ட கடிதமானது இலங்கைக்கு இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் விஜயம் செய்ய உத்தேசித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணிக்கு விஜயம் செய்து உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று 16 வருடங்களாகியும் துன்பத்தை அனுபவித்து வரும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் காண்பதற்கும் தோண்டியெடுக்கப்படும் புதைகுழிகளை பார்வையிடவும் வேண்டிய அவசியம் உள்ளடங்கலானவை குறித்து வலியுறுத்தியுள்ளது.

உயர்ஸ்தானிகரோ அல்லது சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கம் அதனது சுத்தமான இலங்கை என்ற வேடங்களுடன் மனித உரிமைகளை மதிப்பதில் சரியான பாதையில் செல்வதாக நிலவும் பொது எண்ணக்கருவுக்கு ஈர்க்கப்படாது ஐக்கிய நாடுகள் சபையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் சாதுர்யமாக இருக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. .

மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது உள்ளக குற்றவியல் மற்றும் விசாரணை பொறிமுறை மூலம் போர் குற்றங்களாலும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்களாலும் படுகொலைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்கூறலையும் வழங்கும் என நம்பி தம்மைக் கைவிடுமா என தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஐக்கிய மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 60 ஆவது கூட்டத்தொடர் தமிழர்களுக்கான நீதி, சமாதானம் நாட்டுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் என்பவற்றைப் பெற்றுத் தரவதற்கு வழியேற்படுத்தித் தரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தற்போது உயர்ஸ்தானிகருக்கு இலங்கையின் படுகொலைத் தளங்கள், மனிதப் புதைகுழிகள், மறைந்துள்ள சித்திரவதை கூடங்கள், சட்டவிரோத தடுப்பு நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகம் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இலங்கையின் 77 வருட வரலாற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச சமூகத்தினரும் மோதல்களுக்கான வடிவங்கள் மற்றும் மூல காரணங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் என்பதையும் இலங்கையில் அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை ஸ்தாபிப்பதனூடாகவே சுழற்சிமுறையில் வன்முறை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/217211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ், திருமலை, கண்டிக்கு விஜயம் செய்வார் வோல்கர் ; வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல்

15 JUN, 2025 | 10:58 AM

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன.

இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை.

மேலும் ஆரம்பத்தில் 23 - 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/217493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும் - முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் - சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கடிதம்

Published By: RAJEEBAN

17 JUN, 2025 | 08:15 PM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்(Volker Türk) தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி மனித புதைகுழி போன்றவற்றையும் ஜேவிபி கிளர்ச்சி காலத்தைய மனித புதைகுழிகளையும் பார்வையிடவேண்டும் என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளுங்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட சர்வதேசத்தவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலிற்கு சென்று யுத்தத்தின் இறுதி அட்டுழியங்களை பார்வையிடவேண்டும் அதன் மூலம் அரசாங்கம் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்ற செய்தியை பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும், என பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் எனவும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான இலங்கையின் ஓரளவு புதிய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் புதிய வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சிறிதளவு கூட வெளிப்படுத்தவில்லை என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) அவரது இலங்கை விஜயம் குறித்து எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே இதுவரை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் பின்பற்றி வருவதாக சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகள்தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/217758

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமை ஆணையாளர் மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்; நில அபகரிப்பு குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் - மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்

Published By: RAJEEBAN

19 JUN, 2025 | 03:27 PM

image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் 12 பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

2024 தேர்தல்களின் மூலம் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்தடவை.

இலங்கையில் நடந்துவரும் ஆட்சி மாற்ற பொருளாதா நெருக்கடிகளின் விளைவுகள்கடந்தகால வன்முறைகளின் சுழற்சிமூன்று தசாப்தகால மோதல்களின் நீடித்த விளைவுகள் ஆகியவற்றுடன் நாடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

2024 அரசாங்க மாற்றம் சீர்திருத்தத்தை உறுதியளித்தது புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை மீண்டும் தூண்டியது.

ஆயினும்கூட ஏழு மாதங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிர்வாகம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கடுமையான சமூக-பொருளாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு சந்தேக நபர்களின் உரிய செயல்முறையை மீறியுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகால பிரச்சினைகள் சமூகங்களுக்கு அவர்களின் நிலங்களை அணுகுவதற்கான உரிமை, சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமை நடமாடும் சுதந்திரம் மற்றும் உயிர்வாழும் வழிமுறைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன.

CPA-prg.jpg

திசாநாயக்க அரசாங்கத்தின் கீழும் சித்திரவதை மற்றும் காவல்நிலையத்தில் மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் உண்மையான மற்றும் திறந்த உரையாடலை நடத்துங்கள் இதில் வடக்கு மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதும் அடங்கும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாகத் தடைசெய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். சட்ட சீர்திருத்தங்களுக்கான எந்தவொரு எதிர்கால முயற்சிகளும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் பரந்த ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட வேண்டும்.

பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கான தேவைகள் குறித்து முன்னிலைப்படுத்துங்கள்

பல தனிநபர்களை சமூகங்களை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தல் ஆக்கிரமிப்பு குறித்து கரிசனைகளை எழுப்புங்கள்.வடக்குகிழக்கில் நிலம் கையகப்படுத்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டு புதைகுழிகளை தோண்;டுவது ஆவணப்படுத்துவது அறிக்கையிடுவது அடையாளம் காண்பது போன்ற விடயங்களில் சர்வதேச தராதரம் பயன்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் ஆதரிப்பதற்கான ஆணையை வழங்கும் புதிய தீர்மானத்திற்கான தேவை குறித்து பேசுங்கள் - இந்த தீர்மானம் இரண்டு வருடகாலத்திற்கானதாகயிருக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தினையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அதன் திறனையும் புதுப்பிக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் பரிந்துரைக்கின்றது.

இந்த பரிந்துரைகளில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லிணக்க விவகாரங்கள் குறித்து அவசர கவனம் தேவை.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் அவரது அலுவலகமும் மேலே குறிப்பிடப்பட்ட கரிசனைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை விஜயத்தினை பயன்படுத்துவதுடன் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உட்பட உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தவேண்டும்.

https://www.virakesari.lk/article/217912

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நில அபகரிப்பிற்கு தீர்வை காணுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது வேண்டுகோள் விடுக்கவேண்டும் - மனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பிரசன்னம் அவசியம் - ஓக்லாந்து நிறுவகம்

Published By: RAJEEBAN

21 JUN, 2025 | 12:58 PM

image

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு  23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்.

பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது.

கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது.

நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக 169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும்.

அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

ஓக்லாந்து நிறுவகம் ஆவணப்படுத்தியுள்ளபோல தங்கள் நிலங்கள் காலனித்துவம் செய்யப்படுவது தொடர்வதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடுகள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர்.

வடக்குகிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன.நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள் தொல்பொருள் ஒதுக்கீடுகள், சரணாலயங்கள்,பௌத்தமயமாக்கல், போன்றவற்றின் மூலம் இதனை செய்கின்றனர்.

வடக்குகிழக்கு தொடர்ந்தும் பெரும் இராணுவமயப்படுத்தலின் கீழ் காணப்படுகின்றது இது அந்த மக்களின் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பொறுப்புக்கூறல் நீதிக்கான தமிழ்மக்களின் தடையற்ற அர்ப்பணிப்பு-இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பேண உதவியுள்ளது.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்,பொறுப்புக்கூறல் இடைவெளிக்கு முடிவை காணஅரசமைப்பு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,என டேர்க் முன்னர் விடுத்த வேண்டுகோள்களால் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம்.

ராஜபக்ச யுகம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது.

சர்வதேச சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சர்வதேச நடவடிக்கைகளை தூண்டுவதற்கு மனித உரிமை ஆணையாளரின் விஜயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59 வது அமர்வும் முக்கியமானவை.

சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும்.

இராணுவமயப்படுத்துதலை நிறுத்தவேண்டும்,களவாடிய நிலங்களை மீள கையளிக்கவேண்டும்,வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றவேண்டும் என அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.

நம்பகதன்மை மிக்க உண்மையை தெரிவிக்கும் நடைமுறை, நீதி,இழப்பீடு போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும்,தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு இது அவசியமானது.

https://www.virakesari.lk/article/218058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்

22 JUN, 2025 | 01:02 PM

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன.

முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/218129

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

24 JUN, 2025 | 11:45 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.  இந்த கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை  அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் , பொருளாதாரம் மற்றும் சமூகத்தை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தி வருவதாக பிரதமர் எடுத்துக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-24_at_10.12.03__1

WhatsApp_Image_2025-06-24_at_10.12.03.jp

WhatsApp_Image_2025-06-24_at_10.12.04__1

WhatsApp_Image_2025-06-24_at_10.12.04.jp

WhatsApp_Image_2025-06-24_at_10.12.05.jp

https://www.virakesari.lk/article/218295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் செம்மணி புதைகுழியை பார்வையிட ஏற்பாடு!

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2025 | 10:33 AM

image

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நாளை 25 ஆம் திகதி யாழுக்கான விஜயத்தின் போது அங்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவிருப்பதுடன், செம்மணி மனிதப்புதைகுழியையும் சென்று பார்வையிடவுள்ளார்.

இந்நிலையில், திங்கட்கிழமை (23) கொழும்பை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கரை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 3 தசாப்த கால யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும்  உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) இரவு நாட்டை வந்தடைந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கலாக அரச கட்டமைப்பின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

இன்றையதினம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்.

மாலை 5.30 மணிக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்ரகள், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேர் பங்கேற்கும் சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கலந்துகொள்ளவுள்ளார். 

இந்நிலையில், நாளை புதன்கிழமை (25) கண்டிக்குப் பயணம் செய்து அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடுவதுடன். அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ள வோல்கர் டேர்க், நாளைய தினமே திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி, நாளையதினம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ள உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை ஒருமித்துச் சந்திக்கவுள்ளார்.

அதுமாத்திரமின்றி அவர் யாழ். விஜயத்தின்போது அண்மையில் கழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடங்கலாக 19 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியையும் சென்று பார்வையிடவுள்ளார்.

https://www.virakesari.lk/article/218286

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் தெரிவிப்பு

24 JUN, 2025 | 02:14 PM

image

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய,  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர்,  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட  மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 

சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள். இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட  அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-06-24_at_10.12.03__1

WhatsApp_Image_2025-06-24_at_10.12.03.jp

WhatsApp_Image_2025-06-24_at_10.12.04__1

WhatsApp_Image_2025-06-24_at_10.12.04.jp

WhatsApp_Image_2025-06-24_at_10.12.05.jp

https://www.virakesari.lk/article/218295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆற சில காலம் தேவை - அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

25 JUN, 2025 | 12:19 PM

image

பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை செவ்வாய்க்கிழமை (24) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

7a13d3c8-e212-4528-afea-f15b60ea2abc.jpg

6c75c1d2-26f4-4b3b-ab44-19c827d9c3fa.jpg

22d61ec5-0315-4f57-97a1-8296c3e16189.jpg

84099f8a-f364-4c31-a123-761fece1f7d8.jpg

c9fe7c26-cad1-4c62-a143-1e97ea2ea302.jpg

508d2237-e6ea-4a46-8ec9-801abc573004.jpg

https://www.virakesari.lk/article/218408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் : ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 

25 JUN, 2025 | 12:58 PM

image

நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார்.

நீதி நிலைநாட்டப்படாமல் இருத்தலானது சமாதானத்தின் நிலைபேறான தன்மையைப் பாதிக்கும். மாறாக என்ன நேர்ந்தது என்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் பயணிக்க முடியும் என அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செவ்வாய்க்கிழமை (24) மாலை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகளே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் முன்நோக்கிப் பயணிப்பதற்குமான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் நீண்டகால உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது நிலவும் சமாதானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது அவசியம்.

உள்நாட்டு மோதல், தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட சகல உரிமைகளையும் அழுத்தங்களின்றிப் பேண வேண்டும்.

தற்போது இலங்கை தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டு பொறிகளுக்குள் சிக்கியிருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய வழிமுறைகளை இலங்கையர்கள் ஆராய வேண்டும். 

நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என்றார்.

அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் “தீர்வுகளை நோக்கிய பாதையாக மனித உரிமைகள்” எனும் தலைப்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/218420

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வோல்கர் டர்க் பாராட்டு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர்.

இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு உயர்ஸ்தானிகரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒற்றுமைக்கான அவர்களின் அபிலாஷையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய பாராளுமன்றத்தின் முற்போக்கான உள்ளடக்கிய தன்மையை எடுத்துக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் பார்வை குறைபாடுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், குறிப்பாக பல நாடுகள் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய சூழலில் சமூகங்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை அடைதல் என்பன உண்மையில் கடினமான பணியாகும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரும் வேறுபாடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்கான அடித்தளம் மனித உரிமைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதை வலியுறுத்தினார்.

சபாநாயகருடனான சந்திப்பை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரத்தியேக சந்திப்பை நடத்தினார். இதன்போது நாட்டின் சமூக - அரசியல் நிலைமை மற்றும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், இலங்கையின் மனித உரிமை நிலைமை, நல்லிணக்கச் செயன்முறை, தேவையான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கையில் நிலையான நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இந்தச் சந்திப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch), மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmcbvq60e00djqp4k6uihh7n6

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும்; தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும் - வோல்கர் டேர்க் கருத்து

Published By: VISHNU

25 JUN, 2025 | 07:49 PM

image

தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இதனை தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-06-25_at_18.52.01_bd

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் 

தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர். 

இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள்.

இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும். அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/218468

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்!

adminJune 26, 2025

UN-GOVT1.jpg?fit=1170%2C752&ssl=1

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம்.

மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையை வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன்.

அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தினேன்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் ஆணையாளர் கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் ஆணையாளர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன்.

மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

UN-GOVT2.jpg?resize=800%2C501&ssl=1UN-GOVT3.jpg?resize=800%2C382&ssl=1

https://globaltamilnews.net/2025/217347/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் : முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - ஐ.நா. உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

27 JUN, 2025 | 10:36 AM

image

(நா.தனுஜா)

செம்மணியானது கடந்தகால காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தியதாகவும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசுக்கு சவாலான விடயமாக அமையும் எனவும் தனது  விஜயத்தின் நிறைவு நாளில் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள் எனவும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவை எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் எனவும்  முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், வலியுறுத்தியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (24) நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விஜயத்தின் நிறைவு நாளான நேற்று வியாழக்கிழமை (26) மாலை ஐந்தரை மணியளவில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனது சந்திப்புகள், ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.

அதன்படி இலங்கை விஜயத்துக்கும், சகல தரப்புகளுடான சந்திப்புக்களுக்கும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், தனது இவ்விஜயம் இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரத்தையும், கையாள்வதற்கு கடினமான பிரச்சினைகளையும் புரிந்துக்கொள்வதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக மிகமோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கதைகள் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் இன்னமும் பலர் மத்தியில் ஆறாமல் இருப்பதை உணர்த்தியது என்றார். 'வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மையைக் கோருகின்றனர். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு காணாமல்போன தனது கணவனைத்தேடி இன்றளவிலும் நகரத்துக்குச் சென்றுவரும் ஒரு பெண்ணின் கதையை குறிப்பிட முடியும். இவ்விடயத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் கண்ணீர் ஒன்றுதான்' எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை தனது யாழ் விஜயத்தின்போது நினைவுக்கூரலுக்கான இடமளிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்ததுடன், அது வரவேற்கத்தக்க விடயமாகும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்வதாகவும் சமூகத்தின் முக்கிய பங்காளியான சிவில் செயற்பாட்;டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோன்று நாட்டின் சகல மக்களுக்கும் சம அங்கீகாரமளிப்போம் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனினும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது என்பது அரசுக்கு சவாலானதொரு விடயமாகவே இருக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

'பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கும், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும் உண்மைகளை வெளிப்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடனான உள்ளகப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

'உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் அடையப்பட வேண்டும்.அத்தகைய முன்னேற்றத்தின் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்' எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக இலங்கையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் சட்டவிரோதமானதே என்ற போதிலும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக விசனத்தை வெளிப்படுத்திய அவர், இதுகுறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அத்தோடு பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் உயர்ஸ்தானிகர் பாராட்டுத்தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

'கடந்த பொதுத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.அதேபோன்று தொழில் வாய்ப்புகளில் பாலின சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்திய வோல்கர் டேர்க், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றார்.

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி,வீடு, மற்றும் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'மனித உரிமைகளை மேம்படுத்துவதில் சர்வமத தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.அதன்படி மதத்தலைவர்களுடனான சந்திப்பின் போது இவ்விடயத்தில் அவர்கள் தமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும் எனவும் அது நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியழுப்புவதற்கு அவசியமென எடுத்துரைத்தேன். உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் சகஜமாகிவரும் தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையை மிளிரச்செய்வதற்கான முன்னுதாரணமாக திகழக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு உண்டு' எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/218575

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.