Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 JUN, 2025 | 11:01 AM

image

இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

gaza_ship.jpg

இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார்.

இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

gretta_gaza_1.jpg

மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம். ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம், ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gaza_ship_1.jpg

இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216420

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா மக்களின் பசி தீர்க்க உணவுப் பொருட்களுடன் விரையும் கிரெட்டா துன்பெர்க்

<iframe width="400" height="500" frameborder="0" src="https://www.bbc.com/ws/av-embeds/articles/c8e68xdkz38o/p0lgl5nc/ta"></iframe>

8 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரையும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் மற்றும் மேலும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு ஒன்றில் காஸாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

பால், பழச்சாறு, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், ப்ரோட்டின் பார் என்று உணவுப் பொருட்களை அந்த படகில் வைத்து அவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த பயணமானது ஞாயிறு அன்று சிசிலியில் துவங்கியது.

பயணம் துவங்கி, இரண்டு நாட்கள் கழித்து பேசிய அவர், இஸ்ரேலின் சாத்தியமான தாக்குதலையும் யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மனிதநேய உதவிகள் பாலத்தீனர்களிடம் சேர்வதை தடுக்கும் இஸ்ரேலியப் படையின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8e68xdkz38o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவை நோக்கி கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பலை தடுத்து நிறுத்த தயாராகின்றது இஸ்ரேலிய கடற்படை - டைம்ஸ் ஒவ் இஸ்ரேல்

Published By: RAJEEBAN

06 JUN, 2025 | 04:10 PM

image

காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் பிரீடம் புளோட்டிலா அமைப்பின் கப்பலை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும் என டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பல் இஸ்ரேலிய கடற்பரப்பினை நெருங்கினால் இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும்.

gaza_ship_13.jpg

பாலஸ்தீன சார்பு இஸ்ரேல் எதிர்ப்பு பீரிட்டம் புளோட்டிலா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மட்லீன் படகில் மோதல்கள் இடம்பெற்றால், இராஜதந்திர சமூகம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடும், பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த படகின் பயணத்தை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளன.

பிரிட்டனின் கொடியுடன் பயணிக்கும் இந்த படகில் 12 செயற்பாட்டாளர்கள் உள்ளனர் அவர்களில், பிரான்சை சேர்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசனும் உள்ளார்.

கடந்த பெப்ரவரியில் இவர் இஸ்ரேலிற்குள் நுழைய முற்பட்டவேளை இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இஸ்ரேலிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

படகின் பாதையை கண்காணித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மத்தியதரை கடலை கடப்பதற்காக சூடானின் குடியேற்றவாசிகள் பயன்படுத்தும் கடற் பாதையிலேயே இந்த படகு பயணிக்கின்றது.

இந்த படகு காசாவை நோக்கி பயணித்தால், கடற்படை அதனை தடுத்து நிறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மட்லீன் வாரஇறுதியில் காசா பள்ளத்தாக்கினை சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்லீன் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் கடல்சார் முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளோம், அரசியல் பிரிவின் வழிகாட்டுதல்களுடன் பல்வேறு சூழ்நிலைக்கும் தயாராவதாக தெரிவித்துள்ளது.

படகில் ஆறு பிரான்ஸ் பிரஜைகள் உள்ளதால் பிரான்ஸ் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் இராஜதந்திரியொருவர், படகில் உள்ள தங்களின் நாட்டவர்களிற்கு தேவைப்பட்டால் உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சனல் 12க்கு தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அதிகாரியொருவர், பிரிட்டிஸ் கொடியுடன் அந்த படகு பயணிப்பது பிரிட்டனிற்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/216788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவுக்கு கிரெட்டா துன்பர்க் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை சிறைபிடித்ததா இஸ்ரேல்?

இஸ்ரேல், காஸா, பாலஸ்தீன், நிவாரணம், கிரேட்டா தன்பர்க், இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம், FREEDOM FLOTILLA COALITION

படக்குறிப்பு, நிவாரணப் படகில் சென்றவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் உள்ள புகைப்பட்ம

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற மேட்லீன் படகில் இஸ்ரேலியப் படைகள் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உயிர்க் கவசம் அணிந்தபடியுள்ள தன்னார்வலர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.

எகிப்து கரையில் இருந்து கிளம்பிய அந்தப் படகில் காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் உள்ளார்.

"தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி வந்ததால்" படகை வழிமாறிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சிசிலியில் இருந்து புறப்பட்ட படகு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள எஃப்.எஃப்.சி, "இஸ்ரேல் தாக்குதலுக்கான சாத்தியத்திற்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது

இஸ்ரேல், காஸா, பாலஸ்தீன், நிவாரணம், கிரேட்டா தன்பர்க், இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் பயணிக்கும் செயற்பாட்டாளர்கள் குழு

படகு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேலின் முற்றுகையை மீறும் எந்த முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்திருந்தார்.

"மேடலெய்ன் படகு காஸா கரையைச் சேராமல் தடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐடிஎஃப்-ற்கு (இஸ்ரேலியப் பாதுகாப்பு படை) உத்தரவிட்டுள்ளேன்" என ஞாயிறு அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2007-ல் இருந்து அமலில் உள்ள இஸ்ரேலின் முற்றுகையின் நோக்கம் ஹமாஸிற்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுப்பதே என கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் முற்றுகை என்பது சட்டவிரோதமானது என எஃப்.எஃப்.சி வாதிடுகிறது. கட்ஸின் கருத்து, பொதுமக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக படைகளைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என எஃப்.எஃப்.சி கூறுகிறது.

"எங்களை மிரட்ட முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என எஃப்.எஃப்.சியின் ஊடக அலுவலர் ஹே ஷா வியா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், காஸா, பாலஸ்தீன், நிவாரணம், கிரேட்டா தன்பர்க், இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம்,FREEDOM FLOTILLA COALITION

படக்குறிப்பு, மேட்லீன் படகில் பயணித்த செயற்பாட்டாளர்கள்

"மேட்லீன் பொதுமக்கள் பயணிக்கும் படகு, ஆயுதம் ஏந்தாமல் உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைச் சுமந்து கொண்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காஸாவை சென்றடையும் எங்களின் முயற்சியைத் தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

மேட்லீன் படகு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதில் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன் மற்றும் துருக்கியின் குடிமக்கள் உள்ளனர்.

2010-ல், காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலான மாவி மர்மராவில் பயணித்த 10 பேரையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர்.

மூன்று மாத தரை வழி முற்றுகைக்குப் பிறகு இஸ்ரேல் குறிப்பிட்ட அளவிலான நிவாரணங்களை மட்டும் தற்போது காஸாவிற்குள் அனுமதித்து வருகிறது. அதனையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கிறது. இதற்கு நிவாரணக் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலத்தீனர்களுக்கு வாழ்வா, சாவா என்கிற வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். "ஒன்று பட்டினியால் சாகுங்கள் அல்லது கிடைக்கின்ற சொற்ப உணவைப் பெற முயற்சித்து கொல்லப்படுங்கள் என்கிற இரு கடுமையான வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் வோல்கர் துர்க்.

2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய எல்லை கடந்த தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டும் 251 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி தற்போது 20 மாதங்கள் ஆகிவிட்டது.

தற்போது வரை காஸாவில் 54,880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

"கிரேட்டா மற்றும் மற்றவர்கள் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றனர். அவர்கள் ஒரு லாரிக்கும் குறைவான நிவாரணப் பொருட்களையே எடுத்து வந்தனர், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இஸ்ரேலில் இருந்து காஸாவிற்கு 1,200 லாரிகள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளன. இதனுடன் கூடுதலாக காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 11 மில்லியன் சாப்பாடு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திங்கள் காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், "காஸா பகுதிக்கு நிவாரணங்களை வழங்க பல வழிகள் உள்ளன. அதில் இன்ஸ்டாகிராம் செல்ஃபிக்கள் அடங்காது" என்றும் அது தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ld179rv8qo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிக்க இடமளியுங்கள்; இஸ்ரேலிடம் வலியுறுத்தல்

Published By: VISHNU

09 JUN, 2025 | 07:33 PM

image

(நா.தனுஜா)

பலஸ்தீனத்தில் பதிவாகிவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் எனவும் கொழும்பில் ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலியப்படையினரால் நிறுத்தப்பட்டிருக்கும் 'மட்லீன் சுதந்திரக் கப்பல்' காஸாவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர்.

சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றியவாறு காஸாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலியப்படையினரால் அக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்கப்பல் விடுவிக்கப்பட்டு, காஸாவுக்கான அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், இஸ்ரேலின் பிடிக்குள் இருந்து காஸாவை மீட்கவேண்டும் எனவும் வலியுறுத்தி இலங்கையில் இயங்கிவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் 'பலஸ்தீன விடுதலை', 'பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கே உரியது', 'நாம் பலஸ்தீனத்துடன் உடன்நிற்கிறோம்', 'பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துங்கள்', 'ஐக்கிய நாடுகள் சபையா? அல்லது நியாயமற்ற நாடுகள் சபையா?', 'இலங்கையே, சரியான தரப்பின் பக்கம் நில்' என்பன உள்ளடங்கலாக பலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/217052

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான கப்பலை இஸ்ரேலை நோக்கி படையினர் கொண்டு செல்கின்றனர் - சர்வதேச ஊடகங்கள்

Published By: RAJEEBAN

09 JUN, 2025 | 08:45 AM

image

சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் உட்பட செயற்பாட்டாளர்கள் பலருடன் காசாவை நோக்கி மனிதாபிமான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலிற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய படையினர் அந்த கப்பலை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றனர்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது, கப்பலை பாதுகாப்பாக இஸ்ரேலிற்கு கொண்டுசெல்கின்றோம் அதில் உள்ளவர்கள் அவர்களின் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கப்பலிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னூ பிரீடம் புளோட்டிலா அமைப்பு வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் செயற்பாட்டாளர்கள் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம் எங்களைஇஸ்ரேலிய படையினர் கடத்தியுள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/216975

  • கருத்துக்கள உறவுகள்

உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை - டிரம்பிற்கு கிரெட்டா தன்பேர்க் பதிலடி

Published By: RAJEEBAN

11 JUN, 2025 | 10:34 AM

image

உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என பிரான்சில் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள கிரெட்டா தன்பேர்க் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க் கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என கற்றுக்கொடுக்கும் வகுப்புகளிற்கு செல்லவேண்டும் என தெரிவித்திருந்தமைக்கு பதில் அளிக்கையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

உலகிற்கு என்னை போன்ற  பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என நான் நினைக்கின்றேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் எங்களை சர்வதேச கடல்பரப்பில் வைத்து கடத்தியது,எங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர் என குறிப்பிட்டுள்ள தன்பேர்க் இந்த பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது எங்களிற்கு தெரியும்,காசாவிற்கு சென்று மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதே எங்களின் நோக்கம்,செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் காசா செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்  என குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே உலக நாடுகள் செய்யக்கூடிய ஆகக்குறைந்த விடயம் என கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

கிரெட்டா தன்பேர்க்கினை இஸ்ரேல் பிரான்சிற்கு செல்லும் விமானத்தின் ஊடாக அவரது நாடான சுவீடனிற்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217141

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.