Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிந்தால் கிளிநொச்சிக்கு செல்லட்டும் - கலாநிதி விக்கிரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் கிளிநொச்சிக்கு செல்லட்டும் - கலாநிதி விக்கிரமபாகு

சிங்கள,பௌத்த பேரினவாதம் கிளிநொச்சி மண்ணை மிதிக்கும் போது,வரலாற்றில் என்றும் கற்றிராத பாடத்தை அங்கே கற்றுக்கொள்ளும். தென்இலங்கை மக்களும் அன்று தான் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். பேரினவாதமும் அதன் ஊடகங்களும் கூறிவரும் பொய்களும் புரட்டுகளும் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

ஜனாதிபதி மஹிந்த கிளிநொச்சியை தவிர நாட்டின் அனைத்து பகுதிகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இறுமாப்புடன் கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது இலங்கை கடற்படை வீரர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி சர்வதேச கடல் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் யாவும் அழிக்கப்பட்ட பிரதேசம் திஸமஹராம பகுதியிலாகும்.

கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை இலங்கை கடற்படையினர் அழித்துள்ளனர்.முதலில் இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து அழிந்தனர்.தற்போது சர்வதேச கடல் பகுதிக்கு சென்று விடுதலைப்புலிகளின் கப்பல்களை தேடி அழிக்கும் நடவடிக்கைகளை செய்கின்றனர். நடக்கும் நிகழ்வுகளை பார்க்கின்றபோது எதிரிகளே வந்து தம்மை அழிக்குமாறு இவர்கள் முன்னே வந்து நிற்பதுபோல் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இவற்றை நாம் நம்பவும் வேண்டுமாம்.

இன்று அரசாங்கம் நடத்தி வரும் யுத்தத்தினால் யாருக்கு என்ன இலாபம்? வடக்கு கிழக்கு பகுதி முழுவதையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு 5 இலட்சம் இராணுவத்தினர் தேவைப்படுவார்கள். இவர்களுடன் படையினருக்கு உதவியாக பல நூற்றுக்கணக்கான பரா இராணுவக் குழுக்கள் வேண்டும்.

மேலும் ஆட்களை கடத்துவதற்குரிய கடத்தல்காரர்கள் வேண்டும் இவற்றையெல்லாம் நிறைவு செய்து கொண்டு வடக்கு கிழக்கு பகுதியை பிடித்தால் என்ன நேரும்? அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்கள் அகதி முகாம்களுக்கு செல்வார்கள் அவர்களுக்குரிய உணவு முதற்கொண்டு அனைத்தையும் செய்ய வேண்டும். இதனால் யாருக்கு லாபம்? ஆனால் இம்மக்களின் நிலங்களை அபகரித்து சர்வதேச கம்பனிகளுக்கு விற்பதன் மூலம்பெருமளவு நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் இதுதான் இன்று நடைபெறுகிறது.

இன்று தென் இலங்கையில் அரசுக்கு எதிரான நிலை மேம்படத்தொடங்கியுள்ளது. மலையகத்தில் வாழ்க்கை சுமை உயர்வால் எந்த நேரத்திலும் தோட்டத்தொழிலாளர் வீதியில் இறங்கலாம். ஏற்கனவே வடக்கு கிழக்கு மக்களின் உரிமை போராட்ட தீ சுவாலை வடக்கு கிழக்கு எங்கும் பாரிய அளவில் எரிந்து கொண்டு இருக்கிறது, எனவே அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு எந்த வேளையிலும் நாடு முழுக்க பரவுவதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு. அது வடக்கு கிழக்கா, மலையகமா, தென்இலங்கையா, எங்கிருந்து ஆரம்பிக்கப்போகிறது என்பது தான் இன்றுள்ள நிலையகும்.

இன்று உணவுப்பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர். யுத்தத்தை தொடர வேண்டும் என்று கூறுபவர்கள் யுத்த முனைக்கு செல்வதில்லை தினமும் யுத்த முனையில் இறப்பவர்கள் ஏழைகளின் பிள்ளைகளே. உயிர்களையும் பலி கொடுத்து, உண்ணவும் உணவு இல்லாமல் மக்களால் எவ்வளவு காலம் இருக்க முடியும். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உரத்து கோசமிடும் ஜே.வி.பி விடுதலைப்புலிகளை அழிக்குமாறு, அமெரிக்காவிடம் மண்டியிட்டு வேண்டுகோள் விடுக்கிறது.

-சமதர்மம் - ஐப்பசி 2007

கடந்த 28ம் திகதி 'இருதின' சிங்களப் பத்திரிகையில் வெளிவந்த புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகுவின் பேட்டியில், இன்றைய சுடர் ஒளியில் வெளிவந்த தமிழாக்கத்தின் ஒரு பகுதி :

யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது

கேள்வி : கிழச்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கபட்டு வடபகுதி மீது அரச படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தம்மைத் தயார்படுத்தி வந்த நிலையில் தென்பகுதியில் யால மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டு முடித்துள்ளனர். இது குறித்த தங்கள் கருத்து என்ன?

பதில் : இன்னமும் மூன்று மாத காலத்தில் எம்மால் வடபகுதிக்கு - நாகதீபத்துக்கு சுதந்திரமாக, அச்சமின்றி போய் வரக்கூடிய நிலைமை தம்மால் உருவாக்கப்படுமென ஜனாதிபதி எமக்குக் கூறியிருந்தார். தடை செய்யப்பட்ட பிரதேசமென எதுவும் கிடையாதெனவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இப் பேச்சை நம்பி பொதுமக்கள் ஏமாந்தனர். ஆனால், நாம் இவ்விதம் யுத்தத்தின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாது எனத் தெரிவித்தோம்.

இவ்விடயத்தில் தமிழ் மக்களின் துயரங்களின் மத்தியிலும் எழுச்சி உணர்வே மேலோங்கியுள்ளதாக நாம் சுட்டிக்காட்டினோம். விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை நியாயாப்படுத்த நாம் முயலவில்லை. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் எழுச்சி நிலவுவதால் அவர்களது பிரச்சினைக்குத் தீர்வொன்று எட்டப்படாமல் இந் நாட்டில் சமாதானத்தை உருவாக்க இயலாது என நாம் தெரிவித்தோம். ஆனால் அரசு யுத்த ரீதியிலே வெற்றியீட்ட இயலுமென்பதில் உறுதி காட்டி வந்தது.

ஆனால், சிங்களவர்ளின் பாரம்பரிய பூமியான அனுராதபுரத்துக்குச் செல்லவே நாம் இன்று அச்சப்பட வேண்டி நேர்ந்துள்ளது. அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் கூட அச்சத்துடனேயே வாழ வேண்டி நேர்ந்துள்ளது. அத்தகைய குழப்பமான நிலையை உருவாக்கி வைத்தது இந்த அரரே. இத்தகைய விதமான அணுகு முறை மூலம் சிக்கல்களினின்று விடுபட இயலாது என நாம் தெரிவித்தோம். இதனை நான் மட்டும்

கூறவில்லை. அண்மையில் அரசு ஆலோசனை பெறுவதற்காக இங்கு வரவழைத்த சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் கூட இந் நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பாக அரசியல் சீதியரிலான முயற்சியேயன்றி இராணுவ ரீதியிலான முயற்சி மூலம் தீர்வுகாண இயலானத் தெரிவித்துள்ளார். எனக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லையென்பதால் என்னுடைய கருத்து பெறுமதியற்ற தென அரச தரப்பினர் கூறக்கூடும். ஆனால், அண்மையில் இங்கு வந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் மேற்குலக நாடுகள் மத்தியில் பிரபல்யம் பெற்றதொரு பிரமுகராவர். அந்த வகையில் அவரது கருத்துக்கு அரசால் எவ்வித பதிலும் அளிக்க முடியவில்லை. எனவே குறிப்பிட்ட அந்த நிபுணருக்கு இந்நாட்டின் பிரச்சினை குறித்து எதுவுமே சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையென அவரது கருத்தை

விமர்சிக்க ஆரம்பிததுள்ளனர். ஆகவே புரிந்துணர்வற்ற இத்தகைய தரப்பினருக்கு யதார்த்தத்தைப் புரியவைக்க இயலாது.

அண்மைய தாக்குதல்களினால அரசின் சாயம் வெளுத்து விட்டது :

கேள்வி : விடுதலைப் புலிகளின அண்மைய அனுராதபுதத் தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறித்து அரச தரப்பினர் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றர். அது குறித்து விமர்சிப்பது அல்லது கருத்து வெளியிடுவது இனத்துரோகச் செயற்பாடென கொள்த்தக்கதென அமைச்சரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார். உண்மையில் இன்று அரசியல் அரங்கில் என்னதான் நடக்கின்றது?

பதில் : உண்மையில் எல்லாமே முற்றுமுழுதான இனத்துரோக நடவடிக்கைகளே. சிங்கள இனத்தவரை மூடர்களாக்கும் இந்த அரசின் செயற்பாடுகளும் இனத்துரோகச் செயற்பாடுகளே. அந்த வகையில் இதுவரையில் இது போன்ற இனத்துரோக அரசொன்று இந்நாட்டில் பதவி வகித்ததில்லை. அந்த அளவுக்கு பொய்புரட்டு, ஏமாற்றுகள், மோசடிகளை மேற்கொண்டு இந்த அரசு சிங்கள இனத்தைப் பலவீன நிலைக்கு உட்படுத்தியுள்ளது. சிங்கள இனத்தை உலகத்தின் கேலிக்கும் ஏளனத்துக்கும் உள்ளாக்கியுள்ளது, விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்களின் காரணமாக இந்த அரசின் சாயம் வெளுத்துப் போயுள்ளது. இந்த அரசின் இதுவரை கால பொய்ப் பிரசாரங்கள் யாவும் அண்மைய விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்

மூலம் வெடித்துச் சிதறியுள்ளது. குறிபபிட்ட தாக்குதலில் நாசப்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் எவ்வித பலனும் இல்லை. அரசு இதுவரை காலமும் முன்னெடுத்து வந்த பொய்ப் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி : யுத்தம் குறித்து விமர்சிப்பது இனத்துரோக நடவடிக்கையென்பது அரசின் நிலைப்பாடல்லவா?

பதில் : ஆம், யுத்த முனைப்பபைத் தூண்டுவதென்பதும் இனத்துரோகமாகக் கொள்ளப்படத்தக்கது. அந்த வகையில் அரசதரப்பைச் சேர்ந்த பலரது நிலைப்பாடு இனத்துரோமெனக் கொள்ளபடத்தக்கதே.

கேள்வி : யுத்த நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பது இனத்துரோக நடவடிக்கையாக கொள்ளத்தக்கதென அரசு கருத்து வெளியிட்டு வருகிறதல்லவா?

பதில் : அரசு யுத்த முனைப்பின் ஊடாக இந் நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்துள்ள நஷ்டங்களுக்காகப் பதில் கூறி ஆக வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி : யுத்தம் குறித்து விமர்சிக்கும் ஊடகங்களை துரோகிகளென அரசு வர்ணிக்கின்றது. ஆனால், நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பது குறித்து தெரிந்து கொள்வது பொதுமக்களுக்குரிய உரிமையால்லவா?

பதில் : இன்று பெரும்பாலான பத்திரிகைகள் நாட்டின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதில்லை அதற்குப் பதிலாகப் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன. ஆனால் நாம் யாதார்த்தத்தை தெளிவுபடுத்தி வருகிறோம். யுத்தத்தின் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு என்ற கோட்பாடு கடைப்பிக்கப்பட ஆரம்பித்த பின்னர் எம்மைப் போன்றோரின் கருத்துகள் கோரப்படுவதுமிலல்லை. அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதுமில்லை. அதற்குப் பதிலாக எம்மை மூடர்கள் தரப்பாக அடையாளப்படுத்தி வந்தனர். இதனாலேயே நாம் மௌனம் காத்து வந்தோம். தற்போது நிலைமையில் திருப்பங்கள் ஏற்படும் போது எமது கருத்தும் கோரப்படுகிறது.

அந்த வகையில் உண்மையான யதார்த்த நிலையை வெளிப்படுத்த ஆர்வம் காட்டடாத ஊடகங்களே துரோகத்தனமாகச் செயற்படுவதாக நான் கருதுகிறேன்.

21 தமிழ்ப் போராளிகள் செய்தது நிலைப்பாட்டுக்கான உயிர்த் தியாகமே

கேள்வி : இலங்கையில மனித உரிமைகள் தொடர்பான வாத விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளனவே, அண்மையில் கூட அமெரிக்கா இவ்விடயம் குறித்து மீண்டுமொரு முறை ஆலோசிக்குமாறு கூறியுள்ளது. இது குறித்து தாங்களது கருத்தென்ன?

பதில் : அவ்விதம் அலுவலகமொன்றைத் திறப்பது சிறப்பாய் அமையும். ஆனால் இவையாவற்றையும் விட இந்நாட்டில் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டியது மிகமிக அவசியமானதொன்றாகும். அதன் மூலம் மனிதப்படுகொலைகள், உடைமைகள் சேதம் மற்றும் நிதி வீண்விரயம் இவையாவும் நிறுத்தப்படல் அவசியமானதொன்றாகும். யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை முயற்சிகளில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. அத்தகைய நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரச்சினைகள் உருவகாதல்லாவா? அந்த வகையில்

உடனடியாவே யுத்தம் நிறுத்தப்பட்டு புதிய சமாதான உடன்படிக்ககையொன்றின் ஊடாக நாட்டின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முயல வேண்டியுள்ளது.

கேள்வி: யுத்தம் இடம் பெறும் நாடோன்றினல் மனித உரிமை மீறல்கள் இடம் பெறாது பாதுகாப்பது சிரமமானதொரு செயற்பாடென அரசு தெரிவிக்கிறதே? இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில் : யுத்தம் இடம் பெறும் நாடொன்றில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறாது பாதுகாப்பது சிரமமானதொன்றாக தருதக் கூடும். ஆனால் யுத்தம் இடம் பெறாத கொழும்பு போன்ற இடங்களில் ஆட்கடத்தல்கள் இடம் பெறுகின்றனவே? இவையெல்லாம் எவ்வாறு நியாயப்படுத்தப்பட இயலும்? சில நாட்களின் முன் இடம் பெற்ற அநுராதபுரத் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்கள் உடபட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் உடல்களை நிர்வாணமாக பொதுமக்கனின் பார்வைக்கு அரசு அனுமதித்தாக நாம் கேள்விப்பட நேர்ந்தது.

1988 - 1989 கால கட்டத்தில் இந் நாட்டில் எத்தனையோ இளைஞாகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களது சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டன. அத்தகைய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் அந்த வேளையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். ஜே.வி.பி. தலைவர் விஜேவீர படுகொலை செய்யப்பட்டார். அதற்கெதிராக குரலெழுப்பிய எம்முடன், அந்த வேளையில் மஹிந்த இணைந்து செயற்பட்டார். மனிதத்தன்மை மனிதபிமானம் குறித்தெல்லாம் அந் வேளையில் அரசைக் குற்றம் சாட்டி மஹிந்த குரலெழுப்பி வந்தார். ஆனால் இன்று என்ன நடைபெற்றுள்ளது? அவரது தலைமையினாலான அரசின் கீழ் தமிழ்ப் போராளிகள் 21 பேர் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் நிர்வாணமாக பொதுமக்கள்

காணத்தக்க வகையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்கள் நாச வேலைகளை, படுகொலைகளை மேற்கொள்வதற்கு வந்தவர்ளே என எம்மால குற்றம் சாட்ட முடியும். அவர்களும் நிலைப்பாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யவென வந்தவர்களே. குற்றவாளிகளானாலும் அவர்களும் மனிதர்களே. எந்த ஒரு நாடும் இவ்விதம் உயிரிழந்தோர் சடலங்களுக்கு அவமரியாதை செய்வதில்லை. அந்த வகையில் அது தவறானதொரு நடவடிக்கையே.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.