Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா?

அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார்.

குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச்
சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்;
நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா!

[மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்]

மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும்.

[1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை!

அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர்.

பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.

ஆண்-பெண் கலவி கூடாது.
புல்லைக் கூட திருடக் கூடாது.
உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.

இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்?

எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும்.

‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார்.

[எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?]

Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange.

Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 80 B தொடரும் / Will follow

துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?

  • Replies 103
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B

பூகம்பம் மகிந்த தேரரின் செயல்களால் பல முறை ஏற்படுகிறது, குறைந்தது ஒன்பது முறை பூகம்பம் இலங்கையில்? நடைபெற்றுள்ளது . அந்தக் காலத்து எந்தக் கொத்து கட்டிடங்களும் [கற்கட்டிடமும்] , இலங்கையில் மட்டுமல்ல, அருகிலுள்ள தென்னிந்தியாவிலும், இவ்வளவு நிலநடுக்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்பட்டால், தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல இலங்கையும் தென்னிந்தியாவும் பூகம்பத்திற்கு ஆளாகும் பகுதிகளும் அல்ல. இந்த அத்தியாயத்தில் நான்கு முன்னாள் புத்தர்களின் கதைகளும் உள்ளன, அவற்றை நிதானமான வரலாறாகக் கருத முடியாது. மேலும் துட்டகாமினி [Duttagamini] ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தூபியை [Thupa] கட்டுவார் என்று புத்தர் தீர்க்கதரிசனம் கூறினார் என்றும் உள்ளது. அதிகாரம் 15 - 164 முதல் 172 வரை பார்க்கவும்.

"அப்போது இலங்கைத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, ஆதலால், இத் தீவில் வசித்த தேவர்களுக்கும், நாகர்களுக்கும் உபதேசம் செய்துவிட்டு, ஆகாய மார்க்கமாக பிக்குகளுடன் ஜம்புத்வீபத்துக்குத் திரும்பி வந்தார். [மனிதர்கள் அல்லாத தேவர்கள் மற்றும் நாகர்கள் இலங்கையில் ஏன் வாழ்ந்தார்கள்?, அவர்களுக்கு ஏன் உபதேசம்?? ஏனென்றால் புத்தரின் போதனைகள் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டது]* அரசனே! இவ்வாறாக இந்த இடம் நான்கு புத்தர்களால் விஜயம் செய்யப்பட்டது. பேரரசனே! இந்த இடத்திலே புத்தருடைய உடல் தாதுவை வைத்த தூபம் இருக்க வேண்டும். அது நூற்றி இருபது முழம் உயர முள்ளதாகவும் இருக்கும். 'ஹேம மாலி' என்ற பெயர் அது பெறும்." நானே அதைக் கட்டுகிறேன்" என்று அரசன் கூறினன். அரசே! நீ இங்கு ஆற்ற வேண்டிய கடமைகள் வேறு பல உள்ளன. அவற்றை நிறை வேற்றுவாயாக! ஆனால் உன் வழி வந்த ஒருவன் இந்த தூபியைக் கட்டுவான். உன்னுடைய சகோதரனும், உபராஜனுமான மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயக தீசன் என்பவன் இனிமேல் அரசன் ஆவான். அவனுடைய மகன் கோத அபயன் அடுத்து அரசனுக வருவான். அவனுடைய மகன் காகவன தீசன் எனப்படுவான். ‘இவனுடைய மகன் அபயன் என்பவன் துட்ட காமனி என்ற பெயரால் புகழ்பெற்று விளங்குவான். அவன், தன்னுடைய அதிசய சக்தியினால் இங்கு தூபியைக் கட்டுவான்." என்று கூறுகிறது.

பாளி மொழியில் "துட்ட" (Dutta) என்ற சொல்லுக்கு "தீட்டுப்படுத்தப்பட்ட" அல்லது "துன்மார்க்கன்" என்று பொருள், "காம்னி" (Gamini / காமினி) என்றால் "தலைவர்" அல்லது "போர்வீரன்" என்று பொருள். இப்ப என் கேள்வி, புத்தர் முதலில், நாடுகடத்தப்பட்ட , தீய செயல்களின் வடிவமான விஜயனை தேர்ந்தெடுத்தார். அவன் தானும் புத்த மதத்தில் இணையாமல் மற்றும் எங்கும் பரப்பாமல் , தன் ஆட்சியைத் தொடர பிள்ளைகளும் இல்லாமல் போய்விட்டான். இப்ப இதே புத்தர் மீண்டும் துன்மார்க்க போர்வீரன் ஒருவனைத்தான் தேர்ந்து எடுக்கிறார்? அது ஏன் ? புத்தருக்கு அவர்களைத்தான் பிடிக்குமா?

துட்ட காமனியின் அத்தியாயம் புத்தரின் வாயிலிருந்து வருவதாக இங்கு கற்பனை செய்யப்படுவதை வெளிப்படையாக அறிகிறோம். புத்தரால் கூறப்பட்டாலும் கூட, யாராலும் கூறப்படும் எந்தவொரு தீர்க்கதரிசனமும், எதோ ஒரு சந்தேகத்திற்குரிய நோக்கத்துடன் தான் பொதுவாக இருக்கும். இந்த அத்தியாயத்தில் பல மாயாஜால நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 'ஒரு மாங்காய் விதை உடனே வளர்ந்து உடனடியாக பழங்களைத் தரும் ஒரு உயரமான மரமாகிறது', 15 – 41 முதல் 43 வரை பார்க்கவும்.

தேரர் அமர்ந்ததும் அரசன் மாங்கனியை அவருக்கு அளித்தான். தேரர் மாம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை அரசனிடம் கொடுத்து அதை நடச் சொன்னார். தன் கையாலேயே அரசன் அதை அங்கு நட் டான். அது வளர்வதற்காக அந்த இடத்தில் தேரர் தம் கையைக் கழுவினர். அதே விடிையில் கொட்டையிலிருந்து முளை வெளிப்பட்டு செடி முளைத்தது. கொஞ்சங் கொஞ்சமாக அது வளர்ந்து, இலைகளும் கனிகளும் நிரம்பிய பெரிய மரமாயிற்று என்கிறது இந்தப் பந்தி.

திவலா (Tivala , கிமு 3 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்), திவரா என்றும் குறிப்பிடப்படுகிறார், மௌரியப் பேரரசர் அசோகரின் இரண்டாவது ராணி கருவாகியின் [Karuvaki] மகன். கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட அசோகரின் ஒரே மகன் இவர் தான். இவர் அவரது தாயாருடன், ராணி அரசாணை [Minor Pillar Edict III of Ashokan edicts, known as the Queen Edict.] என்று அழைக்கப்படும் அசோகரின் ஆணைகளின் மூன்றாம் சிறு தூண் அரசாணையில் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். வேறு எந்த மகன்களோ அல்லது மகள்களோ எந்த கல்வெட்டுகளிலும் / அவரது ஆணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. இங்கே அசோகர் ராணியின் பரிசுகளுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார். அலகாபாத் தூணில் [Allahabad pillar] இது காணப்படுகிறது.

"கடவுள்களின் அன்புக்குரியவரின் உத்தரவின் பேரில், இரண்டாவது ராணியின் பரிசு எதுவாக இருந்தாலும், அது ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தொண்டு வழங்கும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவாலாவின் தாயார், கருவாகியின் புகழுக்குக் கணக்கிடப்பட வேண்டும் என்று எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்." என்று பதியப்பட்டுள்ளது.

ஆனால் புத்த மதத்தை இலங்கையில் நிலைநிறுத்த, பல நூறு தேரர்களுடன் பறந்து இலங்கைக்கு வந்த பெருமைமிக்க மகிந்தவோ, போதி மர கிளையுடன் வந்த பிக்குணி சங்கமித்தவோ, இவர்களின் தாயுமான தேவியோ, கல்வெட்டில் மட்டும் அல்ல, எந்த இந்தியா வரலாற்று குறிப்பிலும் இல்லை. அப்படி என்றால், அசோகன் இவர்களை , இவர்களின் பெருமையை மறந்துவிட்டானா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா, கவனத்தில் எடுப்பதற்கு?

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 81 தொடரும் / Will follow

துளி/DROP: 1973 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B

https://www.facebook.com/groups/978753388866632/posts/33133175609664326/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 81 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அத்தியாயம் 16 [சேதிய பர்வத விகாரை / Cetiyapabbata Vihara]: இது தேவநம்பிய தீசன் மன்னருக்கும் மகிந்தருக்கும் இடையிலான சில கட்டிட வேலைகள் பற்றிய நம்பிக்கை மற்றும் உரையாடலைப் பற்றியது. எனினும் இது இலங்கையில் நடந்த எந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. 16 - 6 இல் கூறப்பட்டுள்ள 'நாக சதுக்கத் தடாகம் [Nagacatukka-tank , தமிழ்ப் பெயரான 'நாகசதுக்க குளம்' [நாகசாதுக்க(ள்) / ‘Nagacathukka Tank’] இன் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். இது இன்றைய நாச்சதூவ குளம் [Nachchaduwa Tank or Nachchaduwa wewa] ஆக இருக்கலாம்? இது மகாதரகல நீர்த்தேக்கம் [Mahadaragala Reservoir] என்றும் அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் தம்மண்ணகுலமா [Thammannakulama] அருகே உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இந்த குளம் மகாசேன மன்னரால் (277 - 304) கட்டப்பட்ட பதினாறு பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. மேலும் மன்னனின் மருமகனுக்கு ஐம்பத்தைந்து சகோதரர்கள் இருந்தனர்; இது மிகப் பெரிய எண்ணிக்கையாக இருக்கிறது! 16 - 5 முதல் 7 வரை பார்க்கவும்.

தேரர் அங்கு போய் விட்டார் என்பதை அரசன் அறிந்ததும், தேரில் ஏறிக்கொண்டு, தன் இரு ராணிகளும் உடன் வர, வேகமாக தேரரைப் பின் தொடர்ந்து சென்றான். நாக சதுக்கத் தடாகத்தில் குளித்ததும், தேரர்கள் மலைமேல் ஏறுவதற்கு உரிய வரிசைப்படி நின்றர்கள் என்று இந்தப் பந்தி கூறுகிறது.

அத்தியாயம் 17 [அஸ்தி வருகை]: இது நினைவுச்சின்னம், புத்தரின் வலது கழுத்து எலும்பு மற்றும் தூபாராமயவில் (Thuparamaya, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும்.) அதை நிறுவுதல் ஆகியவற்றினைப் பற்றியது. மகிந்த தேரர் இலங்கையில் தொடர்ந்து தங்குவதற்காக புத்தரின் நினைவுச்சின்னத்தை வழிபட விரும்பினார். மன்னர் தேவநம்பிய தீசன் தான் நினைவுச்சின்னத்தை வைக்க ஒரு தாது கோபுரம் அல்லது தூபி (stupa) கட்டுவதாகவும், அதேநேரம், மகிந்த தேரர் பகவான் புத்தரின் ஒரு நினைவுச் சின்னத்தைக் கண்டு பிடிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார். மகிந்த, சங்கமித்தாவின் மகன் சுமனனிடம் தனது தாத்தா அசோகரிடம் சென்று ஒரு நினைவுச்சின்னத்தையும், பகவான் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும், பெற்று வருமாறு கேட்டுக் கொண்டார். என்றாலும் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும் மற்றும் புத்தரின் தாதுவையும் அல்லது நினைவுச்சின்னத்தையும் மன்னர் அசோகர் எவ்வாறு கைப்பற்றினார் என்பது ஒரு மர்மமாகும்?

கௌதம புத்தரின் சொந்த ஊர் இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினி ஆகும். மன்னர் அசோகரின் சொந்த ஊர் இந்தியாவின் பீகாரில் உள்ள பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா). லும்பினிக்கும் பாட்னாவுக்கும் இடையிலான தோராயமான தூரம் நேர்கோட்டில் சுமார் 350–400 கிமீ (220–250 மைல்கள்) ஆகும். அத்துடன் இருவரின் வாழ்வுக்கும் இடையில் உள்ள காலம் அண்ணளவாக 230 ஆண்டுகள் என்றும் கூறலாம். எனவே புத்தரின் தாதுவை திருப்பி தோண்டி எடுக்க, தூரத்தினதும், காலத்தினதும் இடைவெளியையும் மற்றும் இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் நினைவில் வைத்து அலசவேண்டும் என்று எண்ணுகிறேன்.

எது எப்படியாகினும் இலங்கை நாளாகமம்கள் [chronicals], தோண்டி எடுத்த தாதுக்களை 84000 ஆக பிரித்ததாகவும், அதேவேளை இந்தியா மகாபரிநிர்வாண சூத்திரம் [Mahāparinibbāna Sutta / "புத்தரின் இறுதி நாட்கள்"], புத்தரின் உடல் தகனத்திற்குப் பிறகு, துரோணர் என்ற பிராமணர் புத்தரின் தாதுக்களை எட்டு பகுதிகளாகப் பிரித்தார் என்றும், அவற்றை வெவ்வேறு குழுக்கள் தூபிகளைக் கட்ட எடுத்துச் சென்றதாகவும் கூறுகிறது. அதேமாதிரி அவதான இலக்கியமும் [Avadāna Literature / "புத்த கதைகள்"] புத்தரின் தாதுவையும் மற்றும் தூபிகளையும் குறிப்பிடுகின்றன.

மற்றும் அசோகாவதானம் (Aśokāvadāna) & திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") ஆகிய இரு நூல்களிலும் அசோகர் மூல தூபிகளைத் திறந்து, நினைவுச் சின்னங்களைச் சேகரித்து, தனது பேரரசு முழுவதும் அவற்றை மறுபகிர்வு செய்து, பல தூபிகளைக் கட்டினார் என்று மட்டும் கூறுகிறது. அவ்வளவு தான்! எவ்வளவு என்றே குறிப்பிடவே இல்லை. மேலும் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள் மூலப் பிரிவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நினைவுச்சின்னங்களை மறுபகிர்வு செய்வதில் அவரது விரிவான பங்கு பிற்கால நூல்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

அசோகர் ஏற்கனவே கட்டிய எண்பத்து நான்காயிரம் மடங்களில் நினைவுச் சின்னங்களை புதைத்து இருந்தாலும், மன்னர் அசோகர், எப்படியோ, அன்னதான கிண்ணத்தையும் நினைவுச் சின்னங்களால் நிரப்பினார். பின்னர் சுமனன் கடவுள்களின் நகரத்திற்குச் [city of gods / அது எங்கே இருக்குது, எப்படி பயணித்தார் என்பதை மட்டும் கேட்கவேண்டாம்?] சென்று புத்தரின் வலது தோள் எலும்பைக் கொண்ட நினைவுச்சின்னத்தைப் பெற்றார் [புத்தரின் எரிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் எலும்பு துண்டுகளில், வலது தோள் எலும்பு, புதைக்கப்படாமல் அல்லது புதைத்து தூபி கட்டியபின் எப்படியோ அங்கிருந்து அகன்று கடவுளின் நகரத்திற்கு போய்விட்டது?, அதை எப்படியோ சுமனன் அறிந்து அங்கு சென்று பெற்றார்?]

சுமனன் இலங்கைக்குத் திரும்பி [எப்படி சென்று வந்தார் என்று கேட்கவேண்டாம்?], அந்த நினைவுச் சின்னத்தை மகிந்த தேரரிடம் ஒப்படைத்தார். பின்னர் பல அற்புதங்களும் அற்புதமான நிகழ்வுகளும் நடந்தன, மேலும் இந்த நினைவுச் சின்னம் தூபாராமயத்தில் (Thuparamaya) நிறுவப்பட்டது. நடந்த அனைத்து அற்புத மற்றும் மாயாஜால நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகள் அல்ல. கடவுள்களின் நகரம் எது? கடவுள்களின் ராஜாவான சக்காவை சுமனன் எப்படி சந்தித்தான்? பதில் இல்லாத பல கேள்விகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. முடிந்தால் பதிலைத் தேடுங்கள்?

Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 16: This is also about the faith and the discourse between the King Devanampiya Tissa and Mahinda, about some building works. This is not about any real historical events that took place in Lanka. The Nagacatukka Tank, 16-6, must be one form of the Tamil name ‘Nagacathukka Tank’. This may the present day Nachchaduwa Tank. King’s nephew had fifty-five brothers; quite a large number! The king built sixty-eight rock cells. Rock cells shall remain even now, if they were really built.

Chapter 17: This is about the arrival of the Relic, the right collar bone, and its installation in the Thuparama. Mahinda Thera wanted a relic of Buddha to worship for his continual stay in Lanka. The King Devanampiya Tissa promised to build a ‘Thupa’ to house the relic, and Mahinda Thera to find a relic of Lord Buddha. Mahinda requested Sumana, son of Samghamitta, to go to his grandfather, the King Asoka, to obtain a relic and the alms bowl used by the Lord Buddha. It is a mystery how the King Asoka came into possession of the relic and the alms-bowl used by the Buddha. Asoka already enshrined relics in the eighty four thousand monasteries he already built! The King Asoka filled the alms bowl with relics and then Sumana went to the city of gods and obtained the right Collarbone relic of the Buddha from Sakka, the king of gods. Sumana returned to Lanka, and handed the relic to Mahinda Thera. Then there were many miracles, marvellous happenings, and the relic was installed in the Thuparama.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 82 தொடரும் / Will follow

துளி/DROP: 1975 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81

https://www.facebook.com/groups/978753388866632/posts/33143830141932206/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 82 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர் துறவியாக மாற முடிவு செய்தபோது, அனோமா நதிக்கரையில் வெட்டப்பட்ட புத்தரின் தலைமுடியைப் பயன்படுத்தி, தேவர்களின் மன்னரான சக்காவால், ஒரு வான தூபி 'Culamani-cetiya' கட்டப்பட்டது. இதை சூளாமணி கோபுரம் [அல்லது சூளாமணி சைத்தியம்] என்று தமிழில் கூறலாம்? மேலும் புத்தர் காலமான பிறகு, டோனா என்ற மனிதன், புத்தரின் வலது கழுத்து எலும்பை தனது தலைப்பாகையில் மறைக்க முயன்றார், ஆனால் சக்கா அதை அவரிடமிருந்து எடுத்து, சேதியத்தில் [வான் தூபியில்] அதையும் சேர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்த வலது கழுத்து எலும்பு நினைவுச் சின்னத்தை, கடவுள் நகரத்தில் உள்ள இந்த வான் Culamani-cetiya த்திலிருந்து பெறப்பட்டது என்று [ஒரு கருத்துக்கு] கொள்ளலாம்.

In Dravidian and Indo-Aryan phonetics, we often see shifts where:

"ḷ" (ள) and "d" (ட) get interchanged over time.
Retroflex sounds like "ḷ" are replaced with dentals like "d" in Sanskritization (and vice versa).
Tamil and Pali usage often differ from Sanskrit, leading to variations in pronunciation and writing.

For example:

Chuda (சுட) vs. Cūḷā (சூளா) → Phonetic shift from "d" (ட) → "ḷ" (ள) is possible.
Mani (மணி) remains unchanged.

So, Chudamani (சுடாமணி) → Cūḷāmaṇī (சூளாமணி) is phonetically feasible, especially in Buddhist contexts.

ஆகவே மேலே கூறியதையும் மற்றும் ஓலைச் சுவடிகள் 100 - 150 ஆண்டுகளுக்கிடையில் திருப்பி எழுதி புதிப்பிப்பதையும் கருத்தில் கொண்டால், மிக இலகுவாக ஒரு சாத்தியத்தை கூறலாம் என்று எண்ணுகிறேன்.

ஒலிப்பு ரீதியாக, l (எல்) மற்றும் 'd' ஆகியவை காலப்போக்கில் அல்லது மொழிகளுக்கு இடையேயான படியெடுத்தலின் போது ஒன்றுக் கொன்று மாற்றப்படுகின்றன. எனவே இந்த Chulamani Chedi, a celestial stupa, தமிழில் 'சூடாமணி' ஆக இருக்கலாம்?

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை ஒன்று இருந்தது. இது 1006 CE இல் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் புகழ் பெற்ற மன்னனின் மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான். இது ஜேசுட் பாதிரியாரால் [Jesuits priest] 1867 க்கு பிறகு இடிக்கப்பட்டது என்பது வரலாறு.

மீண்டும் 17 ஆம் அத்தியாயத்திற்கு வரும்போது, அசோகன் இறந்தவுடன், உடனேயே சுமனன் அங்கே சென்று விட்டான் என்று கூறுகிறது. இது தெய்வீக சக்தியைக் குறிக்கிறது, அது வரலாறு அல்ல, இறையியல் ஆகும்.

மேலும், இதில் இருந்து நாம் அறிவது அல்லது ஊகிப்பது, மகிந்த, சுமனா, சங்கமித்தா ஆகியோர் உண்மையான நபர்கள் அல்ல. கடவுளின் நகரத்திற்குச் செல்லும் உடனடிப் பயணங்களும் உண்மையான நிகழ்வுகள் அல்ல. மேலும், புத்த நாடுகளில் புத்தரின் அனைத்து தாதுக்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது புத்தர் உயிருடன் இருந்தபோது இருந்ததை விட கட்டாயம் அதிகமாக இருக்கலாம், அதுவும் எரிந்து காற்றுடன் கலந்ததையும் விட. [If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive.]

அத்தியாயம் 18 [மகாபோதி விருட்சத்தை பெறுதல்]: இது போதி மரத்தின் கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வது பற்றியது. இராணி அனுலா மற்றும் அவரது ஐநூறு பெண்களுக்கும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] செய்ய சங்கமித்தாவை அழைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. 15- 19 இல் இருந்து 22 வரை பார்க்கவும்.

‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்புகிறுேம் என்று ராணி அனுலா தன்னுடன் வந்த ஐநூறு பெண்களுடன் அரசனிடம் கூறினாள். உடனே,
‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண்டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடையாது' என்று தேரர் பதிலளித்தார். பாடலிபுத்ரத்தில் [Pataliputta] என்னுடைய தங்கை சங்கமித்தா என்ற பெயருடைய தேரி இருக்கிறாள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் [ஏன் தென்பகுதி கிளை?] அவள் இங்கே வருவாள் என்று இந்த பந்தி கூறுகிறது.

மன்னன் தேவநம்பிய தீசன் தனது மருமகனும், அவரது அமைச்சருமான அரிதனிடம் [Arittha] போதி மரத்தின் கிளையை கொண்டு வருவதுடன், தேரி சங்கமித்தாவையும் கூட்டிக் கொண்டு வர, அசோகரிடம் செல்ல முடியுமா என்று விசாரித்தார்! அவன் ஒப்புக்கொண்டான். மேலும் அவன், தனது மனத்திண்மையால் [by his will power] அவன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தார் [18 - 8: ஐம்பு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத்தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப்பட்ட அன்றே அழகிய புஷ்பபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.]; மற்றொரு மாபெரும் பொய். அவன் அசோகருக்கும் சங்கமித்தைக்கும் அந்த செய்தியைச் சொன்னார். சங்கமித்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தயக்கம் காட்டிய, தந்தை அசோகனை ஒருவாறு சமாதானப்படுத்தினாள். மொகாலிபுத்தவும் [Moggaliputta] அதை ஆதரித்தார்.

Part: 82 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Sumana went to the King Asoka the very moment he departed. All the miraculous and magical events happened are not historical events. Which is the city of gods? How did Sumana meet Sakka, the king of gods? Tamils have no issue with these as religious edifications, but will never accept as historical events. Apparently, the right collarbone relic was obtained from the Culamani-cetiya. Phonetically, l (Ell) and ‘d’ get interchanged in the course of time or during transcription between languages. It could be ‘Cudamani’ in Tamil. There was a Vihara called Cudamani Vihara in Nagapattinam in Tamil Nadu also with the name Rajarajapperumpalli, which was standing in dilapidated state until 1867, for about 800 to 900 years after its construction. It was pulled down by Jesuits priests.

The above sketches are two views of Cudamani Vihara, which was prepared in 1846. The king Rajaraja endowed the revenues from the Anaimankalam village for the upkeep of this Vihara. This Vihara is also known as Rajendracholapperumpalli, Silendracutamani Vihara etc. The king Silendra of the present day Indonesia or Malaysia built this Vihara with the blessings of the Chola kings who also generously granted revenues from villages for its upkeep.

The author has no intention to hurt the feelings of the Buddhists, but their blind belief in the Mahavamsa resulted in the death of about of 150,000 Tamils in very gruesome manners, and in the displacement of half a million Tamils, and the pious Buddhists without any compunction or remorse branded them as economic refugees. In this process, Tamils got their parliamentary representations drastically reduced with boisterous behaviour of the Sinhala members in the Parliament shouting down the reduced Tamil members with the tacit approval of the speaker of the House. It is then necessary to analyse the genuineness of the document on which the Sinhala Buddhists base their claim.

Coming back to the chapter 17 again, Sumana went to Asoka on the very moment he departed, implying divine power, and it is not history, but theology. Sumana went to the city of gods. Tamils do not believe this nonsense. If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive. We would, again, like to stress that Mahinda, Sumana, Samghamitta are not real personalities, and the instant travels, even to the city of gods, are not real events.

Chapter 18: This is about the obtaining the branch of the Bodhi tree to be taken to Lanka. It was decided earlier to invite Samghamitta to perform pabbajji ordination on Queen Anula and her five hundred women, 15-21. The King Devanampiya Tissa inquired his nephew, also his minister; Arittha whether he could go to Asoka to bring the branch of the Bo tree and Theri Samghamitta! He agreed and by his will power reached Pupphapura (Pataliputta) on the same day he departed; another lie. He passed the message to Asoka as well as to Samghamitta. Samghamitta acceded to the request and convinced the reluctant Asoka that she should go. Moggaliputta was also in favour of it.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 83 தொடரும் / Will follow

துளி/DROP: 1977 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33164353323213221/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.