Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

18 JUN, 2025 | 12:23 PM

image

By Jeevan Ravindran

இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான  யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர்.

sithupa.jpg

இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையிலான 26 வருட யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் துயரங்களை அனுபவித்தனர்.

அரசாங்கம் பலரை பலவந்தமாக காணாமலாக்கியது, 2017 இல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கை 1980களின் பின்னர் இலங்கையில் 60,000 முதல் 100,000 வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தது.

2009 இல் முடிவிற்கு வந்த யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் 170,000 கொல்லப்பட்டனர் என தமிழ் சமூகம் குற்றம்சாட்டுகின்றது. ஐக்கியநாடுகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

1996ம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல்  கடந்த 25 வருடங்களாக செம்மணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்;துள்ளது. அவரது தாயார், சகோதரர், குடும்ப நண்பர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் செம்மணியில் 1996 இல் மீட்கப்பட்டன.

கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு கொலையில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச, 1998 விசாரணையின் போது செம்மணி புதைகுழியில் 300 முதல் 400 பேரை புதைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அடுத்த வருடம் 15 உடல்கள் மீட்கப்பட்டன, இதில் இருவர் 1996 இல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என அடையாளம்காணப்பட்டனர்.

புதிய புதைகுழியின் கண்டுபிடிப்பு நீதிக்கான தேடலில் தமிழ் சமூகத்தினை  தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

கடந்த கால விசாரணைகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் யுத்தகால கொலைகள் குறித்த கேள்விகளிற்கு விடைகளை வழங்கவில்லை, அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தாதது இதற்கான ஒரு  ஒரு காரணம் என்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  புதைகுழி போன்றவற்றால் இவற்றிற்கு விடையை வழங்க முடியுமா?

பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்

sithu_1.jpg

செம்மணியில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பெப்ரவரி மாதம் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. மே மாத நடுப்பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின

மீட்கப்பட்ட 19 உடல்களில் 3 உடல்கள் பிறந்த குழந்தைகளுடையவை அல்லது பத்துமாதத்திற்கு உட்பட குழந்தைகளுடையவை என அல்ஜசீராவிற்கு தெரிவித்தார் மனித புதைகுழிஅகழ்வுகளிற்கு தலைமைதாங்கும் தொல்லியல் நிபுணர் ராஜ்சோமதேவ.

உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்த  அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என  தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.

நான் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 600 பேருடன்இணைந்து பணியாற்றுகின்றேன் இவர்களில் அதிகளவானவர்கள் 1996ம் ஆண்டிற்கும் 2008ம் ஆண்டிற்கும் இடையில் காணாமல்போனவர்கள் என காணாமல்போனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா அல் ஜசீராவிற்கு தெரிவித்தார்.

இவர்களில் பலர் 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடமபெயர்ந்தவர்கள்,நாட்டின் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தின் தலைநகர்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உடல்களை தோண்டும் நடவடிக்கைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர் என தெரிவித்த அவர் அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என விரும்புகின்றனர் என  தெரிவித்தார்.

மனித புதைகுழிகளை அகழும் முன்னைய நடவடிக்கைகள் மூலம் முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையிலேயே  இம்முறை உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உதவுகின்றனர்.

தோல்வியில் முடிவடைந்த விசாரணைகளின் வரலாறு.

இதேவேளை செம்மணி மனித புதைகுழியிலிருந்து என்ன நடந்தது என்பதற்கான துப்புகளை கண்டுபிடிப்பதற்கு அகழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிற்கு உதவுவதற்கு தமிழ் சமூகம் கொண்டுள்ள விருப்பம்,கடந்த கால அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமீபத்தில் ஏனைய மனித புதைகுழிகள் தோண்டப்பட்ட போதிலும் அவை அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்க தவறிவிட்டன.மூடிமறைக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மன்னார் கொக்குதொடுவாய் ,திருக்கேதீஸ்வரம் .மனித புதைகுழிகளிற்கு நிகழ்ந்தது செம்மணி மனித புதைகுழிக்கும் நடக்கலாம் என அச்சம் கொண்டுள்ளதாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சனி தெரிவித்தார்.

graves.jpg

'இதனையும் ஏனைய மனித புதைகுழிகள் போல அவர்கள் எந்த பதிலையும் நீதியையும் வழங்காமல் மூடிமறைக்கலாம்," என அவர் தெரிவித்தார். இவரின் மகன் அமலன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர், 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனார்.' கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"?

மிகப்பெரிய மனித புதைகுழி அகழ்வு வடமேற்கு மன்னாரிலேயே இடம்பெற்றது. 2018 இல் இது ஆரம்பமானது. சோமதேவாவே இதனை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கினார். 346 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன, நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இந்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தன.

எனினும் சோமாதேவ மன்னார் புதைகுழி விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தினை கண்டித்தார்.

மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்த வாரமே உடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டார்.

அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை, காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.

செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோர் அலுவலகம் ஒரு பார்வையாளராகவே இணைந்துகொண்டுள்ளது என தெரிவித்த அதன் பிரதிநிதி, மன்னார் புதைகுழி அகழ்வில் அது நீதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டது என குறிப்பிட்டார்.

வழங்கப்படவேண்டிய கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் முறைப்படியான முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

2024 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கு போதுமான நிதி மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை என்பது கவலை அளிக்கிறது மேலும் இது தொடர்பாக சர்வதேச ஆதரவைப் பெற அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது" என்று கூறியது.

கடந்தகாலத்தில் மனித புதைகுழி அகழ்வின் போது காணப்பட்ட குறைபாடுகள் பலவீனங்கள் செம்மணியிலும் காணப்படுகின்றன என தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அடையாளம் கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையம், சர்வதேச நிபுணத்துவமோ மேற்பார்வையோ இல்லாமல் செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டது.

மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகின்றது என தமிழ் சமூகமும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் கருதவேண்டும் என அரசாங்கம் விரும்பினால், முதலில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான மனித புதைகுழிகளை தோண்டும் கொள்கையை பின்பற்றவேண்டும், சர்வதேச பங்களிப்பிற்கு அனுமதி வழங்கவேண்டும், சர்வதேச நிபுணத்துவத்தை நாடவேண்டும், மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் பங்கெடுப்பதற்கும், சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தை பெறவும் அனுமதிக்கவேண்டும் என அடையாளத்தின் பிரதிநிதியொருவர் அல்ஜசீராவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக செப்டம்பரில் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டமை அவர் நீதிக்கு ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் இதுவரை அவர் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இடம்பெறவில்லை என கனகரஞ்சினி தெரிவித்தார்.

missing.jpg

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றது. இதுவரை அவர்  எங்களின் பிரச்சினைகளை சிறிதளவும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்த அவர் ஆட்சியாளர் மாறியுள்ளார் ஆனால் யதார்த்தம் நீடிக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/217798

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"?

நீதி கேட்டவர் காணாமல் ஆக்கப்படுவர், அநீதிக்கு எதிரான குரல்கள் மௌனமாக்கப்படும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.