Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

509341879_1141919981306306_8869990853981

512517923_1141212258043745_8202743653711

510519812_1141993557965615_8174036256588

512410101_1141746554656982_6509355442327

511303855_1141917441306560_1583612662444

510804018_1141747757990195_5923857375074

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-333.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும்.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.

இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது.

அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.

ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

GuPS55TXoAA1Nob?format=jpg&name=medium

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப்

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார்.

அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார்.

ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1436979

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

26 JUN, 2025 | 04:09 PM

image

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை, ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218536

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அணு குண்டுக்கான யுரேனிய செறிவூட்டலை சில மாதங்களில் இரான் தொடங்கலாம்" - எச்சரிக்கும் ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பு

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், அணுசக்தி, அணுகுண்டு, ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கட்டுரை தகவல்

  • ஸ்டூவர்ட் லாவ்

  • பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடந்த வாரம் மூன்று இரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதே தவிர முழுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இது இரானின் அணுசக்தி மையங்கள் "முழுமையாக அழிக்கப்பட்டன" என்கிற டிரம்ப்பின் கூற்றுக்கு முரணாக உள்ளது.

"அனைத்தும் மறைந்துவிட்டன என்றும் அங்கு எதுவுமே இல்லை என யாருமே வெளிப்படையாக கூற முடியாது" என சனிக்கிழமையன்று க்ரோஸி தெரிவித்தார்.

இரான் அணு ஆயுத தயாரிப்பை நெருங்கிவிட்டது எனக்கூறி கடந்த ஜூன் 13ம் தேதி அந்நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவ நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின்னர் இந்த மோதலில் இணைந்த அமெரிக்கா ஃபோர்டோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஷான் ஆகிய இரானின் அணுசக்தி நிலைகள் மீது குண்டுகளை வீசியது.

அப்போதிலிருந்து பாதிப்பின் உண்மையான அளவு என்னவென்பது பற்றி தெளிவு இல்லை. "இன்னும் சில மாதங்களில் இரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிப்பதை துவங்கக் கூடும்" என க்ரோஸி சனியன்று சிபிஎஸ் நியூஸிடம் (பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளி) தெரிவித்தார்.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், அணுசக்தி, அணுகுண்டு, ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஃபோர்டோ

இரான் தற்போதும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது. எனவே அவர்கள் விரும்பினால், அவர்களால் மீண்டும் தொடங்க முடியும் என அவர் தெரிவித்தார்

இரானின் அணுசக்தி திறன்கள் தொடரக்கூடும் என கூறும் முதல் அமைப்பு ஐஏஇஏ அல்ல. இந்த வாரத்தின் தொடக்கத்தில் கசிந்த பெண்டகனின் முதல்கட்ட ஆய்வு, அமெரிக்க தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே பின் தள்ளி வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது சாத்தியமானது தான். எனினும், எதிர்கால உளவு அறிக்கைகள் இந்த நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள வேறு விதமான பாதிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை உள்ளடக்கலாம்.

இதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த டிரம்ப் இரானின் அணுசக்தி நிலைகள் 'முழுமையாக அழிக்கப்பட்டன' என்றும் ஊடகங்கள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதலை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

இப்போதைக்கு இரானும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால் இரான் கவலையளிக்கக்கூடிய அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுகிறது என உளவுத்துறை கண்டறிந்தால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீசுவதைப் பற்றி நிச்சயம் யோசிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், அணுசக்தி, அணுகுண்டு, ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ஃபஹான்

இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படும் என இரானுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி அப்தொல்ரஹீம் மௌசவி ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார்.

"நாங்கள் போரைத் தொடங்கவில்லை, ஆனால் எங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவருக்கு பதிலடி கொடுத்துள்ளோம். எதிரி போர்நிறுத்தம் உள்ளிட்ட தனது உத்திரவாதங்களுக்குக் கட்டுப்படுவார் என தனக்கு சந்தேகம் இருப்பதால், மீண்டும் தாக்கினால் முழு படைபலத்துடன் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என அவர் கூறியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரான் மறுபுறம் பாதிப்புகள் பற்றி முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளது.

வியாழன் அன்று நிகழ்த்திய உரையில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க தாக்குதல்கள் எதையுமே சாதிக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அகாக்சி "அதிகமான மற்றும் தீவிரமான" பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஐஏஇஏ உடன் இரான் ஏற்கெனவே நலிவடைந்த உறவைக் கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை அணுசக்தி கண்காணிப்பகமான ஐஏஇஏ இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் சாய்வதாக குற்றம்சாட்டி அதனுடனான ஒத்துழைப்பை ரத்து செய்யும் மசோதா இரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், அணுசக்தி, அணுகுண்டு, ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அப்பாஸ் அகாக்சி

பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்கிற ஐஏஇஏவின் கோரிக்கையை இரான் நிராகரித்துள்ளது. "பாதுகாப்பு என்கிற போர்வையில் குண்டு வீசப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என க்ரோஸி வலியுறுத்துவது அர்த்தமற்றது மற்றும் தவறான நோக்கம் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது" என வெள்ளியன்று எக்ஸ் பதிவில் அராக்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இரான் 20 ஆண்டுகளில் முதல் முறையாக தனது உத்திரவாதங்களை மீறியுள்ளது என ஐஏஇஏ கண்டறிந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானைத் தாக்கியது.

இரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸி தெரிவித்துள்ளார்.

"நான் இரானுடன் அமர்ந்து இதை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இறுதியில் ராணுவ தாக்குதல்களுக்குப் பிறகு நீடித்த தீர்வு வேண்டும், அவை ராஜாங்க ரீதியான ஒன்றாகத் தான் இருக்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு உலக நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி இரான் 3.67% (வணிக அனுமின் நிலையங்களை இயக்குவதற்கான எரிவாயுவிற்கு தேவையான அளவு) என்கிற அளவிற்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்ட அனுமதி இல்லை. அது போக ஃபோர்டோ ஆலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த விதமான செறிவூட்டல் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை.

எனினும் டிரம்ப் 2018ம் ஆண்டு தனது முதல் ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.

இதற்குப் பதிலடியாக இரான் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியது. ஃபோர்டோ ஆலையில் 2021-ல் இருந்து செறிவூட்டலைத் தொடங்கியது, ஒன்பது அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் குவித்துள்ளது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c24v9gzengmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு

30 JUN, 2025 | 03:48 PM

image

அமெரிக்காவின் தாக்குதலிற்கு இலக்காகிய ஈரானின் போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதை செய்மதிகள் காண்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மக்சார் தொழில்நுட்பத்தின் செய்மதி படங்கள் கட்டுமானப்பணிகள் தீவிரமாக இடம்பெறுவதை காண்பித்துள்ளன என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

fordo5.jpg

அமெரிக்காவின் தாக்குதலிற்கு உள்ளான போர்டோ அணுஉலையின் அருகில் அகழ்வு இயந்திரமும் கிரேன்களும் இருப்பதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.புல்டோசர் லொறி போன்றவையும் காணப்படுகின்றன.

இந்த செய்மதி படங்களை ஆய்வு செய்துள்ள அணுவாயுத நிபுணர் டேவிட் அல்பிரைட்டின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்புதல்,பொறியியல் சேதமதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் ,கதிரியக்க மாதிரிகளை ஆய்வு செய்தல் ஆகியவை இடம்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றாக சேதப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஐநாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தின் மூலம் ரபேல் க்ரோஸி ஈரானின் அணுசக்தி திட்டம் பல தசாப்தகால பின்னடைவை சந்தித்துள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218853

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் பயன்படுத்திய Bunker buster இன் சோதனைக் காட்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.