Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

25 JUN, 2025 | 07:05 PM

image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். 

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். 

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். 

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். 

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

IMG_4132.jpeg

IMG_4151.jpeg

IMG_4163.jpeg

IMG_4168.jpeg

IMG_4178.jpeg

IMG_4180.jpeg

IMG_4181.jpeg

IMG_4182.jpeg

https://www.virakesari.lk/article/218465

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி “அணையா விளக்கு” போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் 

Published By: DIGITAL DESK 3

25 JUN, 2025 | 05:46 PM

image

யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

510019125_1384852636133076_3883895450765

508834969_944086267787906_40584344831285

https://www.virakesari.lk/article/218460

  • கருத்துக்கள உறவுகள்

வோல்கர் டர்க் - தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் பாராநாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a)

image_5836721cd0.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/வோல்கர்-டர்க்-தமிழ்-எம்-பிக்கள்-சந்திப்பு/175-359947

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம்; உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல்

Published By: VISHNU

26 JUN, 2025 | 12:36 AM

image

(நா.தனுஜா)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதேவேளை வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் வோல்கர் டேர்க்கிடம் எடுத்துரைத்த மற்றொரு பிரதிநிதி, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ்  சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/218471

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு

Published By: VISHNU

26 JUN, 2025 | 12:41 AM

image

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். 

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு புதன்கிழமை (25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/218472

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கண்டறியக்கூடிய சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் - வோல்க்கெர் டேர்க்

26 JUN, 2025 | 03:29 PM

image

உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட  சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நான் செம்மணியில் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதியில் தற்போது இருக்கின்றேன். எம்மை விடாமல் துரத்துகின்ற கடந்தகாலங்கள் தற்போது வெளித்தெரியும் இடங்களிற்கு விஜயம் மேற்கொள்வது எப்போதும் உணர்வுபூர்வமான விடயம்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உறவுகளை நான் சந்தித்தேன்.

Untitled-3.jpg

90களின் நடுப்பகுதியில் தனது உறவினர் காணாமல்போன பெண்ணொருவரை நான் சந்தித்தேன் காணாமல்போனவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் கடும் கவலை கொண்டிருந்தார்.

தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என தெரியாதவர்களுடன் உரையாடும்போது இந்த வலியை வேதனையை நீங்கள் உணர்வீர்கள்.

மிகவும் வேதனைய விடயத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் நீதிக்கும் பொறுப்புக்கூறலிற்கும் இது ஒரு படி முன்னோக்கிய நடவடிக்கை.

வலுவான விசாரணைகளின்  மூலம் உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட  சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218526

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.