Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1

  • கருத்துக்கள உறவுகள்

டெக்சாஸில் உயிர்களை பறித்த பேரழிவு வெள்ளம் - பாதிப்பை காட்டும் 12 படங்கள்

டெக்சாஸில் உயிர்களை பறித்த பேரழிவு வெள்ளம் -  பாதிப்புகளை காட்டும் 12 படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகளில் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை.

இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இந்த திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக உயர்வான இடத்திற்குச் சென்றுள்ளனர்

டெக்ஸாஸ் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணிநேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சான் அன்டோனியோவின் வடமேற்கே உள்ள கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமுக்குச் சென்ற சிறுமிகளில் 23 முதல் 25 சிறுமிகளைக் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் வெள்ளத்தை "அசாதாரணமான பேரழிவு" என்று கூறுகிறார்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "இதுவரை மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர்" என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி, ஹெலிகாப்டர், டிரோன்கள், படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பல கவுன்டிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பல கவுன்டிகளில் வீடுகள், கார்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதைக் காணொளிகளில் காண முடிகிறது.

பல கவுன்டிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் காணவில்லை

வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதைக் காணொளிகளில் பார்க்க முடிகிறது.

காணாமல் போனவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை இரவு, பகல் பார்க்காமல் மீட்புப் பணி தொடரும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபட் கூறினார்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகியிருந்த நிலையில், இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

டெக்சாஸின் துணைநிலை ஆளுநர் டான் பேட்ரிக் பேசும்போது, "இது ஓர் அழிவுகரமான வெள்ளம், சொத்துகளையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார். மேலும், "குழந்தைகள் காணாமல் போனதாலேயே அவர்கள் இறந்திருக்கலாம் என்று அர்த்தமில்லை. அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில்கூட இருக்க வாய்ப்புள்ளது" என்றும் கூறினார்.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT

படக்குறிப்பு, கெர்வில் நகர காவல்துறை, அதன் மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் உழைத்ததாகக் கூறுகிறது.

கேம்ப் மிஸ்டிக் முகாம், தங்களிடம் மின்சாரம், தண்ணீர் இல்லை என்றும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கூடுதல் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது.

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT

படக்குறிப்பு, "எங்கள் மக்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை" மீட்புப் பணிகள் தொடரும் என்று கெர்வில் நகர காவல்துறை உறுதி அளித்துள்ளது

இந்த வெள்ளம் குறித்துப் பேசிய கெர் கவுன்டியின் மூத்த அதிகாரி ராப் கெல்லி, தங்களிடம் எச்சரிக்கை அமைப்பு இல்லை என்று கூறினார்.

மேலும், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளம் 1987ஆம் ஆண்டு கெர் கவுன்டியின் தெற்கே உள்ள கம்ஃபோர்ட் நகரில் கிறிஸ்தவ முகாம் பேருந்தில் 10 இளம் வயதினர் உயிரைப் பறித்த வெள்ளத்தைவிட தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஆனால், மழைக்கு முந்தைய வானிலை முன்னறிவிப்புகள் "இவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஆனால், மழைக்கு முந்தைய வானிலை முன்னறிவிப்புகள் "இவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகளின்படி, டெக்சாஸ் அவசர நிலை மேலாண்மைப் பிரிவு வியாழக்கிழமை பல கூட்டங்களை நடத்தியது.

ஆனால் தேசிய வானிலை சேவை இவ்வளவு பெரிய மழையைக் கணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 20 செமீ வரை மழை பெய்யும் என்றே கணிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c784zdv79eko

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு 

Published By: DIGITAL DESK 3

06 JUL, 2025 | 01:05 PM

image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள் 

இதனையடுத்து ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. 27 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது,

 நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.

எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் கூறியுள்ளார். அது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலையும் தொடரும் என அவர் கூறியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/219304

  • கருத்துக்கள உறவுகள்

டெக்சாஸில் தொடர் கனமழை; 78 பேர் உயிரிழப்பு!

கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் போயுள்ளனர்.

இவற்றில் 28 சிறுவர்கள் உட்பட 68 இறப்புகள், கெர் கவுண்டியில் நிகழ்ந்தன.

அங்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியது.

இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த 24-48 மணி நேரத்தில் இப்பகுதியில் மேலும் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், அண்மைய டெக்சாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தேடல் மற்றும் மீட்பு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

https://athavannews.com/2025/1438246

  • கருத்துக்கள உறவுகள்

517982118_1397048118229383_8164395026256

அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.

தமிழ் கூடம்

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.