Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களிற்கு நீதி கோரி திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்

09 JUL, 2025 | 10:52 AM

image

சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது.

07.09.1996 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் 11 சிங்கள  ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். 

GvYX5_-aYAISNkc.jpg

கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. 

குறிப்பாக 1995–96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. 

ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே  அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது.

அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். 

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  

அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 50 மேற்பட்ட தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. 

இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. 

எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும் சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

https://www.virakesari.lk/article/219546

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிப்பு - பழ.நெடுமாறன்

13 JUL, 2025 | 12:20 PM

image

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனால் அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நவநாதனை உடனடியாக விடுவித்து மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/219855

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் - இயக்குனர் கௌதமன் சீற்றம்!

13 JUL, 2025 | 05:36 PM

image

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய  கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது.

தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களை இங்கு குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகழிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது.

தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை அரசியல் வேலைகளை செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.

முன்னாள் விடுதலை புலிகள் என்னும் சந்தேகத்தின் பெயரில் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு, இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருக்கும் ஈழத்தமிழர்களை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பனவே அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள்.

ஈழத்தில் இருந்து அடைக்கலம் கோரி தமிழ்நாட்டுக்கு வந்துள்ள எமது தொப்புள்கொடி உறவுகளின் குறைந்தபட்ச கோரிக்தைகளை கூட நிறைவேற்றுவதற்கு இதற்கு முன்னர் இருந்த இந்திய ஒன்றிய, மாநில அரசாங்கங்களும், தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஒன்றிய, மாநில அரசாங்கமும் முன்வராத நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் அதை விட கோபமாகவும் உள்ளது.

சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? அப்படி என்ன அவர்கள் பெரிதாக உங்களை கேட்டார்கள்? அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஏன் இதன் பின்னும் உங்களால் செய்துகொடுக்க முடியவில்லை?

ஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே  வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ, நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது என்பது எத்தகைய குரூரம்.

ஈழத்தில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற விடயம் என்பது நூறு சதவிகித உண்மை என்பதை தற்போதைய ஈழத்தின் செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை அகழும்போது அங்கே எங்களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு நிகழ்ந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்கூடாக பார்க்கக்கூடியதே ஆகப் பெரும் சாட்சியாக நிற்கின்றது.

இதனை வைத்து பார்க்கும்போது  இதற்கு மேலும் உங்களுக்கு பட்டவர்த்தனமாக தெரியவில்லையா அவர்களுக்கு அங்கே உயிர் அச்சுறுத்தல் இருக்கிறதென்கிற விடயம்?

அரசியல் ஆதாயத்திற்காக  தொப்புள்கொடி உறவுகள் என்று நாம் வாய் கிழிய கத்தினால் மட்டும் போதாது. அந்த தொப்புள் கொடி உறவுகள் அடைக்கலம் புகுந்த நமதிடத்தில் அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அத்தனை பேருக்கும் உள்ளது என்பதை தமிழ்நாடு அரசும், தமிழ் நாட்டு மக்களும் மறந்து விடாதீர்கள்.

ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை. எனவே யோகராசா நவநாதனின் கோரிக்கைகளுக்கு இனியாவது செவி சாயுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள்.

அன்னம் தண்ணி நீர் ஆகாரமின்றி எட்டாவது நாளை கடந்து உண்ணா நிலையிலிருக்கும் சகோதரர் யோகராசா நவநீதன் அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை தர வேண்டும். இதன் பிறகும் தமிழ் நாட்டில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் இந்திய அரசோ மாநில அரசோ நீங்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/219899

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.