Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-141.jpg?resize=600%2C300&ssl

வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார்.

இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியதுடன் பொலிசாரின் இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என தெரிவித்தனர்.

இந் நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1438856

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518011481_1184575343685322_8669650447140

517495079_1184568367019353_8116532813629

519462130_1184575390351984_7502751929095

படத்தில் 58 வயது இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பொலிஸாரால் செருகப் பட்ட தடியும், பொலிசாரின் அடையாள இலட்சனைகளும் காணப்படுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.

பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmczxmhxe0125qp4k3rqodadb

  • கருத்துக்கள உறவுகள்

கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது

16 JUL, 2025 | 04:34 PM

image

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220149

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.