Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது, இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்"

18 JUL, 2025 | 10:23 AM

image

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது.

tamil_refugee_cou.jpg

1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன.

2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல்  தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன.

புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள்  இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம், என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.

இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை, இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் .

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம்.

இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள், உயிர்பிழைத்தவர்கள், மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும்  வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள். நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும், உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும்.

இந்த ஆவணங்கள்: தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான  ஆதரவை நிறுத்தவேண்டும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும்.

தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள், அதற்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம்.

இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது. ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது.

அதனை சூழவுள்ள மௌனமும்  குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நீதியை கோருகின்றோம் நாங்கள் நினைவுகூறலை கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/220280

Edited by ஏராளன்
heading changed

  • ஏராளன் changed the title to இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - தமிழ் ஏதிலிகள் பேரவை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

Published By: RAJEEBAN

22 JUL, 2025 | 11:10 AM

image

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் ஏதிலிகள் பேரவை  தெரிவித்துள்ளதாவது.

518413312_1189921903176811_4263138053915

இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நேற்று பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

519886249_1189928549842813_6712197350839

இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை, அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள்.

அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி  ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது.

ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர்.

இந்த பேரணியில் 

518394113_1189928633176138_1126587410365

இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும்.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும்.

அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்று அவுஸ்திரேலியாவும் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகளை விதிக்கவேண்டும்.

இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளிற்கு பாதுகாப்பு மற்றும் புகலிடத்தை வழங்கவேண்டும்.

இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

520582363_1189928053176196_4083704501307

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவேண்டும் போன்ற வேண்டுகோள்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் மாத்திரமல்ல உலகிற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள தமிழ ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் ஒவ்வொரு புதைகுழியும் நீங்கள் நீதிக்காக குரல்கொடுப்பீர்களா அல்லது பாராமுகமாகயிருப்பீர்களா என்ற கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.

519966978_1189927576509577_7538573169860

https://www.virakesari.lk/article/220600

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.