Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

adminJuly 20, 2025

IMG-20250719-WA0043-1024x576-1.jpg?fit=1

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.  எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதன் போது, எட்டு மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நடுவதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காக குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

IMG-20250719-WA0038-1024x576-1.jpg?resizIMG-20250719-WA0040-1-1024x576-1.jpg?resIMG-20250719-WA0041-1-1024x576-1.jpg?res

https://globaltamilnews.net/2025/218090/

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை நீர் தந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் - வேலன் சுவாமி

Published By: RAJEEBAN

22 JUL, 2025 | 03:59 PM

image

விடுதலைநீர் தந்து தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் ஏற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

522977604_122115303404932184_15651609530

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விடுதலை விருட்சம் என்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான அந்த பயணம் இன்று விடுதலை விருட்சத்திற்கு நீர்வழங்கி அனைவரும் பேராதரவு கொடுத்து, விடுதலை மரத்தை வளர்த்தெடுக்கவேண்டும்.

விடுதலைக்காக நாங்கள் அனைவரும் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான் அதுசாத்தியமாகும். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையாகயிருக்கட்டும் தமிழ் இனத்தின் விடுதலையாகயிருக்கட்டும், எங்கள் இனத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்பதற்கான அடையாளமாக இந்த விடுதலை விருட்சம், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படயிருக்கின்றது.

அந்த விடுதலை விருட்சங்களிற்கு நீர் ஊற்றிவளர்க்கவேண்டிய அடிப்படை உணர்வை இந்த விடுதலை நீர் வழங்குதல் எடுத்துக்காட்ட இருக்கின்றது.

கிட்டுபூங்காவில் 24, 25ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற இந்த விடுதலையை நோக்கிய போராட்டத்திலே அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், ஊர்தியொன்று ஒவ்வொரு பிரதேசமாக வலம்வரயிருக்கின்றது.

அந்த ஊர்திக்கு அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பேராதரவை வழங்கி, விடுதலை நீரை வழங்கி அந்த விடுதலை நீர் சேகரிக்கப்பட்டு, தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படுகின்ற விடுதலை விருட்சங்களிற்கு வழங்கப்படவிருக்கின்றது.

ஆகவே தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனத்தினது தேசத்தினது விடுதலைக்காகவும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை குரல்அற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே எமது உறவுகள் பெருமளவிலே திரண்டு இதற்கு ஆதரவு வழங்கவேண்டும், விடுதலை நீரை வழங்கி ஆதரவு செய்யவேண்டும். 24, 25 ம்திகதிகளில் கிட்டு பூங்காவிற்கு வருவதன் ஊடாக அங்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாங்கள் சாத்தியமாக்கி தொடர்ந்து இனத்தின் விடுதலையை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும்.

https://www.virakesari.lk/article/220640

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில்

24 JUL, 2025 | 10:36 AM

image

குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு  கொழும்பில் இடம்பெற்றது. 

522822592_10237542523440826_293892703608

சேகரிக்கப்பட்ட நீரை மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் யாழ்ப்பாணத்தில் இன்று கையளிப்பார்

522796148_10237542526520903_170461941448

522976596_10237542523840836_221819553921

இந்தப் போரட்டத்துக்கான எமது ஒத்துழைப்பாக சேர்க்கப்பட்ட இந்த நீரை யாழ் கிட்டுப்பூங்காவில் இடம்பெறும் நிகழ்வில் நான் கையளிப்பேன்.

522711657_10237542526280897_202216048287

நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலையாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

521580184_10237542527960939_704778910241

https://www.virakesari.lk/article/220780

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம்

24 JUL, 2025 | 05:41 PM

image

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று வியாழக்கிழமை (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள "விடுதலை விருட்சத்துக்கான "  விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.

இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர்  சதீஸ் எழுதிய "துருவேறும் கைவிலங்கு" நூல் அறிமுகமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது.

இன்றைய தினம் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளையும் தொடரவுள்ளது.

IMG-20250724-WA0027.jpg

IMG-20250724-WA0040.jpg

IMG-20250724-WA0038.jpg

IMG-20250724-WA0023.jpg

IMG-20250724-WA0033.jpg

IMG-20250724-WA0022.jpg

IMG-20250724-WA0021.jpg

IMG-20250724-WA0020.jpg

IMG-20250724-WA0019.jpg

IMG-20250724-WA0018.jpg

IMG-20250724-WA0016.jpg

https://www.virakesari.lk/article/220848

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் விடுதலை நீர் சேகரிப்பு

05 Sep, 2025 | 03:33 PM

image

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. 

இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (4) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/224291

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.