Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

25 JUL, 2025 | 01:23 PM

image

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா  புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

c50f246b-f478-4675-a9f1-1bf903414b81.jpg

இதேவேளை சர்வதேச விசாரணை பொறிமுறையை " கோரி நாளை இலங்கையின் வடக்கு - கிழக்கு எங்கும்  இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 'மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு' கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு போாராட்டம்.

https://www.virakesari.lk/article/220909

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டம் : சர்வதேச நீதியை வலியுறுத்தும் வடகிழக்கு சமூக இயக்கம்

Published By: DIGITAL DESK 2 25 JUL, 2025 | 07:52 PM

image

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டிணைவு” கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220930

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

25 JUL, 2025 | 04:59 PM

image

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது

ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும்.

2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை, கொலை, பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது.

இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம்.

செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள்.

missing_persons.jpg

ஆனால் எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை.

ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப்பேசப்பட்டது. தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.

26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது.

வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்துள்ளதாவது

lavakularasa.jpg

இனப்படுகொலை  இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்குகிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட  மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரனவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம். கடிதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

26ம் திகதி வடக்குகிழக்கில் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில் என்பதை தெரிவித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி  நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம்.

உள்ளக பொறிமுறை மூலம்  நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம். 2016 ஜூலைமாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே ஆர்ப்பாட்டம்.

சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கசார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச்சபையில் பாரப்படுத்தவேண்டும்.

ஆகவே மேற்கூறப்பட்ட காரணங்களால்  இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம்.

வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாகயிருக்கும்.

https://www.virakesari.lk/article/220932

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.