Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

Published By: RAJEEBAN

06 AUG, 2025 | 05:36 PM

image

இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும்  அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில்  ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

நிசாந்த உலுகேதன்ன குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நிசாந்த உலுகேதென்ன 2010 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

2025 ஜூலை மாதம்  இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டார்.

trinco-navel-base-1.jpg

ஆள்கடத்தல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் மற்றும் நாட்டின் மிக பாதுகாப்பான கடற்படை தளமான திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோத படுகொலைகள் ஆகியவை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். (இது கன்சைட் என அழைக்கப்பட்டது)

இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான நம்பகதன்மை மிக்க அறிக்கையிடல்களின் படி கன்சைட் எனப்படுவது தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான அனுமதியளிக்கப்படாத பகுதி என்பதை முன்னாள் கடற்படை தளபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

கன்சைட் என்ற நிலத்தின் கீழ் அமைந்துள்ள சட்டவிரோத சித்திரவதை கூடம் ஒன்று உள்ளது என்பதை 2015 முதன்முதலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அம்பலப்படுத்தியிருந்தது.

இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரினதும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும்  அடிப்படையாக வைத்து இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் நிசாந்த உலுகேதென்னவும் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம்.

மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பிற வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்ட உயிர் பிழைத்த தமிழர்களிடமிருந்து விரிவான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவிரிவான தகவல்களின் அடிப்படையில் சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  இந்த நிலத்தடி சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்திரவதை கூடம் இருப்பதை முதன்முதலில் 2015 இல் வெளிப்படுத்தியது. 

பின்னர் அவை 2015 நவம்பர் மாதம் அந்த இடத்திற்கு விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவால்  சரிபார்க்கப்பட்டன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அதன் செயல்பாட்டின் போது குறைந்தது 75 - 100 நபர்கள் சட்டவிரோதமாக "கன்சைட் தளத்தில்" தடுத்து வைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இது  2005 - 2006 முதல் 2012 வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. 

இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மிகமோசமான மனிதாபிமானமற்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளிற்குள்ளாக்கப்பட்டனர்.

அக்டோபர் 2019 இல் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம்  இலங்கை  இலங்கை கடற்படையின் "கன் சைட்" எனப்படும் ரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பிற கடுமையான மீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.

இந்த மீறல்கள் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை 2008 - 2009ல் ("திருகோணமலை 11") திருகோணமலை கடற்படைத் தளத்தில் 11 பேர் காணாமல் போனது தொடர்பான இலங்கை காவல்துறையின் கடந்த கால விசாரணையிலிருந்து ஆவண ஆதாரங்களையும் 2008 முதல் 2012 வரை இலங்கை கடற்படையின் பரந்த முறையான மீறல்களைப் பற்றிப் பேசிய நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

குறிப்பாக 2008 ஆகஸ்ட் 25 முதல் 2009 பிப்ரவரி வரை கொழும்பில் பதினொரு இளைஞர்கள்  கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான “திருகோணமலை ” விசாரணையை  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  இலங்கை  ஆய்வு செய்தது. 

பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 2009 இல் “கன்சைட்டிற்கு” மாற்றப்பட்டனர். இந்தக் குழுவில் ஆறு தமிழர்கள் அடங்குவர், இருவர் சிங்களவர்கள் மற்றும் மூவர் முஸ்லிம்கள். 

இந்த குறிப்பிட்ட வழக்கைத் தாண்டி புலிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அதே இடத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததை - பெரும்பாலும் தமிழர்களை - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  ஆவணப்படுத்தியது.

அவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர், மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உட்பட அவர்கள் அனுபவித்த கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம். 

nishantha2.jpg

அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2013 வரை கடற்படை புலனாய்வு இயக்குநராகவும் கடற்படை ஆயுத இயக்குநராகவும் நிஷாந்த உலுகேதென்ன பணியாற்றினார்.

2008 முதல் 2012 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்துடன் நேரடியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு காலம் கடற்படை உளவுத்துறையால் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் "கன் சைட்" இல் தடுத்து வைக்கப்பட்ட காலகட்டம். 

நிசாந்த உலுகேதென்னவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட கடற்படை பிரிவான கடற்படை புலனாய்வு பிரிவினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களும் உயிர் பிழைத்தவர்களும் கன்சைட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான  திட்டத்திடம் வாக்குமூலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி மிகவும் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட கடற்படை தளத்திற்குள் கடற்படையினர் சுதந்திரமாக சென்று வந்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினரின் வாகனங்களிற்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது, அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் துல்லியமாக  பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோத கடத்தல்கள் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை வான்கள் தளத்திற்குள் இலகுவாக கொண்டு போவதை சுலபமாக்கியது.

நாட்டின் கடும் பாதுகாப்பு மிக்க தளத்திலிற்குள் இந்த வெள்ளை வான்கள் எந்த வித சோதனையும் இன்றி சென்று வந்தன.

கடற்படை புலனாய்வுத் துறையில் அவரது உயர் பதவி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கான மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சிஐடியில் அவரது சொந்த அனுமதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிஷாந்த உலுகேதென்ன தனது கட்டளையின் கீழ் நீண்டகாலமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் 

ஆனால் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மற்றும் மேலும் மீறல்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார்.

gunsite__2_.png

மீறல்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர் மே 2019 இல் கடற்படைத் தலைமைத் தளபதியாகவும் ஜூலை 2020 இல் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இறுதியில் டிசம்பர் 2022 இல் ஏராளமான கௌரவங்களுடன் ஓய்வு பெற்றார். 17 அக்டோபர் 2023 இல் அவர் கியூபாவிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார். 18 நவம்பர் 2024 இல் அவர் அரசாங்கத்தால் திரும்ப அழைக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

https://www.virakesari.lk/article/221977

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலான்கா நாட்டை பிரிக்க நினைத்த தமிழ் பயங்கரவாதிகளை இல்லாது செய்த சிங்கள மாவீரர்களை தண்டித்தால் பெளத்த மத விரோத செயல்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுக்க சிறைச்சாலை கட்டினாலும் போதாது போலிருக்கே. இப்போதானே ஆரம்பம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.