Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா

Published By: RAJEEBAN

15 AUG, 2025 | 04:17 PM

image

நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு  வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா  ஞானராஜா தெரிவித்துள்ளார்.

தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது. 

532416081_2912242475830341_1509805339132

நான் மூன்று முக்கிய விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாங்கள்  ஏன் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் கடத்தப்பட்டவர்கள் அல்லது காணமல்போனவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களுடன்  தொடர்புபடுத்த முயல்கின்றோம்? குறிப்பாக வடக்குகிழக்கில்.

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் இடம்பெற்றது, உலகில் அதிகளவானவர்கள் பலவந்த காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த குழு  தெரிவித்துள்ளது.

ஐநாவின் குழு பலவந்தமாக காணாமலாக்கப்பட்டிருக்ககூடியவர்கள் எண்ணிக்கை  60,000 முதல் ஒரு 100,000  என தெரிவித்துள்ளது, அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யுத்தகாலத்தின் பயங்கரவாத தடைச்சட்டம என்ற மிகவும் கொடுரமான பயங்கரமான சட்டம் நடைமுறையிலிருந்தது, அவசரகாலசட்டம் போன்ற அதற்கு ஆதரவான சட்டங்கள் காணப்பட்டன என்பது  உங்களிற்கு தெரியும், இவை பயங்கரவாதத்தை கையாள்வதற்காக நடைமுறைக்கு வந்தவை, இந்தசட்டங்களை வலுக்கட்டாயமாக மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தினார்கள், குறிப்பாக வடக்குகிழக்கில்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட மக்கள்;, அவர்கள் ஒருபோதும் திரும்பிவரவில்லை. சோதனைச்சாவடிகள் ஊடாக நடந்துசென்று கொண்டிருந்தவர்கள், அதனை கடந்து சென்றவர்கள் ஒருபோதும் மீண்டும் திரும்பிரவரவில்லை.

தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும், மக்களை சுற்றிவளைத்து தலையாட்டி ஒருவரின் முன்னால் நிறுத்துவார்கள், அவர் தலையாட்டினால் அந்த நபரை  கொண்டு செல்வார்கள், அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பலர்  மீண்டும் திரும்பவில்லை.

2009 வரை இவற்றை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தார்கள்.

532279527_2912243542496901_8868142097942

வடக்குகிழக்கிலும் முழு நாட்டிலும் 2009 மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்துவிட்டதை என நாங்கள்; நினைக்கின்றோம், ஆனால் நீங்கள் அங்கு சென்றால், வடக்குகிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டால், வடக்குகிழக்கில்; நிழல்யுத்தம்  தொடர்ந்தும் நீடிக்கின்றது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் .

யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மிகதீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றனர், மனித உரிமை விடயங்களிற்காக செயற்படுபவர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள்.

நாளாந்தம் ஒவ்வொரு நாளும் பலர் சிஐடி டிஐடியினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்தும் அழைக்கப்படுகின்றனர்.

சிஐடி டீஐடி போன்ற அரச கட்டமைப்புகள் தங்கள்  அலுவலகங்களை வடக்குகிழக்கில் ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் உள்ள தங்கள் அலுவலகங்களிற்கு விசாரணைக்கு அழைப்பதற்கு பதில் வடக்குகிழக்கில் உள்ள தங்கள் அலுவலங்களிற்கு பலரை விசாரணைக்கு  அழைக்கின்றார்கள்.

மிகச்சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், தரிந்துவும் அவரது நண்பர்களும் குமணனின் பெயரை  இங்கே குறிப்பிட்டனர்.

குமணன் புகைப்பட ஊடகவியலாளர் அவர் தொடர்ச்சியாக  தனது புகைப்படங்கள் மூலம்  வடக்குகிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிவரும் ஒருவர். மிக வலுவான முறையில் அவர் இதனை செய்துவருகின்றார்.

அவரை 17ம் திகதி விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் வடக்குகிழக்கில் நிலவரம் இவ்வாறானதாகத்தான் காணப்படுகின்றது.

ஏன் நாங்கள் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமல்போகச்செய்தலுடன் தொடர்புபடுத்த விரும்புகின்றோம் என்றால் , யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டுள்ள பல குடும்பத்தவர்கள் உள்ளனர், அவர்கள் தங்கள் நேசத்திற்குரியவர்கள் குறித்த பதிலை கோருகின்றனர், அவர்கள் சோதனை சாவடியில் காணாமல்போயிருக்கலாம் அல்லது யுத்தத்தின் இறுதி தருணத்தில் சரணடைந்திருக்கலாம்.

அவர்கள் சரணடைந்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் எல்எல்ஆர்சி முன்னால் சாட்சியமளிக்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் யுத்தவலயத்திலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிக்கு  உயிருடன் வரவில்லை என தெரிவித்தார்.

நாங்கள் இந்த எண்ணிக்கை குறித்தே பேசுகின்றோம்.

நாங்கள் தற்போது திறக்கப்பட்ட மனித புதைகுழிகளுடன் போராடுகின்றோம், 14 மனித புதைகுழிகள் திறக்கப்பட்டு நீதிநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது செம்மணிமனித புதைகுழி குறித்து குறிப்பிடுவேன்.

கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டவேளை தனது வாயை திறந்த சோமரட்ண ராஜபக்சவினால் இந்த விடயம் தெரியவந்தது - 1999 ஜூலை  3ம் திகதி - அந்த திகதியிலிருந்து  அவர்கள் அந்த விடயத்தை கையாள ஆரம்பித்தனர், விசாரணைகளை முன்னெடுத்தனர், புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து 15 மனித எச்சங்களை அகழ்ந்தனர். விசாரணைகள் முடிவடைந்ததும் ஆறு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கை மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு திரும்பிவரவில்லை.

முப்பது வருடங்களாகியும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த  அறிவுறுத்தல்களும் இல்லை.

நாங்கள் குடும்பத்தவர்களை சென்று சந்திக்கும் போது அவர்கள்  இரத்தமாதிரிகளை வழங்கியதாக மரபணு பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கின்றனர், மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை தங்கள் உறவுகள் என அடையாளம் காட்டியவர்கள் உள்ளனர். ஆனால் அதன் பின்னர் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மக்களின் பங்களிப் குறைவாக காணப்படுகின்றது, அச்சுறுத்தல்களே இதற்கு காரணம்.

நிபுணத்துவம் இல்லை, நிபுணர்கள் தேவை.

14 மனித புதைகுழிகள் குறித்து பேசும் போது ஐந்து முக்கியமான மனித புதைகுழிகள் விவகாரத்தில் நான் ஆஜராகியுள்ளேன்.

ஒன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, மற்றையது மன்னார் சதொசா மனித புதைகுழி - 18 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, அவை அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன, பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டன, எலும்பு பகுப்பாய்வு இடம்பெற்றுள்ளது, இன்னமும வெளியாகவேண்டிய அறிக்கைகள் உள்ளன,. 2013 இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகின எவ்வளவு காலம் என நினைத்து பாருங்கள், குடும்பத்தவர்கள் ஒவ்வொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் சமூகமளித்துள்ளனர்.

532626557_2912243092496946_8059451092605

சாதொச மனித புதைகுழி 2018 இல் அடையாளம் காணப்பட்டது, 379  மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, கார்பன் டேட்டிங்  இடம்பெற்றது, ஆய்வுகூட அறிக்கை வெளியானது. ஆனால் அது அர்த்தப்படுத்தப்படவில்லை. நாங்கள் கோரிய அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை எடுத்ததால் அது 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டது, 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சி, எலும்புபரிசோதனை அறிக்கைகள் போன்றவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் நீதிமன்றம் தடமறிதல் செயல்முறைக்கு உத்தரவிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

காணாமல்போனவர்கள் அலுவலகத்தினால் எந்த பயனும் இல்லை. அது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. அது அமைச்சொன்றின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது, அமைச்சின் அறிவுறுத்தலிற்கு ஏற்ப செயற்படவேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் நீதியை பெற்றுதரும் என இன்னமும் சித்தரிக்கின்றார்கள்.

செம்மணி

செம்மணியில் 32 வாரங்கள் மிகச்சிறிய அளவு நிலப்பரப்பினை தோண்டியவேளை  141 மனித எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். சிறிய இடத்தில் இது மிகப்பெரியது.

நாங்கள் அந்த பகுதி முழுவதையும் அகழ் வதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து குறிப்பிடவேண்டும், அங்கு மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது.

எலும்புக்கூடுகள் மனித எச்சங்கள் கண்ணிவெடிகளுடன் கலந்து காணப்படுகின்றன.

இது மிகவும் ஆபத்தான விடயம். எங்களிற்கு இவற்றை கையாள்வதற்கு தொழில்நுட்ப திறன் அவசியம்.

நாங்கள் மண்ணிற்கு கீழே எங்கள் அன்புக்குரியவர்களை தேடுகின்றோம்.

காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர்  உறவினர்கள் களைப்படைந்துவிட்டனர், அவர்கள் பல ஆணைக்குழுக்களின் முன் சென்றுள்ளனர்.

நீதி வழங்குதல் என்பது மிகவும் மெதுவான மந்த கதியிலாள செயற்பாடாக காணப்படுகின்றது.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள்  பதில்களிற்காக காத்திருக்கின்றனர். அவர்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது, தங்கள் நேசத்திற்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது, அவர்களிற்கு கௌரவமான இறுதி சடங்கினை முன்னெடுப்பதற்கான உரிமையுள்ளது.

உண்மையான தகவல்கள்  கட்டுப்படுத்தப்படுகின்றன, தணிக்கைக்கு  உள்ளாகின்றன.

வடக்கில் என்ன நடந்தது நடக்கின்றது என்பது  தெற்கில் உள்ளவர்களிற்கு முழுமையாக தெரியாது. உண்மையை தெரியப்படுத்துவதை அதிகரிக்கவேண்டும்.

உண்மையை  ஏற்றுக்கொள்ளவேண்டும்,

532284287_2912242822496973_8847899177095

இன்றுவரை, யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புக்கொள்ளுதலும் இல்லை, இது எனது சகோதரிக்கு இடம்பெற்றுள்ளது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவோம் என இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு  வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன.

https://www.virakesari.lk/article/222623

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.