Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன?

ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார்.

இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம் பெற்ற நிலையில் திறமையான வீரரான ஸ்ரேயாஸுக்கு அதில்கூட இடமில்லை.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாக வலம்வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும்?

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இளம் வீரர்கள், அனுபவம் மிகுந்த வீரர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சுப்மன் கில்லிடம் அந்தப் பதவி தரப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கான தேர்வாக, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இருக்கிறார்கள். சுப்மன் கில் வருகையால் டாப் ஆர்டரில் அபிஷேக் அல்லது சாம்ஸன் இருவரில் யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரியவில்லை.

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு,சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?

இந்திய அணியின் தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேட்டபோது, அதற்கு அகர்கர் " ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தம்தான், ஆனால், அவரை சேர்த்தால் யாரை அணியில் இருந்து நீக்குவீர்கள்?

அவர் மீதும் தவறு இல்லை, எங்கள் மீதும் தவறு இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆதலால் வாய்ப்புக்காக ஸ்ரேயாஸ் காத்திருக்கவேண்டியதுதான்" எனத் தெரிவித்தார்.

அபிஷேக், ஜெய்ஸ்வால் குறித்து அகர்கர் பேசுகையில் " ஜெய்ஸ்வால் இடம் பெறாதது துரதிர்ஷ்டம்தான். ஆனால், அபிஷேக் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வருகிறார், சிறிது பந்துவீசும் திறமையுடையவர். அந்த வாய்ப்பு இருப்பதால், 6வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தலாம் என்பதால் அவர் இடம் பெற்றார்" எனத் தெரிவித்தார்.

கில் இடம் பெற்றது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் " டி20 உலகக் கோப்பைக்குப்பின் கில்லுக்கு டி20 அணியில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில்தான் கடைசியாக கில் துணைக் கேப்டன் பொறுப்பில் என்னுடன் ஆடினார்.

அதன்பின் கில் டெஸ்ட் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராஃபியிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார். இதனால் அந்நாட்களில் அவரின் பெயரை பரிசீலிக்க முடியவில்லை. இப்போது அணிக்குள் கில் மீண்டும் வந்தது மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்தார்.

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுபவர்களின் பட்டியலை மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

ஸ்ரேயாஸ் குறித்து அஸ்வினின் கணிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ஊகப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரராக இருந்தபோதும், ஷிவம் துபே இடம் பெற்றால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று பேசியிருந்தார்.

அவரின் கணிப்பிலிருந்து சற்றும் மாறாமல் ஃபார்மில் இல்லாத துபே இடம்பெற்றார், வெற்றிக் கேப்டனாக ரசிகர்களால் புகழப்படும் ஸ்ரேயாஸ் கண்டு கொள்ளப்படவில்லை.

ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்படக்கூடியவரா?

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான பேட்டர், பீல்டர், கேப்டனாக ஐபிஎல் தொடர்களிலும், இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்திருக்கிறார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் இரு அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், இருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல ஆட்டங்களில் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வழங்கியபோதிலும் "அன்சங் ஹீரோவாகவே" வலம்வந்தார். ஸ்ரேயாஸ் இன்னும் எதையெல்லாம் நிரூபித்தால் இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை.

2025 ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் 17போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 50 ரன்கள் சராசரியும், 175 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார், இதில் 6 அரை சதங்களும் அடங்கும். கடந்த 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து 350க்கும் மேல் ரன்களைக் குவித்தார் ஸ்ரேயாஸ்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஸ்ரேயாஸ் 26 டி20 போட்டிகளில் விளையாடி 949 ரன்கள் குவித்து 179 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையையும் வென்றது. டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்திய அணியில் கடைசியாக 2023, டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடினார், 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகியும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பு

ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், GETTY IMAGES

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் தளத்தில் "கடந்த ஆண்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அளவுக்கு எந்த வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் இல்லை. ஸ்ரேயாஸை யாருக்கோ பிடிக்கவில்லை என்பது மட்டும தெரிகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் " ஸ்ரேயாஸ் டி20 அணியில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மட்டுமல்லாமல் கேப்டனுக்குரிய தகுதிப்பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இருப்பவர். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு பொறுமைதான் முக்கியமான கருவியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

வழக்கமான வீரர்கள்

நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் ஃபார்மிலேயே இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சாம்ஸன், ஜிதேஷ் சர்மா என இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கீழ்வரிசையிலும், நடுவரிசையிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடக் கூடியவர், நல்ல ஃபினிஷிங் தரக்கூடியவர், சாம்ஸன் தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்.

இதில் டாப் ஆர்டரில் அபிஷேக், கில் களமிறங்கினால், சாம்ஸன், ஜிதேஷ் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை அபிஷேக் சர்மா அமரவைக்கப்பட்டால் சாம்ஸன், கில் கூட்டணி டாப்ஆர்டராக களமிறங்கலாம். ஜிதேஷ் அமரவைக்கப்பட்டு கூடுதலாக பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் வரலாம்.

இரு தமிழக வீரர்கள்

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஆல்ரவுண்டர்களாகவும், நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்த ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தால், வேகப்பந்துவீச்சில் ராணா அமரவைக்கப்பட்டு அர்ஷ்தீப், பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் வருண், அக்ஸர், குல்தீப் இடம் பெறலாம்.

ரிசர்வ் வீரர்களாக 5 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை, ஆனால், ரிசர்வ் வீரர்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சுப்மன் கில் வருகை ஏன்?

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

சுப்மன் கில் கடைசியாக 2024 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 தொடரில்கூட துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சாம்பியன்ஸ் டிராஃபி, இங்கிலாந்துக்கு எதிரான சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது போன்றவற்றில் கில்லின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்புக் கிடைத்தது.

கடந்த ஐபிஎல் சீசனில்கூட கில் 650 ரன்கள் குவித்து 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில்(துணைக் கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்ஸன்

ரிசர்வ் வீரர்கள்( பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்)

17-வது ஆசியக் கோப்பை

17-வது ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி நகரங்களில் செப்டம்பர் 9 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பு நாடுகளான நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை தேர்வு பெற்றநிலையில், இந்த முறை 2024 ஆசிய ப்ரீமியர் கோப்பையில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் அணிகளும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களின் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

இந்தியா-பாக். போட்டி

இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், 14ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஓமன் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0r7jjp1jxro

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது.

தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன.

இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது.

குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன.

திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பியனான இந்தியா, எட்டு கிண்ணங்களை ஆசிய கிண்ண வரலாற்றில் பெற்றுள்ள அணியாகும்.

இலங்கை 6 தடவைகளும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmfbwx9pl00b9o29nukep9rc9

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ணம் 2025 : போட்டி நடுவர்கள் குறித்த அட்டவணை அறிவிப்பு!

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 09:36 AM

image

ஆசியக் கிண்ணம் 2025 போட்டிக்கான நடுவர்கள் தொடர்பான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணப்போட்டி, செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 9) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களாக ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஆண்டி பைக்ராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

குழு டீ  உள்ளடங்கியுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் சீனா  ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டியுடன் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்று (செப்டம்பர் 9 ) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

12 போட்டிகள் கொண்ட குழு நிலைக்கான போட்டி நடுவர்களின் நியமனங்களை ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.

போட்டி நடுவர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுவர்களாக

* அஹ்மத் பக்டீன் (ஆப்கானிஸ்தான்)

* ஆசிப் யாகூப் (பாகிஸ்தான்)

* ஃபைசல் அப்ரிடி (பாகிஸ்தான்)

* காஸி சோஹெல் (பங்களாதேஷ்)

* இஜாத்துல்லா சஃபி (ஆப்கானிஸ்தான்)

* மசுதூர் ரஹ்மான் (பங்களாதேஷ்)

* ரவீந்திர விமலசிரி (இலங்கை)

* ரோஹன் பண்டிட் (இந்தியா)

* ருசிரா பல்லியகுருகே (இலங்கை)

* வீரேந்தர் ஷர்மா (இந்தியா)

ஆசிய கிண்ணம் 2025 - குழு நிலைக்கான போட்டி அதிகாரிகளின் நியமனங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

செவ்வாய், 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி - ஆப்கானிஸ்தான் எதிர் ஹொங்கொங் சீனா ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது.

கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா.

தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி

நான்காவது நடுவர்: ரவீந்திர விமலசிறி

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

புதன், 2025 செப்டம்பர் 10ஆம் திகதி - இந்தியா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, துபாயயில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது.

கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி

தொலைக்காட்சி நடுவர் : ருச்சிர பல்லியகுருகே

நான்காவது நடுவர் : மசுதூர் ரஹ்மான்

போட்டி நடுவர் : ஆண்டி பைக்ராஃப்ட்

வியாழக்கிழமை, 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி -  பங்களாதேஷ் எதிர் ஹொங்காங் சீனா மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் ரோஹன் பண்டிட்

தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப்

நான்காவது நடுவர்: பைசல் அஃப்ரிடி

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 12ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில்  மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: மசுதூர் ரஹ்மான் மற்றும் அஹ்மத் பக்தீன்

தொலைக்காட்சி நடுவர்: காசி சோஹெல், நான்காவது நடுவர்: ருசிர பள்ளியகுருகே

போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட்

சனிக்கிழமை, 2025 செப்டம்பர் 13ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் இலங்கை ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: ரோஹன் பண்டிட் மற்றும் பைசல் அப்ரிடி

தொலைக்காட்சி நடுவர்: வீரேந்திர சர்மா

நான்காவது நடுவர்: ஆசிப் யாகூப்

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

ஞாயிறு, 2025 செப்டம்பர் 14ஆம் திகதி - இந்தியா எதிர் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில்  மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே மற்றும் மசுதுர் ரஹ்மான்

தொலைக்காட்சி நடுவர்: அஹ்மத் பக்தீன்

நான்காவது நடுவர்: இசதுல்லா சஃபி

போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட்

திங்கள், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி - ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 4:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: வீரேந்திர சர்மா மற்றும் ஆசிப் யாகூப்

தொலைக்காட்சி நடுவர்: ரவீந்திரன் விமலசிறி

நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட்

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

திங்கள், 2025 செப்டம்பர் 15ஆம் திகதி - இலங்கை எதிர் ஹொங்காங் சீனா ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி

தொலைக்காட்சி நடுவர்: மசுதூர் ரஹ்மான்

நான்காவது நடுவர்: அஹ்மத் பக்தீன்

போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட்

செவ்வாய், 2025 செப்டம்பர் 16ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

கள நடுவர்கள்: பைசல் அப்ரிடி மற்றும் ரவீந்திர விமலசிறி

தொலைக்காட்சி நடுவர்: ரோஹன் பண்டிட்

நான்காவது நடுவர்: வீரேந்தர் சர்மா

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

புதன், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: அஹ்மத் பக்தீன் மற்றும் ருச்சிர பல்லியகுருகே

தொலைக்காட்சி நடுவர்: இசதுல்லா சஃபி

நான்காவது நடுவர்: காசி சோஹல்

போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட்

வியாழன், 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா

தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி

நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட்

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 19ஆம் திகதி - இந்தியா எதிர் ஓமன் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் பைசல் அப்ரிடி

தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப்

நான்காவது நடுவர்: வீரேந்திர சர்மா

போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

https://www.virakesari.lk/article/224544

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் ஆப்கான் அபார வெற்றி

Published By: Digital Desk 3

10 Sep, 2025 | 04:49 PM

image

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு ஆரம்பமாகியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங்கை சந்தித்தது. 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

ஆப்கானிஸ்தான் சார்பில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 8 ஓட்டங்களுடனும் இப்ராகிம் ஜட்ரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து முகமது நபி 33 ஓட்டங்களுடனும் குல்படின் நைப் 5 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தைவிட்டு வெளியேறினர். 13 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை செடிகுல்லா அடலும், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் தூக்கி நிறுத்தினர்.

குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஒமர்ஜாய், வேகப்பந்து வீச்சாளர் ஆயுஷ் சுக்லாவின் ஓவரில் ‘ஹெட்ரிக்’ சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து தனது முதலாவது அரைசதத்தை 20 பந்துகளில் எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு முகமது நபி, குல்படின் நைப் தலா 21 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஒமர்ஜாய் 53 ஓட்டங்களின் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 3 முறை ஆட்டமிழப்பிலிருந்து தப்பிய செடிகுல்லா அடல் 73 ஓட்டங்களுடன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 189 ஓட்டங்களை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஹயாத் (39 ஓட்டங்கள்), அணித் தலைவர் யாசிம் முர்தசா (18 ஓட்டங்கள்) ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பரூக்கி, குல்படின் நைப் ஆகியுார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/224749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை: இந்தியாவிடம் சண்டையின்றி சரணடைந்தது யுஏஇ - பாகிஸ்தானுக்கு போக்கு காட்டிய அணியை சுருட்டியது எப்படி?

INDIA VS UAE

Getty Images

கட்டுரை தகவல்

  • தினேஷ்குமார்.எஸ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, யூஏஇ அணிகள் மோதின. நீண்ட காலத்துக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஓப்பனர் இடத்தை கில்லுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சாம்சன், விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும் சேர்க்கப்பட்டு, பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.

துபாய் ஆடுகளத்தில் 175 - 180 ரன்களே வெற்றிக்கு போதுமானது எனக் கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் சரியான முடிவெடுத்தார்.

நெருக்கடி கொடுத்த பும்ரா

பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது

SAJJAD HUSSAIN/AFP via Getty Images பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது

ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் யூஏஇ அணி, 10 ரன்கள் எடுத்து நேர்மறையாக இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசிய ஷரஃபு, பும்ரா, அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார்.

17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஷரஃபு, பும்ராவின் அற்புதமான யார்க்கரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 2024 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பிய பும்ரா, சில பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தாலும் பிரமாதமாக பந்துவீசினார்.

யூஏஇ அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பவர்பிளே கட்டத்திலேயே பும்ராவை மூன்று ஓவர்களை சூர்யகுமார் யாதவ் வீசச் செய்தார்.

ஒரு விக்கெட் மட்டுமே பும்ரா எடுத்தாலும், அவர் ஒருமுனையில் கொடுத்த நெருக்கடியாலே பிற வீரர்கள் விக்கெட் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஸோஹைப், வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரிலேயே, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஃபிலைட் செய்து வீசப்பட்ட பந்தை இன்சைட் அவுட் ஆட முயன்று, பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பேட்டிங் வரிசையை நொறுக்கிய குல்தீப்

குல்தீப் யாதவ்

SAJJAD HUSSAIN/AFP via Getty Images

அதுவரை பெரும்பாலும் எதிர்முனையிலேயே அமைதியாக நின்றுகொண்டிருந்த கேப்டன் முகமது வாசீம், பும்ரா வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில், மூன்று பவுண்டரிகள் அடித்து, இரட்டை இலக்கத்துக்கு நகர்ந்தார்.

47 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த யூஏஇ அணியின் பேட்டிங் முதுகெலும்பை குல்தீப் யாதவ் மொத்தமாக உடைத்துப்போட்டார். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் ராகுல் சோப்ரா, முகமது வாசீம், ஹர்ஷிட் கௌசிக் என மூன்று விக்கெட்களை கைப்பற்றி, 50 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழக்கும் நிலைக்கு யூஏஇ அணியை தள்ளினார்.

முதலில் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று, லாங் ஆன் திசையில் கில்லிடம் கேட்ச் கொடுத்து சோப்ரா ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்து, கேப்டன் வாசீம் எல்பிடபிள்யூ ஆனார். ஓவரின் கடைசி பந்தில் கூக்ளி வீசி, ஹர்ஷிட் கௌசிக்கின் ஸ்டம்புகளை பதம்பார்த்தார்.

INDIA VS UAE

Getty Images குல்தீப் யாதவ்

கடைசி கட்டத்தில் அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் கான், 2 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் ஆல்ரவுண்டர் துபேவின் மிதவேகப் பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.

அடுத்தடுத்த ஓவர்களில் யூஏஇ அணியின் டெயிலெண்டர்கள் விளையாடிய விதம், அதுவொரு கத்துக்குட்டி அணி என்பதை நிரூபித்தது. எந்தவொரு திட்டமிடலும் இன்றி, மனம்போன போக்கில் பேட்டை சுழற்றி விக்கெட்டை கோட்டைவிட்டனர்.

இந்திய வம்சாவளி வீரரான சிம்ரன்ஜீட் சிங், 1 ரன்னில் அக்சர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில், பராசர், ஜுனைட் சித்திக் ஆகியோரின் விக்கெட்டை துபே கைப்பற்ற, கடைசி விக்கெட்டாக ஹைதர் அலியை ஆட்டமிழக்க செய்து இன்னிங்ஸை முடித்துவைத்தார்.

ஒருகட்டத்தில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த யூஏஇ அணி, மோசமான பேட்டிங்கால் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் முதல் ஆட்டத்தில், யூஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை யூஏஇ அணி படைத்தது.

INDIA VS UAE

Getty Images ஜஸ்ப்ரித் பும்ரா

சூர்யகுமாரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தருணம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்களை கைப்பற்றி, தனது திறமையை நிரூபித்தார்.

குல்தீப் மட்டுமின்றி, அக்சர், வருண் சக்கரவர்த்தி என அனைத்து சுழலர்களும் விக்கெட் கைப்பற்றி அசத்தினர். பும்ரா, ஹார்திக் பாண்ட்யாவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய துபே, மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

துபே வீசிய இரண்டாவது ஓவரில், கிரீஸுக்கு வெளியே சென்ற ஜுனைட் சித்திக்கை சாம்சன் ரன் அவுட் செய்தார். ஆனால், பந்துவீச ஓடி வருகையில், துபேவின் துண்டு (rag) கீழே விழுந்தால், கவனம் தொலைத்ததாக ஜுனைட் சித்திக் முறையிடவே, அப்பீலை வாபஸ் பெற்றார் சூர்யகுமார் யாதவ்.

INDIA VS UAE

Getty Images வருண் சக்ரவர்த்தி

58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஓப்பனர்கள் அபிஷேக் சர்மாவும் கில்லும் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஹைதர் அலி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு, புயல் வேகத்தில் இலக்கை விரட்டினார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு மறுவருகை நிகழ்த்திய கில்லும் தன் பங்குக்கு, அதிரடியை வெளிப்படுத்தினார்.

ஜுனைட் சித்திக் பந்தில் பிரமாண்டமான சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நெட் ரன் ரேட்டை (NRR) அதிகப்படுத்தும் நோக்கத்துடன் விளையாடிய இந்திய அணி, 4.3 ஓவரில், வெற்றிக்கான ரன்களை எட்டியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேகமான சேஸாக, இந்த ஆட்டம் மாறியது.

சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடிய யூஏஇ அணி, மோசமான முறையில் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.

7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான அதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆதிக்கத்தை பறைசாற்றுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு, இரு அணிகளும் முதல்முதலில் மோதும் கிரிக்கெட் ஆட்டம் என்பதால், உலகம் முழுக்க இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwylwlk5wewo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ணம் : ஹொங்கொங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட பங்களாதேஷ்

12 Sep, 2025 | 06:32 AM

image

ஆசியக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற குழு ‘ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், கொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அபுதாபியில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் - ஹொங்கொங் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதையடுத்து ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஹொங்கொங் அணி சார்பாக ஷீஷான் அலி, நிஷாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

அவர்கள் முறையே 30 ஓட்டங்கள், 42 ஓட்டங்கள் மற்றும் 28 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 

இந்த நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் ஹொங்கொங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

பங்களாதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் அரைச் சதமடிமத்து அதிகபட்சமாக 59 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

https://www.virakesari.lk/article/224867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை 2025 எப்போது, எங்கே நடக்கும்? - முழு விவரம்

2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியது.

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்துவருகிறது. இந்தநிலையில், எந்த அணி எந்த பிரிவில் உள்ளது, இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் எப்போது, முக்கிய அணிகளின் பலம், பலவீனம் உள்ளிட்ட ஆசிய கோப்பை குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.

ஆசிய கோப்பை வரலாறு

2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

ஆசிய கோப்பை முதல்முதலில் 1984 இல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையே நடத்தப்பட்டது. 2004 முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த நிலையில், 2020-ல் கொரோனா காரணமாக தடைப்பட்டது.

கடைசியாக 2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி,10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுவரை இந்திய அணி, எட்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அடுத்தபடியாக, இலங்கை அணி ஆறு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டா? டி20 கிரிக்கெட்டா?

ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒருநாள் போட்டியாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை, சமீப காலமாக ஒருநாள், டி20 என மாறிமாறி நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து நடைபெறும் உலகக் கோப்பை எந்த வடிவம் (format) என்பதைப் பொறுத்து ஆசிய கோப்பையின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. 2026இல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு இந்த ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது.

ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. துணை அணிகளுக்கான 2024 ACC ஆடவர் பிரீமியர் கோப்பையில், முதல் மூன்று இடங்களை பிடித்த யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை எப்போது?

செப்டம்பர் 14 அன்று , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 14 அன்று, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

எட்டு அணிகளும் இரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யூஏஇ, ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன. .

குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தமது குரூப்பில் இடம்பெற்றுள்ள பிற அணிகளுடன் ஒருமுறை மோதும். குரூப் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த நான்கு அணிகளும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும்.

அந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள், இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என இந்திய அணி அறிவித்துள்ளது.

அதேசமயம், உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகள், சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் விளையாடும் என தெளிவுபடுத்தியுள்ளது.

செப்டம்பர் 14 அன்று (ஞாயிற்றுக்கிழமை) துபையில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும் பட்சத்தில் இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதும் சூழல் ஏற்படும்.

ஆசிய கோப்பையில், இதுவரை ஒருமுறை கூட இரு அணிகளும் ஃபைனலில் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது?

உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக பும்ரா டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக பும்ரா டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, டி20 தரவரிசையில் முதன்மை பேட்டராக உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வேலைப்பளுவை கருத்தில்கொண்டு 3 டெஸ்ட்களில் மட்டும் விளையாடிய பும்ரா, உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, நட்சத்திர வீரர்கள் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத நிலையில், புத்தம் புதிய அணுகுமுறையுடன் புத்தம் புதிய அணியாக களமிறங்குகிறது.

சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணி மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது.

எப்போது, எங்கே நடக்கும்?

ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

17-வது ஆசிய கோப்பை போட்டி, செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் இந்த போட்டியின் (Tournament) ஆட்டங்கள் துபை, அபுதாபியில் நடக்கின்றன.

உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன. அதாவது இந்திய நேரப்படி இரவு 8.30 மணி ஆகும்.

ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் (Double-Header) நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி முதல் ஆட்டம் மாலை 4 மணிக்கும் இரண்டாவது ஆட்டம் 6.30 மணிக்கும் (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி மற்றும் இரவு 8 மணி) தொடங்குகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது ஏன்?

சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தமுறை ஆசிய கோப்பையை இந்தியா நடத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எல்லா ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாக பிரச்னைகள் தொடர்வதால், இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் அந்த நாடு விளையாட முடியாத சூழல் உள்ளது.

பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல, ஏற்பாடு வசதிகளை கருத்தில்கொண்டு, எல்லா ஆட்டங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகின்றன.

கவனம் ஈர்க்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்

யூஏஇ அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யூஏஇ அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங்.

ஆசிய கோப்பையில் இந்தமுறை, இந்திய வம்சாவளி வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளில் தலா ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர ஹாங்காங் அணியிலும் 3 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யூஏஇ(ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் கவனம் ஈர்த்துள்ளார்.

பஞ்சாபில் பிறந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். கொரோனா காலத்தில் துபையில் மாட்டிக்கொண்ட சிம்ரன்ஜீத் சிங், யூஏஇ அணியையே தனது தேசிய அணியாக மாற்றுக்கொண்டுவிட்டார்.

யூஏஇ அணியின் பேட்டர் ஆர்யான்ஷ் சர்மாவும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய வம்சாவளி வீரர்கள் வரிசையில் உள்ளார்.

உத்தரபிரதேசம் காஸியாபாத்தை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே, குடும்பத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

புனேவை பூர்விகமாக கொண்ட பராஷர் மீதும் கிரிக்கெட் உலகின் பார்வை திரும்பியுள்ளது. நான்கு வயதிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய அவர், தற்போது யூஏஇ அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.

பஞ்சாபின் லூதியானாவில் இருந்து ஓமனுக்கு குடிபெயர்ந்த ஜடிண்டர் சிங், ஓமன் அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர் மீது கிரிக்கெட் உலகின் பார்வை விழுந்துள்ளது.

போபாலில் இருந்து கிளம்பிச் சென்று தற்போது ஓமன் அணியின் லெக் ஸ்பின்னராக உள்ள ஸ்ரீவஸ்தவாவும் அந்நாட்டு ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற வீரராக மாறியுள்ளார்.

போட்டி அட்டவணை

செப். 10, 14, 19ஆம் தேதிகளில் இந்தியாவுக்கான போட்டிகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப். 10, 14, 19ஆம் தேதிகளில் இந்தியாவுக்கான போட்டிகள் உள்ளன.

இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு)

  • செப்டம்பர் 10 : இந்தியா Vs யூஏஇ, துபை– இரவு 8.00 IST

  • செப்டம்பர் 14: இந்தியா Vs பாகிஸ்தான், துபை– இரவு 8.00 IST

  • செப்டம்பர் 19: இந்தியா Vs ஓமன் , அபுதாபி– இரவு 8.00 IST

பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு)

  • செப்டம்பர் 12: பாகிஸ்தான் Vs ஓமன், துபை – இரவு 8.00 IST

  • செப்டம்பர் 14: பாகிஸ்தான் Vs இந்தியா, துபை– இரவு 8.00 IST

  • செப்டம்பர் 17: பாகிஸ்தான் Vs ஐக்கிய அரபு அமீரகம், துபை– இரவு 8.00 IST

சூப்பர் ஃபோர் அட்டவணை

  • செப் 20: B1 Vs B2 (துபை) - இரவு 8:00 IST

  • செப் 21: A1 Vs A2 (துபை) - இரவு 8:00 IST

  • செப் 23: A2 Vs B1 (அபுதாபி) - இரவு 8:00 IST

  • செப் 24: A1 Vs B2 (துபை) - இரவு 8:00 IST

  • செப் 25: A2 Vs B2 (துபை) - இரவு 8:00 IST

  • செப் 26: A1 Vs B1 (துபை) - இரவு 8:00 IST

இறுதிப்போட்டி எப்போது?

  • செப் 28: ஃபைனல் (துபை) - இரவு 8:00 IST

ஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி கோப்பை வெல்லும் அணிக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி) இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 150,000 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி) கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

களமிறங்கும் வீரர்கள் யார் யார்?

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குறிது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குறிது.

இந்திய அணி:

சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்

பாகிஸ்தான் அணி:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது , ஃபஹீம் அஷ்ரப் , ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப் , ஹசன் அலி, ஹசன் நவாஸ் , ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா , முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது சவாஸ், முகமது நவாஸ், முகமது வஸீம் ஜுனியர், ஃபர்ஹான், சைம் அயூப் , சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம்

இலங்கை அணி:

சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, கமில் மிஷாரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஸ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj9z23kmmw3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது

Published By: Vishnu

13 Sep, 2025 | 01:55 AM

image

2025 ஆசிய கோப்பையின் 04வது போட்டியாக 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஓமன் அணியை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

துபாயில் வெள்ளிக்கிழமை (12) தொடங்கிய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டை தெரிவு செய்யத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.

முகமது ஹாரிஸ் 43 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார், சாஹிப்சாதா ஃபர்ஹான் 29 ஓட்டங்கள், ஃபக்கர் ஜமான் ஆட்டமிழக்காமல் 23* ஓட்டங்கள் எடுத்தார், ஹசன் நவாஸ் 09 ஓட்டங்கள் எடுத்தார், பாகிஸ்தான் அணிக்காக முகமது நவாஸ் 19 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் ஓமன் அணியினர் ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் தலா 03 விக்கெட்டுகளையும், முகமது நதீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆமிர் கலீம் 13 ஓட்டங்கள் எடுத்தார், கேப்டன் ஜதிந்தர் சிங், சுஃப்யான் மெஹ்மூத் மற்றும் ஷா பைசல் தலா ஒரு ஓட்டங்கள் எடுத்தார்கள், ஹம்மத் மிர்சா 27 ஓட்டங்கள் எடுத்தார், முகமது நதீம் 3 ஓட்டங்கள் எடுத்தார், விநாயக் சுக்லா 2 ஓட்டங்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், சுஃபியான் முகீம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ், அப்ரார் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/224952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி

Published By: Vishnu

13 Sep, 2025 | 11:51 PM

image

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

140 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 03 ஓட்டங்கள், குசல் பெரேரா 09 ஓட்டங்கள், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர்.

மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கெப்டன், பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது.

அதன்படி, களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், தௌஹித் ஹிரிடோய் 8 ஓட்டங்களையும், மஹேதி ஹசன் 9 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும் , ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர்.

தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் எந்த ரன்களையும் எடுக்க முடியவில்லை.

பந்துவீச்சில், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/225020

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmfjrvrwz00eaqplp154r6vrb

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Drinks

6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup

Pakistan FlagPakistan (10/20 ov) 49/4

India FlagIndia

Pakistan chose to bat.

Current RR: 4.90

• Last 5 ov (RR): 15/2 (3.00) Live Forecast: PAK 131

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Innings break

6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup

Pakistan FlagPakistan(20 ov) 127/9

India FlagIndia

Pakistan chose to bat.

Current RR: 6.35 • Last 5 ov (RR): 49/3 (9.80)

PAK 20.68% • IND 79.32%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைகுலுக்காத வீரர்கள்: டாஸ் முதல் பரிசளிப்பு வரை நீடித்த இறுக்கம் - பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபாயில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 முறை பாகிஸ்தானை வீழ்த்தி (11-3) தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் முதல் கடைசியில் கைகுலுக்காதது வரையிலும் விளையாட்டைத் தாண்டிய ஒருவித இறுக்கம் இரு அணி வீரர்களிடையே தென்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சி வரையிலும் அது நீடித்தது.

பஹல்காம் தாக்குதல் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பாகிஸ்தான் பயிற்சியாளர் என்ன சொன்னார்?

நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமர், டாஸ் நிகழ்விலேயே தொடங்கிவிட்டது. இரு அணி கேப்டன்களும் நேருக்கும் நேர் பார்ப்பதை தவிர்த்ததோடு சம்பிரதாயத்துக்கு கைகுலுக்குவதையும் கூட தவிர்த்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 8 ஆட்டங்களில் 7 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்ற போதிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, பேட்டிங்கை தேர்வுசெய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளும் தத்தமது முந்தைய ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடனே களமிறங்கினர்.

பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்புக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் ரோஹித், கோலி, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியும் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத ஓர் இளம் அணியுடன் இம்முறை களமிறங்கியது.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பவர்பிளேவில் பட்டையை கிளப்பிய பாண்ட்யா-பும்ரா

சல்மான் அகாவின் டாஸ் முடிவு தவறு என்பது ஆட்டத்தின் முதல் பந்திலேயே நிரூபணமானது. இன்னிங்ஸை 'வைடு'டன் தொடங்கிய பாண்ட்யா, அடுத்த பந்தில், அதிரடி இளம் பேட்டர் சைம் அயுப்பை 'கோல்டன் டக்' ஆக்கினார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட லென்த் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆட முயன்ற சைம், சரியான டைமிங் இல்லாததால் பாயிண்ட் திசையில் பும்ராவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது 'கோல்டன் டக்'.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய, அதிரடி பேட்டர் முகமது ஹாரிஸ், பும்ரா பந்தில் பிக்-அப் ஷாட் விளையாடுகிறேன் என்று, டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக, பாண்ட்யாவும் பும்ராவும் ஒருவர் பந்தில் மற்றொருவர் கேட்ச் பிடித்து தங்கள் நன்றியை பரிமாறிக் கொண்டனர்.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 42/2

முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்ட்யா இரண்டாவது ஓவரில் லைனையும் லெங்த்தையும் தவறவிட, ஸமான் இரு பவுண்டரிகளை விளாசினார். தனது இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய முழு நீள பந்தை, ஃபர்ஹான் லாங்-ஆன் திசையில் ஒரு அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு, சோர்ந்து போயிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை தலைநிமிரச் செய்தார். முதல் நான்கு ஓவர்களில், ஆடுகளத்தில் கிடைத்த ஸ்விங்கை பும்ராவும் பாண்ட்யாவும் சரியாகப் பயன்படுத்தி வீசினர்.

கடந்த ஆட்டத்தை போலவே இந்தமுறையும் பவர்பிளேவிலேயே மூன்று ஓவர்களை பும்ரா வீசி முடித்தார். தட்டுத்தடுமாறி இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஸமான், ஃபர்ஹான் கைகொடுக்க பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் என்ற நிலைக்கு நகர்ந்தது.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மும்முனை சுழலில் சிக்கிய பாகிஸ்தான்

பவர்பிளேவுக்கு பிறகு இருமுனையும் சுழல் தாக்குதலை கையிலெடுத்தார் சூர்யகுமார் யாதவ். கிரீஸில் இருந்து இறங்கிவந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆடிக் கொண்டிருந்த ஸமான், அக்சர் படேல் பந்தில் அதேபோல விளையாடி சிக்ஸர் அடிக்க முயன்று, லாங்-ஆன் திசையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய சுழலர்களின் பந்துகள் உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்தில், பாகிஸ்தான் பேட்டர்கள் குத்துமதிப்பாக விளையாடுவதை பார்க்க முடிந்தது.

குறைவேக பிட்ச் என்பதால், வழக்கமாக வேகமாக வீசும் அக்சர் படேல் கூட, வேகத்தை மாற்றி மாற்றி வீசினார். முதல் ஓவரில் ஸமான் விக்கெட்டை தூக்கிய அக்சர், இரண்டாவது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை பெவிலியனுக்கு அனுப்பினார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

ஒன்றிரண்டாக ரன் சேர்க்க தவறிய பாகிஸ்தான்

ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஃபர்ஹான், 12-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த அனுகூலத்தை பார்த்த சூர்யகுமார் யாதவ், நான்காவது சுழலராக அபிஷேக் சர்மாவை கொண்டுவந்தார். கடந்த ஆட்டத்தில் யூஏஇ அணியை நிலைகுலைய செய்த குல்தீப், இந்த ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டாக, அபாயகரமான பேட்டர் ஹசன் நவாஸை வீழ்த்தினார். கேப்டன் சல்மான் அகா போலவே, தேவையின்றி ஸ்லாக் ஸ்வீப் ஆடப் பார்த்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர்.

ஹசன் நவாஸை அனுப்பி வைத்த கையோடு, அடுத்த பந்திலேயே இன்னொரு நவாஸை (முகமது) எல்பிடபிள்யூ ஆக்கினார் குல்தீப். இந்திய சுழலர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான பந்துகளை ஸ்டம்ப் லைனிலேயே வீசினர். கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து விளையாடி ஓரிரு ரன்களாக சேர்க்கும் திறனற்றவர்களாக பாகிஸ்தான் அணியினர் காணப்பட்டனர்.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஹீன் அஃப்ரிடி

பாபர், ரிஸ்வான் இல்லாத வெறுமையை பாகிஸ்தானின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்த ஃபர்ஹான் 40 ரன்களுக்கு லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து, குல்தீப்பின் 3-வது இரையாக மாறினார். 20 ஓவர்களை முழுமையாக விளையாடி 100 ரன்களை பாகிஸ்தான் கடக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஷஹீன் ஷா அஃப்ரிடி, 2 சிக்சர்களை வெளுத்தார்.

தனது கடைசி ஓவரில் நோ பால் உள்பட 12 ரன்களை விட்டுக்கொடுத்த பும்ரா, ஸ்பெல்லின் கடைசி பந்தில் முகீம் (10) விக்கெட்டை தூக்கினார். குல்தீப், அக்சர் வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் தன் பங்குக்கு ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் விக்கெட்டை கைப்பற்றினார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் பாண்ட்யா பந்துவிச்சில் அஃப்ரிடி மேலும் 2 சிக்ஸர்களை அடிக்க, பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.

கடைசி கட்டத்தில் அஃப்ரிடி (33*), முகீம் (11) அதிரடி கைகொடுத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். மொத்தமாக 20 ஓவர்களில் 63 பந்துகளை டாட் பந்துகளாக இந்தியா வீசியது.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பவர்பிளேவில் பாகிஸ்தானை பதம் பார்த்த அபிஷேக் சர்மா

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு அபிஷேக் சர்மா, நம்ப முடியாத தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். முழு நீளத்தில் ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் செய்த அவர், அடுத்த பந்தை கவர் திசையில் அநாயசமாக சிக்ஸருக்கு அனுப்பினார். பேட்டிங்கில் சொதப்பிய சைம் அயுப், அதற்கு பரிகாரமாக ஒரு அட்டகாசமான கேரம் பந்தில் கில் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து இறங்கிவந்து இரு பவுண்டரிகளை விளாசிய கில், மூன்றாவது முறையும் முயன்று ஸ்டம்பிங் ஆனார்.

நேரம் செல்லசெல்ல பிட்ச் சுழலுக்கு சாதமாக மாறும் என்பதை புரிந்துகொண்ட அபிஷேக் ஷர்மா, ஷஹீன் பந்துவீச்சை குறிவைத்து தாக்கினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பாயிண்ட் திசையில் பந்தை வெட்டி பவுண்டரி அடித்த அவர், அதே ஓவரில் மிட் விக்கெட் திசையில் பிரமாதமான ஒரு சிக்ஸரை அடித்தார். தனது இரண்டாவது ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை வழங்கிய சைம் அயுப், அடுத்த பந்திலேயே அபாயகரமான அபிஷேக் சர்மா (31) விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங் பாடமெடுத்த சூர்யாகுமார்-திலக் ஜோடி

தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களை தாண்டியதில்லை என்ற குறையை போக்கும் திட்டத்துடன் களம்புகுந்தார். ஆறாவது ஓவரில் முகமது நவாஸ் ஓவரை குறிவைத்த திலக் வர்மா, 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் குவித்து, பவர்பிளேவில் இந்திய அணி 60 ரன்களை கடக்க உதவினார். பாகிஸ்தான் பேட்டர்கள் போல பவுண்டரி, சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல், ஓடி ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர்.

திலக் வர்மா-சூர்யகுமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரார் அஹமது சிக்கனமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டும் கொடுத்து தன் கோட்டாவை முடித்தார். டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரி வைத்துள்ள திலக் வர்மா, சைனாமேன் சுழலர் முகீம் பந்தில் அதிரடியாக சிக்ஸரை விளாசினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக குறைவேக ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பாடம் எடுக்கும் விதமாக இந்திய பேட்டர்கள் விளையாடினர்.

30 ரன்களில் திலக் வர்மா கொடுத்த எளிமையான காட் & பவுல்ட் (caught & bowled) வாய்ப்பை முகமது நவாஸ் கோட்டைவிட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத திலக், சைம் அயுப் வீசிய அடுத்த ஓவரிலேயே பவுல்டானார்.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற குல்தீப்

இடக்கை பேட்டர் என்றால் ஆஃப் பிரேக், வலக்கை பேட்டர் என்றால் கேரம் பந்து என்ற வியூகத்துடன் சைம் வீசினார். 13-வது ஓவர் முடிவில் இந்தியா 100 ரன்களை எட்டியது. முகமது நவாஸின் ஓவரில் பேக்புட்டில் இரண்டு பவுண்டரிகளை வெட்டிய சூர்யகுமார் யாதவ், வெற்றிக்கு தேவையான ரன்களை 18 ஆக குறைத்தார். சைம் அயுபின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் துபே இறங்கிவந்து கோடு போட்டது போல ஒரு மகத்தான் சிக்ஸர் விளாச, வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 16-வது ஓவரில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், முகீம் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்ஸர் அடித்து, சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை முடித்துவைத்தார். சூர்யகுமார் யாதவ், தனக்கு தானே கொடுத்து கொண்ட பிறந்தநாள் பரிசாக இந்த இன்னிங்ஸ் அமைந்த்தது.

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசிய போதும், பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் ருத்ர தாண்டவத்தால் வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்ட இந்திய அணி, மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் பேட்டிங் கைகொடுக்க எளிதாக இலக்கை எட்டியது. பேட்டிங்கில் பவர்பிளேவில் சொதப்பியதும் மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவ குறைவும் பாகிஸ்தானுக்கு பாதகமாக முடிந்துவிட்டது.

துபாயில் சேஸ் செய்யும் அணி வெற்றிபெறவே வாய்ப்பிருந்தும் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டிங் தேர்வு செய்தது முதல் கோணலாக அமைந்து பாகிஸ்தானுக்கு ஆட்டத்தை காவு வாங்கிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக குல்தீப் யாதவ் (3/18) ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததும் கேப்டன் சூர்யகுமார், மறுமுனையில் நின்றிருந்த ஷிபம் துபேவை அழைத்துக் கொண்டு உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கல் ஏதும் நிகழவில்லை.

பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது இந்திய வீரர்களின் டக்அவுட்டை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு முன்னதாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட போதும் சூரியகுமார் - பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமார் வெற்றியை "இந்தியாவுக்கு ஒரு சரியான பரிசு" என்றார்.

"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம், இன்றைய வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்." என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியது என்ன?

பரிசளிப்பு நிகழ்ச்சியில் எந்தவொரு பாகிஸ்தான் வீரர்களும் பேசவில்லை. பின்னர் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன்"நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம். ஆனால், அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்," என்று கூறினார்.

"ஒரு போட்டியை இந்த வகையில் முடிப்பது ஏமாற்றமளிக்கும் ஒன்று. நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நிச்சயமாக நாங்கள் சென்று கைகுலுக்க தயாராக இருந்தோம்." என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சைக்கு வாய்ப்புள்ளதா?

7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, புள்ளிகள் பட்டியலில் குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2 ஆட்டங்களில் 1 இல் மட்டும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

புதன்கிழமை (செப்டம்பர் 17) யுஏஇ அணியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியால் எளிதாக சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆகவே, மீண்டும் ஒன்று அல்லது இருமுறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.

இந்திய அணி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தனது அடுத்த ஆட்டத்தில் கத்துக்குட்டியான ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் 11 இல் இந்தியாவும் 3 இல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. நாளை நடைபெறும் ஆட்டங்களில் (double-header) குரூப் ஏ பிரிவில் யூஏஇ, ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஹாங்காங் அணிகளும் மோதுகின்றன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr5qd9ll6qpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி

Published By: Vishnu

16 Sep, 2025 | 06:23 AM

image

15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை  அணி ஹொங்கொங் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

துபாயில் நடைபெற்ற போட்டியில் நாணயற் சுழட்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை  எடுத்தது.

பதிலளித்த துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.

சிறப்பான துடுப்பெடுத்தாட்ட செயல்திறனுடன் களமிறங்கிய பதும் நிஸ்ஸங்க 68 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/225180

விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்த பெத்தும் நிஸ்ஸங்க!

16 Sep, 2025 | 12:36 PM

image

ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் (fifties) அடித்த வீரர்களின் பட்டியலில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தொடரில் இடம்பெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிராக போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம், ஆசியக் கிண்ண இருபதுக்கு - 20 தொடர்களில் அவர் குவித்த அரைசதங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் மூலம், விராட் கோஹ்லி அடித்த 8 அரைசதங்கள் என்ற சாதனையை அவர் கடந்துள்ளார்.

பெத்தும் நிஸ்ஸங்க ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் 9 அரைசதங்கள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லி ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 போட்டிகளில் 8 அரைசதங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அவரது சிறப்பான ஆட்டத் திறமையால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். விராட் கோஹ்லி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/225224

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் அணி

Published By: Vishnu

17 Sep, 2025 | 01:33 AM

image

அபுதாபியில் 16ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

இளம் துடுப்பாட்ட வீரர் தான்சித் ஹசன் அரைசதம் (52 ஓட்டங்கள்) எடுத்தார்.

பதில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 146 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

https://www.virakesari.lk/article/225268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கு 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Published By: Vishnu

18 Sep, 2025 | 02:42 AM

image

பாகிஸ்தான் அணி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தனது 17.4 ஓவரில் சகலவிட்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

ஆகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியினர் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

https://www.virakesari.lk/article/225366

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ணம் : சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்

18 Sep, 2025 | 12:51 PM

image

இணையதளச் செய்திப் பிரிவு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. இந்த பரபரப்பான போட்டி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற இருக்கிறது.

புதன்கிழமை (17) இரவு துபாயில் இடம்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 50 ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சோப்ரா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தப் போட்டியில், துடுப்பாட்டத்தில் 29 ஓட்டங்களையம் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

குழு ஏ பிரிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை (செப்.19) ஓமனுடன் விளையாட உள்ளது.

ஏற்கனவே, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோத இருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

550255649_1294018108941353_1040294925031

550864764_1723092588359923_9008242699755

https://www.virakesari.lk/article/225406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி

Published By: Vishnu

19 Sep, 2025 | 12:08 AM

image

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ரி20 போட்டியின் பி குழுவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 14 ஓட்டங்கள், செடிகுல்லா அடல் 18 ஓட்டங்கள், இப்ராஹிம் ஜத்ரான் 24 ஓட்டங்கள், கரீம் ஜனத் ஒரு ஓட்டம், டார்விஷ் ரசூலி 09 ஓட்டங்கள், அஸ்மதுல்லா உமர்சாய் 06 ஓட்டங்கள், ஆப்கானிஸ்தான் அணிக்காக கெப்டன் ரஷித் கான் 24 ஓட்டங்கள் எடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லாலகே மற்றும் தாசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்கள், அதே நேரத்தில் போட்டி முழுவதும் மிகவும் வெற்றிகரமான இன்னிங்ஸை விளையாடிய பாதும் நிஸ்ஸங்க இந்த போட்டியில் 06 ரன்கள் மட்டுமே எடுத்தார். குசால் பெரேரா 28 ஓட்டங்கள் எடுத்தார், கமில் மிஷாரா 4 ஓட்டங்கள் எடுத்தார், கெப்டன் சரித் அசலங்கா 17 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணி இடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/225462

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி

Published By: Vishnu

20 Sep, 2025 | 03:16 AM

image

2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் "A" குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தமது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

https://www.virakesari.lk/article/225557

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண ரி20 – சூப்பர் 4 சுற்றின் தொடக்கப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி

Published By: Vishnu

20 Sep, 2025 | 11:58 PM

image

ஆசிய கிண்ண கிரிக்கெட் ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் முதலில் பந்துவீச தேர்வு செய்தார், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.

தாசுன் ஷனகா 37 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் எடுத்தார், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பாதும் நிஸ்ஸங்கா 22 ஓட்டங்களும் எடுத்தார்.

அதன்படி, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில்தான் 06 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கைத் துரத்த முடிந்தது.

சைஃப் ஹசன் 66 ஓட்டங்களும், லிண்டன் தாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர், முதல் கட்டத்திலேயே பங்களாதேஷ் அணி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ட்ரோஹிட் ஹீத்ரோவும் 58 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன்படி, பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் தனது வெற்றி இலக்கை எட்டியது.

https://www.virakesari.lk/article/225616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீண்டும் வெற்றி: விவாதத்தை கிளப்பிய 'கன்ஷாட்' - தோற்ற பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார்

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம்

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 22 செப்டெம்பர் 2025, 01:39 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று இந்த தொடரின் முன்னணி அணியாக திகழ்கிறது.

பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் பலவீனமாக உள்ள சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியது.

கைகுலுக்குவதை மீண்டும் தவிர்த்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை போலவே, நேற்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

ஆட்டத்துக்கு முந்தைய நாள், துபையில் ஈரப்பதம், பனிப்பொழிவு நிலவியதால், பந்துவீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார். முன்னதாக, துபையில் பனிப்பொழிவு (dew) ஒரு பிரச்னை அல்ல என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைவான வேகம் கொண்ட மைதானம் என்பதால், குல்தீப்–அக்சர்–வருண் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் அடங்கிய முதன்மை அணியுடன் இந்தியா களமிறங்கியது. ஓமனுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ராணா நீக்கப்பட்டு, பும்ரா, வருண் மீண்டும் அணிக்கு திரும்பினர்.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

யூஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அக்சர் அணிக்கு திரும்பியது, இந்திய அணியின் சமநிலை குலையாமல் பார்த்துக்கொண்டது. சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆல்ரவுண்டர்கள் பஹீம் அஷ்ரஃப், ஹுசைன் டலாட் ஆகியோர் சேர்க்கப்பட்டு, ஹசன் நவாஸ், குஷ்டில் ஷா நீக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டாகி சொதப்பிய சைம் அயூபிற்குப் பதிலாக பர்ஹானுடன் அனுபவ வீரர் ஃபகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

கேட்ச்சை தவறவிட்ட அபிஷேக்; அதிருப்தியில் வெளியேறிய ஜமான்

ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, பர்ஹான் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தேர்ட்மேன் திசையில் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டார். வழக்கம் போல முதல் ஓவரில் மிக மெதுவான தொடக்கத்தை (6 ரன்கள்) பாகிஸ்தான் பெற்றது.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், கால்பக்கம் வீசப்பட்ட பந்தை லெக் சைடில் அழகாக ஃபிலிக் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஜமான். அடுத்த பந்தில் இறங்கிவந்து மிட் ஆஃப் திசையில் மேலும் ஒரு பவுண்டரி விளாசி, பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தார்.

சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதற்குள் விரைவாக ரன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் திட்டமாக இருந்தது. பும்ராவை திறம்பட எதிர்கொண்ட நம்பிக்கையில், பாண்ட்யாவின் அடுத்த ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரியை ஜமான் விளாசினார்.

அடுத்த பந்தை பாண்ட்யா கொஞ்சம் குறைவான வேகத்தில் வீச, விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜமான் நடையைக் கட்டினார். குறைந்த உயரத்தில் கிடைத்த கேட்ச்சை, மிகத் திறமையாக சாம்சன் பிடித்தார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் தனக்கு திருப்தியில்லை என்பதை ஜமான் வெளியேறும் போது வெளிப்படுத்தினார்.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஃபர்ஹானால் தலைநிமிர்ந்த பாகிஸ்தான்; தடுமாறிய பும்ரா

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சைம் அயூப், சந்தித்த இரண்டாவது பந்திலேயே பாண்ட்யா பந்தில் ஒரு புல் ஷாட் அடித்து அசத்தினார். முதல் ஓவரில் பொறுமையாக இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசி, ரன் ரேட்டை தக்கவைத்து கொண்டது.

குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களை மிகவும் அநாயாசமாக பாகிஸ்தான் பேட்டர்கள் எதிர்கொண்டனர். இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பும்ரா நோ பால் உடன் சேர்ந்து இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார்.

வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், ஐந்தாவது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். வருணும் தன் பங்குக்கு நான்காவது பந்திலேயே விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். வருணின் ஆஃப் ஸ்பின் பந்தில் சைம் அயூப் ஸ்வீப் அடிக்க , அது டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் பைன் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ் கைகளுக்கு சென்றது. ஆனால், எளிதான கேட்ச் வாய்ப்பை குல்தீப் தவறிவிட்டார்.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்ற அழுத்தத்தில், இந்திய பீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளை பதற்றத்தில் தவறவிடுகிறார்களோ என்று தோன்றியது. வழக்கத்துக்கு மாறாக நோ பால்கள் வீசுவதையும் பார்க்க முடிந்தது. கடந்த ஆட்டங்களைப் போல, தொடக்க கட்டத்திலேயே மூன்று ஓவர்களை வீசிய பும்ரா, பவர்பிளேவின் கடைசி ஓவரில் 13 ரன்களை வாரி இறைத்தார்.

6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி, 55 ரன்களை எடுத்தது. இந்த தொடரில், இதுதான் பாகிஸ்தான் அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் ஆகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவர்பிளே பந்துவீச்சு இது.

பர்ஹான் 'கன்ஷாட்' கொண்டாட்டம்

கடந்த ஆட்டங்களில் கணிசமாக ரன் குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக விமர்சிக்கப்பட்ட பர்ஹான், இந்தமுறை புயல் வேகத்தில் விளையாடினார். அடுத்தடுத்த ஓவர்களில் வருண், குல்தீப் பந்துகளில் இறங்கிவந்து லாங் ஆன் திசையில் சிக்சர்களை விளாசினார். கடந்த ஆட்டங்கள் போல ஆபத்தான கிராஸ் பேட் ஷாட்கள் ஆடாமல், முடிந்தவரைக்கும் சுழற்பந்து வீச்சை நேராக எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது.

அக்சர் படேலின் முதல் ஓவரில், லெக் சைடில் அபாரமாக ஒரு சிக்சரை மடக்கியடித்து அரைசதத்தை எட்டினார் சாஹிப்ஜதா பர்ஹான். அரைசதம் அடித்ததும் கன் ஷாட் (Gun shot) முறையில் கொண்டாடி, கவனத்தை ஈர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 91 ரன்கள் குவித்தது.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய ஷிவம் துபே

முன்னணி வீச்சாளர்களின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாததால், 11–வது ஓவரில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். கேப்டன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிய துபே, சைம் அயூப் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். முதல் ஓவரில் கேட்ச் விட்டதற்கு பரிகாரமாக அபாரமாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார் அபிஷேக் சர்மா.

சைம் அயூப் விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தானின் ரன் வேகம் மட்டுப்பட்டது. 21 பந்துகளாக பவுண்டரி இல்லாத நெருக்கடியில், குல்தீப் யாதவ் பிளாட் செய்து வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று டாலாட் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெரிய ஷாட்களை முயன்றுகொண்டே இருந்தது. 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஃபர்ஹான் விக்கெட்டை ஆஃப் கட்டர் பங்கில் துபே கைப்பற்றினார்.

ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் சல்மான் அகா களமிறங்கினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான், மிடில் ஓவர்களில் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஒற்றை, இரட்டை ரன்களை எடுக்க இயலாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறுவதை காண முடிந்தது.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடி

கடைசி 4 ஓவர்களில் மீண்டும் அதிரடியை கையிலெடுத்தது பாகிஸ்தான். குல்தீப் வீசிய 17–வது ஓவரில் சல்மான் அகா சிக்சர் அடிக்க, துபேவின் கடைசி ஓவரில் 18 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. 19–வது ஓவரில் பும்ரா நன்றாக வீசிய போதும், மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை இந்தியா (கில்) தவறவிட, முகமது நவாஸ் ரன் அவுட்டான போதும் 11 ரன்கள் கிடைத்தது.

நவாஸ் பொறுப்பின்றி ரன் அவுட்டான விதம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் பஹீம் அஷ்ரஃப் சிக்சர், பவுண்டரி விளாச, பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துபே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

கில்–அபிஷேக் அபார தொடக்கம்; ஹாரிஸ் ராஃப் வாக்குவாதம்

172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அப்ரிடி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார் அபிஷேக் சர்மா. வழக்கமாக முதல் பந்தை முழு நீளத்தில் அல்லது யார்க்கராக வீசும் அப்ரிடி, பவுன்சர் வீசி அதிர்ச்சியளிக்க பார்த்தார். ஆனால், சிரமமின்றி எதிர்கொண்ட அபிஷேக், பைன் லெக் திசையில் சிக்சருக்கு அனுப்பினார்.

முதல் ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரை சைம் அயூப் வீச, அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து தன் கிளாஸ் என்னவென்பதை கில் காட்டினார். சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறும் ஆடுகளத்தில், சைம் அயூபை பவர்பிளேவில் பந்துவீச அழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது அடுத்த ஓவரில் அப்ரிடி ஷார்ட் பந்தின் மூலம் விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் மிட் விக்கெட் திசையில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை நவாஸ் தவறவிட்டார்.

அதே ஓவரில், மிட் ஆஃபிலும் கவர் திசையிலுமாக இரு அட்டகாசமான பவுண்டரிகளை கில் விளாசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். நான்காவது ஓவரை இந்த தொடரில் 4 ரன்னுக்கும் குறைவாக எகானமி ரேட் வைத்துள்ள அப்ரார் அஹமது வீச, அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அபிஷேக் விரட்டினார். பந்து வீச்சாளர்கள் மாறிய போதும், இந்திய பேட்டர்களின் வாண வேடிக்கை குறையவில்லை.

ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரி அடிக்க, 28 பந்துகளில் கில்–அபிஷேக் ஜோடி 50 ரன்களை கடந்தது. ராஃப், அபிஷேக் இடையிலான வாக்குவாதம், ஆட்டத்துக்கு மேலும் பரபரப்பை கூட்டியது.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு செக் வைத்த ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ராஃப்

வேகப்பந்து வீச்சை விரும்பி விளையாடுகிறார்கள் என்று மீண்டும் சைம் அயூபிடம் சல்மான் அகா பந்தை கொடுக்க, அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை கில்–அபிஷேக் ஜோடி அடித்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 69 ரன்களை குவித்தது. இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை 30 ரன்களை கடந்த அபிஷேக், பவர்பிளேவுக்கு அடுத்த அப்ரார் அஹமதுவின் ஓவரில் லெக் சைடில் இரு இமாலய சிக்சர்களை விளாசினார்.

அபிஷேக் சர்மா ஆஃப் சைடில் அதிரிபுதிரியான ஷாட் மூலம் அரைசதத்தை கடக்க, மறுபுறம் அவருக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரியமான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே அதே வேகத்தில் ரன்களை குவித்தார் கில். 8.4 ஓவர்களில் இந்திய அணி எவ்வித சிரமமின்றி 100 ரன்களை கடந்தது. துபே பாணியிலான மிதவேகப் பந்துவீச்சு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், 10–வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரஃபை அழைத்தார் சல்மான் அகா.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

சல்மான் அகாவின் நம்பிக்கை, உடனடியாக கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த கில்லை பவுல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ஃபஹீம் அஷ்ரஃப். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராஃப் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் தனக்கு பிடித்தமான ஷாட் விளையாட முயன்று, லீடிங் எட்ஜாகி தேர்ட்மேன் திசையில் அப்ராரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தில் மீண்டும் சுறுசுறுப்பை கொண்டுவந்தன.

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதும் அபிஷேக் சர்மா அதிரடியை நிறுத்தவில்லை. ஃபஹீம் அஷ்ரஃப் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசியவர், அப்ரார் பந்தில் சிக்சர் அடித்து அசர வைத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அவர், இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

டாப் ஆர்டர் வீரரான சஞ்சு சாம்சன் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் அட்டகாசமான கவர் டிரைவ் அடித்த போதும், சாம்சனின் பேட்டிங்கில் வழக்கமான டைமிங் இல்லை. அப்ரிடி ஓவரில் திலக் வர்மா பவுண்டரி அடிக்க, கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகும் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் பந்துவீசவில்லை. இவருக்குதான் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், உலகின் தலைசிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

வலது–இடது பேட்டர்கள் இருக்கும்படி பேட்டிங் வரிசையை இந்தியா வடிவமைத்தது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப், தனது கடைசி ஓவரில் சாம்சன் (13) ஸ்டம்புகளை தகர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாண்ட்யா பவுண்டரி அடித்தார். திலக் வர்மா சிக்சர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அபிஷேக் சர்மா

இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பிய போதும் கேட்ச்களை தவறவிட்ட போதும் எளிதான வெற்றியை பதிவுசெய்துள்ளது. ராஃப், அஷ்ரஃப் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய போதும், போதுமான ரன்கள் கைவசம் இல்லாததால் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்த நிலையில், மிடில் ஓவர்களில் அதை அடித்தளமாக கொண்டு பெரிய ஸ்கோரை பதிவுசெய்திருக்க வேண்டும். குறிப்பாக சமீப காலமாக அதிரடியாக பேட்டிங் ஆடிவரும் அப்ரிடியை பேட்டிங் வரிசையில் முன்னதாக கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த ஆட்டத்தை போலவே ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்கவில்லை. அதிரடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 24) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. நாளை (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார்

பாகிஸ்தான் ஒரு வார இடைவெளியில் மீண்டும் வீழ்த்திய மகிழ்ச்சியில் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை இந்திய கேப்டன் சூர்யகுமார் எதிர்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி முடிவு 7-7 அல்லது 8-7 என இருந்தால், அதை நீங்கள் நல்ல கிரிக்கெட் என்று அழைக்கலாம், நீங்கள் அதை போட்டி என்று அழைக்கலாம். அது 13-0, 10-1 என இருந்தால், புள்ளிவிவரம் என்னவென்று எனக்கு துல்லியமாக தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டி அல்ல. நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம், சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்," என்றார்.

இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி சொந்த நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினருக்கு சூர்யகுமாரின் கருத்துகள் உவப்பானதாக இருந்திருக்காது.

கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் சந்தித்த 31 போட்டிகளில் 23 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

கன்ஷாட் கொண்டாட்டம் பற்றி விமர்சனம்

பாகிஸ்தான் வீரர் பர்ஹான் தனது அரைசதத்திற்குப் பிறகு கன்ஷாட் முறையில் கொண்டாடியது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கேள்வி எழுப்பினார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சபாஷ் மோடி ஜி! பார்க்க மீதமிருந்த ஒரு விஷயம் இதுதான், இதற்காகத்தான் அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அவர் இதை எப்படிச் செய்யத் துணிந்தார்? நரேந்திர மோடி ஒரு பலவீனமான பிரதமர்" என்று எழுதினார்.

சிவசேனா (UBT) தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்தப் படங்கள் உங்களைப் போதுமான அளவு திருப்திப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான 'ஒலிம்பிக்' உணர்வைப் பாதிக்காது என்றும் நம்புகிறேன். இது தொந்தரவாக இருக்கிறது. ஆனால் இரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பவர்களுக்கு இது பொருந்தாது" என்று எழுதினார்.

அரசியல்வாதிகளைத் தவிர, பிற சமூக ஊடக பயனர்களும் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதை காண முடிந்தது. ஜிதேஷ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சாஹிப்சாதா பர்ஹான் தனது அரை சதத்தைக் கொண்டாடியது இப்படித்தான். மோடி ஜி, இது போர் இல்லையென்றால், என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வீரர் கன்ஷாட் முறையில் கொண்டாடியது இதுவே முதல் முறை அல்ல. முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்த முறையில் கொண்டாடியுள்ளனர்.

ஒரு ஐபிஎல் போட்டியின் போது, தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் ரூஸோவும் பர்ஹானைப் போலவே கொண்டாடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y88np8evzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கையின் ஆசிய கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவியது

24 Sep, 2025 | 05:59 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது.

இந்த முடிவை அடுத்து ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி களம் இறங்கியது.

காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டது.

இலங்கையைப் போன்றே பாகிஸ்தானுக்கும் இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக இருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது.

இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8) ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சிலும் குசல் ஜனித் பெரேரா (15) ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். (43 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க (20), தசுன் ஷானக்க (0) ஆகிய இருவரும் ஹுசெய்ன் தலாத்தின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. (80 - 6 விக்.)

இந் நிலையில் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

ஷிப்ஸதா பர்ஹான் (24), பக்கார் ஸமான் (17) ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது.

சய்ம் அயூப் (2), அணித் தலைவர் சல்மான் அகா (5), மொஹம்மத் ஹரிஸ் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஆனால், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது  விக்கெட்டில் பெறுமதிமிக்க ?? ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

மொஹம்மத் நவாஸ் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 38  ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

துஷ்மன்த சமீர வீசிய 18ஆவது ஓவரில் மொஹம்மத் நவாஸ் 3 சிக்ஸ்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/225906

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக ஆசிய கிண்ண இறுதிக்குள் நுழைந்தது; இலங்கை ஏமாற்றத்துடன் வெளியேற உள்ளது

Published By: Vishnu

25 Sep, 2025 | 02:53 AM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

அபிஷேக் வர்மாவின் அதிரடி அரைச் சதம், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

பங்களாதேஷுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து நடப்பு ரி29 ஆசிய கிண்ண சம்பியன் இலங்கையின் இறுதி ஆட்ட வாய்ப்பு பறிபோனது உறுதிசெய்யப்பட்டது.

இந் நிலையில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட தகுதிபெறும்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

அபிஷேக் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 38 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், ஷுப்மான் கில் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இந்தியா ஆட்டம் காணத் தொடங்கியது.

கில்லைத் தொடர்ந்து ஷிவம் டுபே (2) வெளியேறினார்.

மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார்.

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 5 விக்.)

எனினும், ஹார்திக் பாண்டியா முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 29 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதுடன் அக்சார் பட்டேலுடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அக்சார் பட்டேல் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் இருவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். (4 - 1 விக்.)

சய்வ் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

ஏமொன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தௌஹித் ஹிரிதோய் 7 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களை எட்டியதைத் தொடர்ந்து 53 பந்துகளில் 53 ஓட்டங்களுக்கு கடைசி 7 விக்கெட்கள் சரிந்தன.

ஆரம்ப வீரர் சய்ப் ஹசன் தனி ஒருவராகப் போராடி 51 பந்துகளில் 3 பவுண்டறிகள். 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா.

https://www.virakesari.lk/article/226004

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை வீழ்த்தி ஆசிய கிண்ண இறுதியில் இந்தியாவை எதிர்த்தாட பாகிஸ்தான் தகுதி பெற்றது  

Published By: Vishnu

26 Sep, 2025 | 12:49 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (25) இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான முறையில் 11 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை பாகிஸ்தான் ஈட்டியது.

இந்த வெற்றியை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிரத்தாட பாகிஸ்தான் தகுதிபெற்றுக்கொண்டது.

2509_shaheen_shah_afridi.png

இதற்கு அமைய  பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும்  இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இன்றைய சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் அதன் பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசி அந்த மொத்த எண்ணிக்கையைத் தக்கவைத்து தமது அணியை வெற்றிபெறச் செய்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷின் பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் முதல் 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஷஹிப்ஸதா பர்ஹான் (4), சய்ம் அயூப் (0), பக்கார் ஸமான் (13), ஹுசெய்ன் தலாத் (3), அணித் தலைவர் சல்மான் அகா (19) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் மொஹம்மத் ஹரிஸ் (31), ஷஹீன் ஷா அப்றிடி (19), மொஹம்மத் நவாஸ் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

மொஹம்மத் ஹரிஸ், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பாகிஸ்தான் ஓரளவு நல்ல நிலையை அடைந்தது.

பின்வரிசையில் பாஹிம் அஷ்ரவ் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெஹெதி ஹசன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானைப் போன்றே துடுப்பாட்டத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் முதலாவது ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

தௌஹித் ஹிர்தோய் (5), சய்ப் ஹசன் (18), மஹெதி ஹசன் (11), நூருள் ஹசன் (16) ஆகியோர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.

பதில் அணித் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஜாக்கர் அலி களம் புகுந்த சற்று நேரத்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது பங்களாதேஷுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

மத்திய வரிசை வீரர்களான ஷமின் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன் சக்கிப் ஆகிய இருவரும் பங்களாதேஷை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால், ஷமின் ஹொசெய்ன் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது விக்கெட்டை அனுபவசாலியான ஷஹீன் ஷா அப்றிடி வீழ்த்தியதும் பங்களாதேஷின் இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவத் தொடங்கியது.

தொடர்ந்து தன்ஸிம் ஹன் சக்கிப் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய பின்வரிசையில் ரிஷாத் ஹொசெய்ன் கடுமையாகப் போராடி 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/226090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4இல் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 4ஆவது இலங்கையரானார் நிஸ்ஸன்க

Published By: Vishnu

27 Sep, 2025 | 12:48 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

இலங்கையும் இந்தியாவும் ஒரே எண்ணிக்கையை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை 2 விக்கெட்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அர்ஷ்தீப் சிங் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு சப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஒரே பந்தில் 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் கன்னி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 58 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 107 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் மூன்று வகை சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் முழு கிரிக்கெட் உலகிலும் மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 28ஆவது வீரரானார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 3ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களை பகிர்ந்தார்.

அவர்கள் இருவரை விட தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால் மற்றைய வீரர்கள் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறினர்.

இந்த வருட ஆசிய கிண்ணத்தில் இந்தப் போட்டிpல் விளையாடிய ஜனித் பெரேரா ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அபிஷேக் ஷர்மா மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆசிய கிண்ணத்தில் தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்தார்.

31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட திலக் வர்மா 49 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 39 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/226205

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.