Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-55.jpg?resize=750%2C375&ssl=

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன.

இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1445900

  • கருத்துக்கள உறவுகள்

“கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

03 Sep, 2025 | 05:29 PM

image

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரின் தலைமையில் நுவரெலியா பிரதேசத்தில் இயங்கி வரும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட  பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224132

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்த பாக்கிஸ்தானியர்கள் அழைக்கப்பட்டுள்ளது; விசாரணைகளில் தெரியவந்துள்ளது - அமைச்சர் ஆனந்த விஜேபால

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:41 AM

image

(இராஜதுரை ஹஷான்)

இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்தை வியாழக்கிழமை (4) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம். நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும்.

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/224245

  • கருத்துக்கள உறவுகள்

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது!

06 Sep, 2025 | 02:26 PM

image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224368

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

544602113_1231096035699919_8091616638569

🔴 பல்லாயிரம் கிலோ ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் இரசாயனப் பொருட்கள் மீட்பு, SLPP முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உட்பட பலருக்கு தொடர்பு!
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் நேற்று (5) மித்தெனிய, தலாவவிலுள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 50,000 கிலோகிராம் 'ஐஸ்' (மெத்தம்பேட்டமைன்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரசாயனப் பொருட்கள், இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகளின் உதவியுடன் நுவரெலியாவில் 'ஐஸ்' தயாரிப்பதற்காக ஒரு வீட்டை முன்னர் வாடகைக்கு எடுத்திருந்த கேஹெல்பத்தார பத்மேயினால் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“பெக்கோ சமன்” என அறியப்படும் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கரக்கொலபெலஸ்ஸவில் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதேச சபை உறுப்பினரான சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி ஆகிய இரு சகோதரர்கள் இந்த இரசாயனப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசாரணைகள் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேகநபர்கள் இந்த இரசாயனக் குப்பைகளை வாகனம் ஒன்றில் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது அதன் பின்னர் சகோதரர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
மீட்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மூலம் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் தயாரிக்க முடியும் என்றும், அதன் மதிப்பு சுமார் 2 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SLPP-717801-754878_850x460.jpg?resize=75

கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பத் மனம்பேரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பத் மனம்பெரிக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50,000 கிலோ மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சம்பத் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தங்கள் கட்சி ஒருபோதும் மென்மையான கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்றும் அதன்படி, அவரது கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1446284

  • கருத்துக்கள உறவுகள்

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; சம்பத் மனம்பேரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

08 Sep, 2025 | 11:01 AM

image

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) அனுமதி வழங்கியுள்ளது.

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கடந்த சனிக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார். 

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224503

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

544952346_4090264181215546_7803827427043

இவன் எல்லாம் பிடிபட்டால்.... பிணை கேட்க ICU ல் படுத்து கிடநது நாடகம் ஆட வெளிக்கிடுவாங்கள்... Ice Production family. 😂

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மித்தெனியவில் போராட்டம்!

08 Sep, 2025 | 04:45 PM

image

அநுராதபுரத்தில் மித்தெனிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் போதைப்பொருளுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாறும் பேராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-112.jpg?resize=750%2C375&ssl

சந்தேகத்திற்கிடமான இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்!

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் NDDCB தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1446460

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

545384610_1206074251557545_3832421091781

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

545100537_1206924921472478_2658099444110

545840372_1206924531472517_2987993063472

545373663_1206901711474799_7750976954545

545576856_1206896138142023_4600714413995

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.