Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST]

Seeman Criticizes EPS Over Meeting With Amit Shah Says No Need to Come With Covered Face

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது.

தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?

அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம்.

நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்…

இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார்.

சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது.

#பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்

  • கருத்துக்கள உறவுகள்

குளியல் அறை, படுக்கை அறை என்று எந்த இடத்தில் இருந்தும் படம் எடுத்துப் போட தயாராக உள்ள இன்றைய இணைய உலகில், எடப்பாடியார் என்ன ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.............🫣.

என்னதான் கடுமையாக அமித்ஷா பேசியிருந்தாலும், வீட்டுக்குப் போன பின் எடப்பாடியார் முகத்தை மூடிக் கொண்டு அழுதிருக்கலாம்..............

இன்று தமிழர்களும், தமிழ்நாடும் ஒன்றாக நின்று எதிர்ப்பை காட்ட வேண்டிய ஒரே கட்சி பாஜகவே. இந்த நேரத்தில் அவர்களுடன் கூட்டணி வைப்பது மட்டும் இல்லாமல், கட்சியையும், சுயமரியாதையையும் அவர்களிடம் இழந்து கொண்டிருக்கும் எடப்பாடியார் விரைவில் எல்லோராலும் கைவிடப்படலாம்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைய, விஜய்காந்த்தின் உடலும் உணர்வும் தளர, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பாட்டிருக்கின்றது என்றனர். ஆனால் அப்படி ஒரு வெற்றிடம் உண்டாக விடாமல், திமுகவும் அதிமுகவும் தங்களை மீண்டும் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் இன்று திமுகவும், அவர்களுக்கு போட்டியாக ஒரு வெற்றிடமுமே உள்ளது. என்ன தான் வெற்றிடம் ஒன்று இருந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற நிலையிலேயே சில தலைவர்களின் காலம் முடியும் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2025 at 18:20, ரசோதரன் said:

குளியல் அறை, படுக்கை அறை என்று எந்த இடத்தில் இருந்தும் படம் எடுத்துப் போட தயாராக உள்ள இன்றைய இணைய உலகில், எடப்பாடியார் என்ன ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.............🫣.

என்னதான் கடுமையாக அமித்ஷா பேசியிருந்தாலும், வீட்டுக்குப் போன பின் எடப்பாடியார் முகத்தை மூடிக் கொண்டு அழுதிருக்கலாம்..............

எடப்பாடி அமித் ஷா வீட்டுக்கு அதிமுக தலைகளோடு போயுள்ளார் என நியூஸ் பிரேகிங் ஆன பின்னேதான் அவர் வெளியே வந்தார்.

போனவர் வரத்தானே வேண்டும்.

ஆகவே மூடி மறைக்க வாய்பில்லை.

எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2025 at 18:20, ரசோதரன் said:

எதிர்ப்பை காட்ட வேண்டிய ஒரே கட்சி பாஜகவே. இந்த நேரத்தில் அவர்களுடன் கூட்டணி வைப்பது மட்டும் இல்லாமல், கட்சியையும், சுயமரியாதையையும் அவர்களிடம் இழந்து கொண்டிருக்கும் எடப்பாடியார் விரைவில் எல்லோராலும் கைவிடப்படலாம்.

ஆனால் பன்னீர், சசி, டிடிவி, எவரையும், அமித் ஷா சொன்னாலும் சேர்பதில்லை என்பதில் எடப்பாடி வென்றுள்ளதாகவே தெரிகிறது.

அதேபோல் செங்கோட்டையனும் (தன்னை) மன்னிப்போம், மறப்போம் என அடங்கி விட்டார்.

அதேபோல் அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியது, டிடிவி மூலம் அண்ணாமலை ஆட ஆரம்பித்த கேமை BL சந்தோஸ் மூலம் தட்டி வைத்துள்ளது என முதல் சுற்றில் எடப்படி ஏறு முகம்தான் காட்டுகிறார்.

2 ம் சுற்று - தேர்தலில் அதிமுக சீட்டுகள் எண்ணிக்கை

3ம் சுற்று - தேர்தலின் பின், பாஜக அதிமுகவை “அப்படியே சாப்பிடுவோம்” என சாப்பிடாமல் (வென்றாலும் தோற்றாலும்) எப்படி தடுப்பது.

அடுத்த இரு சுற்றுக்களும் மிக கடினமானவை.

பார்க்கலாம்

On 18/9/2025 at 18:20, ரசோதரன் said:

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைய, விஜய்காந்த்தின் உடலும் உணர்வும் தளர, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பாட்டிருக்கின்றது என்றனர். ஆனால் அப்படி ஒரு வெற்றிடம் உண்டாக விடாமல், திமுகவும் அதிமுகவும் தங்களை மீண்டும் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் இன்று திமுகவும், அவர்களுக்கு போட்டியாக ஒரு வெற்றிடமுமே உள்ளது. என்ன தான் வெற்றிடம் ஒன்று இருந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற நிலையிலேயே சில தலைவர்களின் காலம் முடியும் போல.

உங்கள் பனையூரார் பற்றிய பார்வையில் மாற்றம் ஏதும் வந்துள்ளதா?

வேர்க் புரொம் ஹோம், வீக் எண்ட் அரசியல்வாதி இனி புதிய டிரெண்ட்டோ? நாம் தான் பழைய முறையில் பிந்தங்கி விட்டோமோ என நினைக்கவும் வைக்கிறார் பனையூர் கிழார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதையே தான் எடப்பாடியார் சொன்னார். அவர் முகத்தை மூடி இருக்க வாய்ப்பில்லை தான், ஆனால் ஒரு சலிப்போ அல்லது விரக்தியோ காரணமாக, நாங்கள் சில சமயங்களில் கைகளால் நெற்றியைத் தாங்குவது போல, ஒரு கணத்தில் செய்திருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் அரசியல் தாக்குதல்கள் தரை டிக்கெட் அளவிலும், இன்னும் கீழேயும் இருக்கும். சுற்றி நிற்கும் நாலு பேர்கள் சிரிப்பார்கள் என்றால் பேச்சாளர்களும், தலைவர்களும் எதையும் கூசாமல் சொல்லுவார்கள். அவை இணையத்திலும் வைரலாகப் பரவும். அதுவே தான் இந்த விடயத்திலும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

(அதிபர் ட்ரம்பும் இதே வழியையே பின்பற்றுகின்றார்..............)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உங்கள் பனையூரார் பற்றிய பார்வையில் மாற்றம் ஏதும் வந்துள்ளதா?

வேர்க் புரொம் ஹோம், வீக் எண்ட் அரசியல்வாதி இனி புதிய டிரெண்ட்டோ? நாம் தான் பழைய முறையில் பிந்தங்கி விட்டோமோ என நினைக்கவும் வைக்கிறார் பனையூர் கிழார்.

கமல் அரசியல், நிர்வாகம், ஆட்சி என்பனவற்றில் எவ்வாறு அனுபவம், நடைமுறை அறிவு, பொதுப் புரிதல் என்பன இல்லாமல் இருந்தாரோ, அதே போலவே விஜய்யும் இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். கமலை விட மிகவும் செயற்கையாக விஜய் தோன்றுகின்றார். விஜய்யின் மேடைப் பேச்சுகளும், அங்க அசைவுகளும் மிகவும் அந்நியமாகத் தெரிகின்றன. எம் ஜி ஆரும், விஜய்காந்தும் அவர்களின் காலங்களில் அந்நியமாகத் தெரியவில்லை.

ஆனாலும் 'அண்ணா..........' என்று அவரைத் தொடரும் ஒரு வயதினரில் பெரும்பகுதி வாக்குகள் அவருக்கு முதல் தடவையில் கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றைய நிலையில் அடுத்த தேர்தலில் தவெக மூன்றாவதாக வரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.

On 18/9/2025 at 19:20, ரசோதரன் said:

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைய, விஜய்காந்த்தின் உடலும் உணர்வும் தளர, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பாட்டிருக்கின்றது என்றனர். ஆனால் அப்படி ஒரு வெற்றிடம் உண்டாக விடாமல், திமுகவும் அதிமுகவும் தங்களை மீண்டும் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் இன்று திமுகவும், அவர்களுக்கு போட்டியாக ஒரு வெற்றிடமுமே உள்ளது. என்ன தான் வெற்றிடம் ஒன்று இருந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற நிலையிலேயே சில தலைவர்களின் காலம் முடியும் போல.

தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகரும் அரசியலில் சடுதியாக கட்சி ஆரம்பித்து

பெரும் வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை .

பலரும் MGR இன் அரசியல் வரலாற்றை சரியாக அறியாமல் அவரைப் போல வர ஆசைப்படுகின்றனர். இதில் விஜயும் அடக்கம் .

சீமானின் அரசியல் வேறு அவர் களத்தை நன்கு அறிந்தே வேலை செய்கின்றார் . இப்போதும் அவர் உடனடியாக முதல்வராக வருவேன் அல்லது வரவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை.

யசோதரன் கூறும் வெற்றிடம் ஸ்டாலினுக்குப் பின்னர் வர வாய்ப்புக்கள் உள்ளன. சீமான் அதுவரை காத்திருக்க வாய்ப்புக்கள் அதிகமே தவிர குறையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாத்தியார் said:

சீமானுக்கான பஸ் போயே விட்டது.

சீமானை போல் நாளொருவேடம் போட்ட அரசியல் வாதிகள், சாக்கடையான தமிழக அரசியலில் கூட அரிதிலும் அரிது.

சீமான் ரஜனிக்கு சொன்னதுதான் இப்போ சீமானுக்கும்.

வெற்றிடம் சுடுகாட்டிலும்தான் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் எம்ஜிஆர் என்ற ஒருவரை மட்டும் வைத்து தமிழக அரசியலை எடை போடுகிறோம்.

எம் ஜி ஆர், திக, திமுகவில் இருந்து அதன் பின் அதிமுக வை தோற்றுவித்தார் மறுக்கவில்லை.

ஆனால் ஜெ?

எம் ஜி ஆர் காலத்தில் வெறும் பதுமையாக பல வருடம் கழித்தவர்.

பலவருட சினிமா அஞ்ஞாதவாசத்தின் பின், தமிழாராய்சி மாநாட்டில் நடனமாடி, எம் ஜி ஆரை மீள நெருங்கி, அரசியலுக்கு வந்து சத்துணவு திட்டம், கொபசெ, ராஜ்யசபா என சொற்பகாலம், அதற்குள் எம் ஜி ஆருக்கு தெரியாமல் அல்லது சொல்லாமல் டெல்லியில் லாபி செய்ததால் - முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார்.

எம் ஜி ஆர் சாகும் போது கட்சி ஆர் எம் வி, ஜானகி பக்கம்தான் பெரும் அளவில் இருந்தது.

ஆனால் தேர்தல் முடிவில், மக்கள் ஜெ அணியை ஆதரிக்க, அரசியலில் கொட்டை போட்ட ஆர் எம் வி, நெடுஞ்செழியன், அறந்தாங்கியில் அசைக்க முடியாத திருநாவுக்கரசர், அடிதடி மன்னன் தாமரைக்கனி அனைவரும் ஜெக்கு பின் அணி திரள வேண்டியதாயிற்று.

ஒரு திராவிட கட்சியை, ஒரு பிராமண பெண், நடிகை, சில வருட அரசியல் அனுபவம் மட்டும் இருந்த, நுனிநாக்கு ஆங்கில நடிகை, அண்ணா கால அரசியல்வாதிகளை எல்லாம் பின்னே தள்ளிவிட்டு, எம்ஜிஆரின் மனைவியை தள்ளி விட்டு, வெற்றிகரமாக வழிநடத்தவில்லையா?

இதே போலத்தான் விஜயகாந்தும். நோய் வாய்ப்படாவிடின், மனைவியை மச்சானை தட்டி வைத்திருப்பின், அவன் முதல்வராக கூட ஆகி இருப்பார்.

எம் ஜி ஆர்….

ஜெ….

விஜயகாந்த்….

வேறுபட்ட அரசியல் அனுபங்களோடு, தமிழக அரசியல் ஒவ்வொரு படிநிலையில் சாதித்த ஆளுமைகள்.

விஜை?

காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

ஆனால் விஜையிடம் தமிழகத்துக்கு தேவையான கொள்கை தெளிவு உள்ளது.

பெரியார், அம்பேத்கர், அண்ணா என ஆதரவு வட்டத்தை பெருப்பிக்கும், சிந்தனை தெளிவு இருக்கிறது.

நிச்சயமாக அதிமுக+பிஜேபி கூட்டணியில் சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்க்க தயார்.

ஆனால் பிஜேபியை கொள்கை எதிரி என கூறும் தெளிவு இருக்கிறது.

சீமானிடம், அன்புமணியிடம், திருமாவிடம் இல்லாத, எம்ஜிஆர், ஜெ, விஜயகாந்த் இடம் இருந்த 2 விடயங்கள் விஜையிடமும் உள்ளன.

  1. மக்கள் இவன் நல்லவன் என நம்புவது

  2. சாதி மதம் கடந்து உயர் நிலையில் செயல்படுவது.

இந்த இரெண்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் முதல்வராக முடியாது.

இவை இரெண்டரையும் சீமான் பாழாக்கி பல வருடங்கள் ஆகிவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீமானிடம், அன்புமணியிடம், திருமாவிடம் இல்லாத, எம்ஜிஆர், ஜெ, விஜயகாந்த் இடம் இருந்த 2 விடயங்கள் விஜையிடமும் உள்ளன.

  1. மக்கள் இவன் நல்லவன் என நம்புவது

  2. சாதி மதம் கடந்து உயர் நிலையில் செயல்படுவது.

தமிழ்நாட்டில் வெகு சில அரசியல் தலைவர்களுக்கே நீங்கள் சொல்லியிருக்கும் பேதங்கள் கடந்த ஆதரவு உள்ளது. இந்த தலைவர்கள் ஒரு அடையாளத்துக்குள் உட்படாதவர்கள். விஜய்யும் அவர்களில் ஒருவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே.

விஜய்யிற்கு நல்லவர் என்ற பிம்பமும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் தலைவர்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்து இருந்தால். உதாரணமாக, திரிஷாவுடன் உண்மையிலேயே ஏதாவது தொடர்புகள் இருந்தால் கூட..................🤣.

ஜெயலலிதா மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் உண்டாக்கிய மாற்றம் ஆச்சரியமானது. அவர் இருக்கும் போது அவரின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தன. இப்பொழுது அவர் இல்லாத போது, அவர் இப்பவும் இருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது..................😔.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

நீங்கள் தமிழ் நாட்டவர் போலவே ஆகிவிட்ட ஒருவர் கட்டாயம் இந்த வித்தியாசம் உணர்திருப்பீர்கள்.

பொதுவாக, ஒருவன்-ஒருத்தி கான்செப்டுக்கு ஈழத்தமிழர் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழக தமிழர் கொடுப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு. அடிதட்டு, மத்திய, மேல் தட்டு என ஆண்கள் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் இருப்பது அங்கே அப்படி ஒன்றும் அரிதான செயல் அல்ல (ஈழ, புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிடும் போது).

ஆனால் அதே இடத்தில் ஒரு பெண் கண்ணை கசக்கினால், சம்பந்தபட்ட ஆணுக்கு அன்று ஆரம்பிக்கும் ஏழரை.

அது செபஸ்டியன் சைமனாக இருந்தால் என்னா மாதம்பட்டி ரங்கராஜாக இருந்தால் என்ன.

திரிஷா அல்லது சங்கீதா பொதுவெளியில் வந்து புகார் சொல்லாதவரை விஜை ஓக்கே. நான் அறிந்த மட்டில் அப்படி இருவரும் விஜை மீதான வெறுப்பில் இல்லை என்பதே. ஆனால் இதை எப்படியாவது கிண்டி விட ஒரு below the belt அடிக்கு திமுக தயாராவதாக பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெ - தமிழ் நாட்டு முதல்வர்களிலேயே “அதிசயம்” என்றால் அது ஜெ தான்.

அண்ணாவிற்கு பின் நாவலரை தள்ளிவிட்டு கருணாநிதி வந்ததை விட, எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் முதல்வரானதை விட…

அவர் சாகும் போது, எம் ஜி ஆரால் கட்டம் கட்டப்பட்டு அரசியல் அநாதையாக கிடந்த ஜெ கட்சியை கைப்பற்றி எதிர் கட்சி தலைவி ஆனதும், 91 இல் முதல்வரானதும் பெரியதொரு அதிசயம் (miracle).

ஏன் ஜானகி ஒதுங்கி போனார்? ஜெயின் மக்கள் ஆதரவு.

அரசியலில் மிக சொற்ப அனுபவமே இருந்த ஜெ யை வெல்ல வைத்த ஒரே சக்தி அவருக்கு தானாக கூடிய மக்கள் கூட்டமும் அது வாக்காக மாறியதும் மட்டுமே.

“கருணாநிதி ஒரு தீய சக்தி”, “ஊழல் குடும்ப ஆட்சி”, “சொன்னர்களே செய்தார்களா”, “நான் கேட்கிறேன் நீங்கள் செய்வீர்களா” - விஜையின் வியூகம் பல இடங்களில் எம்ஜிஆரை விட ஜெயை பின்பற்றுவதாகவே எனக்கு படுகிறது.

எம்ஜிஆரை விட ஜெ யுடந்தான் விஜையின் அரசியல் வரவை ஒப்பிடுவது பொருத்தமானது என்பது என் பார்வை.

அவருக்கு கூட்டம் வாக்காக மாறியது.

இவருக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

மக்கள் இவன் நல்லவன் என நம்புவது

👇 கிட்டதட்ட 15 வருடமாக சீமான் சொன்ன அதே விடயங்களை சொல்லி, அதனால் விஜைக்கு வாக்கு போடுவேன் என்கிறார் இந்த பெண்.

ஆனால் சீமான் மீது சாமன்ய மக்களுக்கு இந்த நம்பிக்கை வரவில்லை.

இதற்கு சீமானின் குழப்ப, உள்ளடி, அநாகரீக, வெறுப்புவாத (மறைமுக சாதிய) அரசியல் பெரிய காரணி என்றாலும், உள்ளுணர்விலேயே அவர் ஒரு நம்பதகாதவர் என்பதை மக்கள் கண்டு கொண்டார்களோ என நான் எண்ணுகிறேன்.

https://youtube.com/shorts/0kurU1alclU?si=84CF_4ADbB3LiTRo

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2025 at 02:38, goshan_che said:

திரிஷா அல்லது சங்கீதா பொதுவெளியில் வந்து புகார் சொல்லாதவரை விஜை ஓக்கே. நான் அறிந்த மட்டில் அப்படி இருவரும் விஜை மீதான வெறுப்பில் இல்லை என்பதே. ஆனால் இதை எப்படியாவது கிண்டி விட ஒரு below the belt அடிக்கு திமுக தயாராவதாக பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் மிக இலேசாக கடந்து போய்க் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. இதையே எங்கள் நாட்டில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கியம் மிக்க ஒருவரோ செய்து விட்டு, இவ்வளவு இலேசாக இருந்து விடமுடியாது. தமிழ்நாட்டில் பல தலைவர்களின் கதைகளில் பலர் வந்து போயிருக்கின்றார்கள்.

ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் அல்லது கொள்ளை அடித்தார் என்பது இன்னும் ஒரு இலேசாகக் கடக்கப்படும் நிகழ்வு. இதை ஒரு பரபரப்பான செய்தியாகப் பார்ப்பார்களே அன்றி, அதற்கான விளைவுகள் மக்களால் ஆற்றப்படுவதில்லை. அங்கே ஊழலும், லஞ்சமும் சாதாரண ஒருவரின் வாழ்க்கையிலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமாகவே கலந்திருப்பதால், இவை ஒரு குற்ற உணர்வை தொடர்ந்தும் எவர் மனதிலும் உண்டாக்குவதில்லை. சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் போன்ற நிகழ்வுகள் கூட மறக்கப்பட்டு விடுகின்றன.

ஆனால் அழகிரியின் எல்லை மீறிய கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் கொலைகள், பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு போன்றன ஒருவரை அங்கே அரசியல் அநாதை ஆக்கக்கூடியன. சாதி, இனம், மொழி, மதம் என்று கோடுகளால் பிரித்து, வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அங்கே இடம் இருந்தாலும், அவர்களுக்கான ஆதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.