Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மிருககாட்சிசாலையில் இருந்த ஆப்பிரிக்க யானை சங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று.

கட்டுரை தகவல்

  • அபிஷேக் டே

  • பிபிசி நியூஸ், டெல்லி

  • 21 செப்டெம்பர் 2025

இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.

டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 ஆண்டுகளாக, சங்கர் ஒரு தனிமையான வாழ்க்கையை அனுபவித்தது - இதில் குறைந்தது 13 ஆண்டுகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது.

அதன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. "மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் சஞ்சீத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேயிலிருந்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மாவுக்கு இராஜதந்திரப் பரிசாக 1998-ல் வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றுதான் சங்கர்.

ஆனால், சங்கரின் துணையான மற்றொரு யானை 2001-ல் இறந்துவிட்டது என்று குமார் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் மிருகக்காட்சிசாலை அதிகாரி ஒருவர், அதன் துணையின் மரணத்திற்குப் பிறகு, சங்கர் தற்காலிகமாக மிருகக்காட்சிசாலையில் உள்ள ஆசிய யானைகளுடன் தங்கவைக்கப்பட்டது, ஆனால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை என்றார்.

"அவை ஒன்றுக்கொன்று மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன" என்று அவர் கூறினார். மேலும், சங்கர் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

"அதன் துணை இருந்தபோது சங்கர் மிகவும் விளையாட்டாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவை மிருகக்காட்சிசாலை பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. உடனிருந்த ஆப்பிரிக்க யானை இறந்த பிறகு சங்கரின் நடத்தை மாறியது. சங்கர் வேறு எந்த யானையின் துணையையும் ஏற்கவில்லை, மற்ற யானைகளும் சங்கரை ஏற்கவில்லை. அது நண்பனற்றதாக விடப்பட்டது" என்று அந்த முன்னாள் அதிகாரி கூறினார்.

2009-ல், ஆறு மாதங்களுக்கு மேல் யானைகளைத் தனியாக வைத்திருப்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை மீறி, சங்கர் 2012-ல் ஒரு புதிய அடைப்புக்கு மாற்றப்பட்டது, அது கிட்டத்தட்ட அதை தனிமையில் அடைத்தது. அது இறக்கும் வரை அங்கேயே இருந்தது.

டெல்லி மிருககாட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்ரிக்க யானை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சங்கரின் துணை 2001-ல் இறந்துவிட்டது, இதனால் டெல்லி மிருகக்காட்சிசாலையில் அதுவே ஒரே ஆப்பிரிக்க யானையாக இருந்தது.

பல ஆண்டுகளாக, விலங்கு ஆர்வலர்கள் சங்கரை மிருகக்காட்சிசாலையிலிருந்து அகற்றி, மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.

2021-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் சங்கரை மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, மிருகக்காட்சிசாலைகளிலிருந்து காட்டு விலங்குகளை மாற்றுவதைக் கையாளும் குழுவை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது.

புதன்கிழமை வரை, இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளில் இருந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் சங்கரும் ஒன்று. வயது வந்த மற்றொரு ஆண் யானை கர்நாடகாவின் மைசூர் மிருகக்காட்சிசாலையில் வாழ்கிறது.

இரண்டு ஆப்பிரிக்க ஆண் யானைகளுக்கும் துணையைத் தேடுவதில் மிருகக்காட்சிசாலைகள் நீண்ட காலமாக சிரமப்பட்டு வருகின்றன. அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள், பல ஒப்புதல்கள் மற்றும் விலங்கு நலன் குறித்த கவலைகளால் இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி மிருகக்காட்சிசாலையில் சங்கர் வைக்கப்பட்டிருந்த நிலைமைகளையும் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். அதன் அடைப்பு இருட்டாகவும், போதுமானதாக இல்லாமலும் இருந்ததாக அவர்கள் விவரித்துள்ளனர்.

"அது இப்படி இறந்ததை காண்பது மனதை உடைக்கிறது," என்று 2021 நீதிமன்ற மனுவைத் தாக்கல் செய்த லாப நோக்கற்ற அமைப்பான 'யூத் ஃபார் அனிமல்ஸ்' (Youth For Animals) நிறுவனரான நிகிதா தவான் கூறினார். "இதை எளிதாகத் தடுத்திருக்கலாம். அதற்கு (சங்கருக்கு) எந்த கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் இல்லை. அது மிகவும் இளமையாக இருந்தது."

ஆப்பிரிக்க யானைகளின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

புதன்கிழமை காலை வரை சங்கரின் விஷயத்தில் "நோய் அல்லது அசாதாரண நடத்தை" குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் குமார் கூறினார்.

விலங்கு நல ஆர்வலர் கவுரி மௌலேகி, சங்கரின் மரணம் "பல ஆண்டுகளின் நிர்வாக அலட்சியம் மற்றும் கவனக்குறைவை" பிரதிபலிப்பதாகக் கூறினார். மேலும், இது ஒரு அமைப்புத் தோல்வி என்றும், இதற்குப் பொறுப்பு கேட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"ஒரு உள் விசாரணை மட்டும் போதாது," என்று மௌலேகி பிபிசியிடம் கூறினார். "இது ஒரு அமைப்புத் தோல்வி. இதற்கு உண்மையான பொறுப்பு தேவை. மேலும், இது நமது மிருகக்காட்சிசாலைகளில் யானைகள் மற்றும் பிற ஒன்றாக கூடி வாழும் விலங்குகளைத் தனிமையில் அடைத்து வைக்கும் கொடுமையான நடைமுறைக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவதற்கு ஒரு முக்கிய தருணமாக அமையவேண்டும்."

அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, குமார், "அனைத்து கவனிப்பு, பராமரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன" என்று கூறினார். ஆனால், குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

2024 அக்டோபரில், உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கம், சங்கரின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த கவலைகள் காரணமாக டெல்லி மிருகக்காட்சிசாலையை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. அது சங்கிலியால் பிணைக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த உலகளாவிய அமைப்பு டெல்லி மிருகக்காட்சிசாலைக்கு சங்கரை இடமாற்றம் செய்ய அல்லது அதன் பராமரிப்பை மேம்படுத்த 2025 ஏப்ரல் வரை அவகாசம் அளித்தது. காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், அதன் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்றும் அது எச்சரித்தது.

இந்த இடைநீக்க அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, ஒரு மத்திய அமைச்சர் சங்கரின் அடைப்பைப் பார்வையிட்டார். அதன் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு ஒரு பெண் துணையை கொண்டுவரத் திட்டமிடுவதாக அக்டோபர் 15 அன்று அரசு அறிவித்தது. ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆர்வம் காட்டியுள்ளன என்றும், அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என்றும் அது கூறியது.

உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கத்திடமிருந்து தங்களுக்கு வேறு எந்த அறிவிப்புகளும் வரவில்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு துணை ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பே சங்கர் இறந்துவிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c930ddp1zdko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.