Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா நகரத்தின் ரிமால் பகுதியில் உள்ள ஒரு தெருவில் இடிபாடுகள் சிதறிக் கிடக்கின்றன. மக்கள் சிறிய குழுக்களாகக் கூடியிருக்கும் தெருக்களில் பல சேதமடைந்த கார்கள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

கட்டுரை தகவல்

  • அத்னான் எல்-பர்ஷ்

  • பிபிசி அரபிக்

  • மர்வா கமால்

  • பிபிசி அரபிக்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது."

காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார்.

தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

"இந்த ரோபோக்கள், இனி பயன்படுத்த முடியாத பழைய டாங்கிகள் அல்லது கவச வாகனங்களாக இருக்கலாம்," என்று அல்-கூல் கூறினார்.

"அவற்றைக் கொண்டு சென்று, வெடிபொருட்களால் நிரப்பி, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி காஸா நகரத்தின் தெருக்களில் செலுத்துகிறார்கள்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட பகுதியில் அவை வைக்கப்பட்ட சில நிமிடங்களில், ஒரு பெரும் வெடிப்பு நிகழ்கிறது." என்று அவர் கூறினார்.

"வெடிப்பு நடந்த இடத்தில் மக்கள் இருந்தால், அவர்களின் எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படாது. உடல் பாகங்கள் கூடச் சிதறிவிடும், அவற்றை முழுமையாக எங்களால் கண்டுபிடிக்க முடியாது," என்று காஸாவில் போரில் பலியானவர்களின் உடல்களை மீட்க அவ்வப்போது தன்னார்வத் தொண்டு செய்யும் அல்-கூல் கூறினார்.

வெடிப்பு எவ்வளவு அருகாமையில் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து கட்டடங்கள் முழுமையாக இடிந்து அல்லது சேதமடைந்து விடுகின்றன. இதனால் இஸ்ரேல் படைகள் அப்பகுதியைக் "அழிக்கும் நடவடிக்கையை" மேற்கொள்ள எளிதாகிறது என்றும் அல்-கூல் கூறினார்.

பேரழிவின் விளைவுகளை நேரில் கண்ட அவர், "முழு குடும்பங்களும் அழிந்துவிட்டன" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். அழிவின் வரம்பு 300 முதல் 500 சதுர மீட்டர் வரை இருப்பதாக கூறிய மூன்று பேருடன் நாங்கள் பேசினோம்.

"இவை வெடிக்கும்போது குடும்பங்கள் வீட்டில்தான் இருக்கின்றன, அவர்களின் வீடுகள் அவர்கள் மீது இடிந்து விழுகின்றன. அல்-ஜைதூன், ஷேக் ராத்வான் மற்றும் ஜபாலியா போன்ற பகுதிகளில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்."

ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் (ஜிஎம்ஓ) செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் குறைந்தது 1,984 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜிஎம்ஓ வெளியிட்ட ஓர் அறிக்கையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் போர் விமானங்கள் மூலம் 70-க்கும் மேற்பட்ட நேரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும், கூடுதலாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்பட்டன என்றும், இது பரவலான கட்டாய இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வெடிப்புகளின் தாக்கம், 70 கி.மீ தொலைவில் உள்ள டெல் அவிவ் நகரத்திலும் உணரப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம் இந்த ஆயுதங்களைச் பொதுமக்கள் மீது பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க, பிபிசி நியூஸ் அரபி, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அவிசாய் அட்ராய்-ஐ தொடர்பு கொண்டது.

அட்ராய் பிபிசி-யிடம், "நாங்கள் செயல்பாட்டு முறைகள் குறித்து விவாதிப்பதில்லை. ஆனால், எங்கள் நோக்கங்களை அடையவும், ஹமாஸ் பயங்கரவாதிகளை அகற்றவும், இஸ்ரேல் வீரர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம், அவற்றில் சில மிகவும் புதுமையானவை மற்றும் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார்.

பேரழிவு ஏற்படுத்தும் வெடிப்பு

காஸா நகரம், இஸ்ரேலிய ஆயுதங்களைச் சோதிக்கும் களமாக மாறியுள்ளதா என மற்றொரு காஸா நகரவாசியான நிதால் ஃபவ்ஸி கேள்வி எழுப்பினார்.

இந்த ரோபோக்கள் "குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்துகின்றன, மேலும் மக்களைத் தப்பி ஓடச் செய்கின்றன" என்று கூறினார்.

ஒரு முந்தைய ராணுவ நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக அவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"நள்ளிரவு நேரம். ஒரு ராட்சத, செவ்வக வடிவ 'ரோபோ' ராணுவ வாகனத்தால் இழுத்து வரப்படுவதைப் பார்த்தேன். அதை ஒரு சுவரின் அருகில் விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். எனது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறும்படி நான் கத்தினேன். நாங்கள் தப்பி ஓடிய சில நிமிடங்களில், நான் இதற்கு முன் கேட்டிராத ஒரு வெடிப்பு நிகழ்ந்தது."

இந்த வெடிப்பு பேரழிவை ஏற்படுத்துவதாக ஃபவ்ஸி கூறுகிறார்.

"அல்-ஜைதூன் பகுதியில், உடல் பாகங்கள் மிகச் சிறிய துண்டுகளாகச் சிதைந்திருப்பதைக் கண்டேன். 100 மீட்டருக்கு அப்பால் இருந்த மக்கள் கூட வெடிப்பால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், மூச்சுத் திணறலாலும் இறந்தனர். இந்தப் போரில் நாங்கள் கண்ட மிகவும் பயங்கரமான ஆயுதம் இதுதான்."

"வெடிப்பதற்கு முன் தப்பி ஓடிய மக்கள், 'வெடிக்கும் இரும்பு அரக்கனிடம்' இருந்து தப்பிப்பது பற்றி மட்டுமே யோசித்தனர்," என்று ஃபவ்ஸி நினைவுகூர்ந்தார்.

ஒரு கட்டடத்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள நான்கு அறைகள் தெரிகின்றன. இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. ஒரு ஆணும் குழந்தைகளும் சேதமடைந்த அந்தக் கட்டிடத்தில் உள்ள திறந்த அறைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் பலத்தீனர்களை காஸா நகரிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஏராளமானோர் அங்கேயே தங்கியுள்ளனர்.

ராணுவ நடவடிக்கைக்கான செலவைக் குறைத்தல்

கத்தாரில் உள்ள ஜோஆன் பின் ஜாசிம் பாதுகாப்பு ஆய்வு அகாடமியின் பாதுகாப்பு நிபுணரும், முன்னர் காஸா பகுதியில் பணியாற்றியவருமான பேராசிரியர் ஹானி அல்-பசௌஸ், "ராணுவ நடவடிக்கையின் செலவைக் குறைக்கவும், இஸ்ரேலியப் படையினரின் இழப்புகளைத் தவிர்க்கவும் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வெடிகுண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறது'' என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

இவை பெரும் அளவிலான வெடிபொருட்களைக் கொண்டு செல்கின்றன என்றும், சுரங்கங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் பயன்படுத்தப்பட்டு, பெரும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு, காஸா நகரத்தின் கிழக்கில் உள்ள ஒரு பல மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக காஸாவைச் சேர்ந்த கரீம் அல்-கரப்லி பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"நான் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்தேன், இருப்பினும், அனைத்து சிதறல்களும், கற்களும் எங்கள் வீட்டை வந்தடைந்தன," என்று அல்-கரப்லி நினைவு கூர்ந்தார்.

"வானம் சிவப்பாக மாறியது மற்றும் ஒளி கண்களைப் பறித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது."

பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முனீர் அல்-பர்ஷ், இஸ்ரேலிய ராணுவம் இப்போது காஸா நகருக்குள் இந்த வெடிக்கும் 'ரோபோக்களை' தினசரி நம்பியுள்ளது என்றும், இது "பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றும் மனிதாபிமானப் பேரழிவை மோசமாக்கும் ஒரு உத்தி" என்றும் கூறினார்.

ஒவ்வொரு ரோபோவும் ஏழு டன் வெடிபொருட்களைக் கொண்டு செல்கிறது என்றும், தினசரி ஏழு முதல் பத்து ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இது பெரிய அளவிலான இடப்பெயர்வுக்கு வழிவகுத்து, மேற்கு காஸாவில் மக்கள்தொகை அடர்த்தியை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 60,000 பேராக அதிகரித்துள்ளது என்று முனீர் அல்-பர்ஷ் கூறினார்.

*காஸாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் படங்கள் அல்லது வெடிப்புக்குப் பிந்தைய உடனடிப் படங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள், இஸ்ரேலின் சமீபத்திய காஸா நகரத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2z1kyn8zlo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.