Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

561388888_4264986480402893_5816077546446

கனேமுல்ல சஞ்சீவ என்பவன் யார்..? ஏன் கொலைசெய்யப்பட்டார்..?

கனமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர்

செயல்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.

*திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் இவர் கைதானவர்.

சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான “பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்” ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார்.

அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயட்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார்.

எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயற்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.

ஆனால் சமிந்தவின் தம்பி ருவன், சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உட்பட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர்.

ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உட்பட அவரது குழு.

அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார்.

மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர்.

2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான “அஜா மற்றும் சூளா” என்பவரையே பாவித்தார்.

இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.

போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.

இன்னுமொரு கொலைவழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர்.

எவ்வராயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அதுதான் நிறைவேறியுள்ளது.

Thenral MH ·

  • Replies 103
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இர

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரி

  • கருத்துக்கள உறவுகள்

download-2-12.jpg?resize=275%2C183&ssl=1

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்!

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பேருந்தின் பெறுமதி 5 கோடி ரூபாவிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், சுமார் 2.5 கோடி ரூபா பெறுமதியான மற்றைய பேருந்து மொனராகலை – கொழும்பு இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

‘பெக்கோ சமன்’ கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பேருந்துகளில் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இரண்டு பேருந்துகளும் வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பேருந்துகள் தனக்குச் சொந்தமானவை என ‘பெக்கோ சமன்’ ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

https://athavannews.com/2025/1450994

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1478446303380793 👈

அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட பெக்கோ சமனின் புத்தம் புதிய அதி சொகுசு பஸ்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-256.jpg?resize=750%2C375&ssl

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கண்டுபிடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு படகினை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் படகு, பிரியங்கா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது 400 குதிரை வலுவினை கொண்ட இயந்திரத்தைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்ற சந்தேக நபரிடமிருந்து இரண்டு நவீன துப்பாக்கிகளையும் புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணைகளில், ஆனந்தன் முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நபர்களை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக அனுப்ப உதவியதாக தெரியவந்துள்ளது.

Skipper of boat that took Ishara Sewwandi to India arrested in Jaffna

https://athavannews.com/2025/1451009

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.