Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-175.jpg?resize=750%2C375&ssl

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் தொகை கடத்த முயற்சிப்பது குறித்து கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டன் விளைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1450402

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

561052168_1265596258916563_3561060580796

561911110_1265596278916561_2821981314854

559556548_1265596265583229_5565723270434

560512430_1266104255532430_2018508869619

559946978_1266104295532426_3855988542871

565121575_1266104422199080_8931581281970

563461977_1266104388865750_8454717123638

560235649_1266104372199085_6069985997116

561338800_1266104418865747_3844296019292

🔴 தெற்கு கடலில் போதைப்பொருளுக்கான வேட்டை - பல கிலோ கண்டுபிடிப்பு!
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன.
தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன.
இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.
இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர்,
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப்பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-206.jpg?resize=750%2C375&ssl

தெற்கு கடலில் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://athavannews.com/2025/1450562

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பாரிய போதை பொருள்கள் திடிர் திடிர் என்று கைபற்ற அதை உபயோகித்த நபர்களுக்கு மாற்றீடு தேவையே அதை எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள் ?

குறைந்த பட்ச சாதாரண வியாதிகளுக்கு உரிய மருந்தே தட்டுபாடான நாட்டில் போதை புனர்வாழ்வு மையங்கள் எப்படி நிறுவ போகிறார்கள் ?அப்படியான புனர் வாழ்வு மையங்கள் இல்லாமல் போகும் பட்சம் மிக மிக கொடூரமாக சட்டம் ஒழுங்கு பாதிக்க படும் என்பதை மிக இலகுவாக மறந்து விடுகிறார்கள் .

இறுதி யுத்தத்தில் எப்படியாவது தமிழரை அழித்து தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை தமிழர் அழியணும் எனும் இன கோதாவில் ராஜபக்சா குடும்பத்தால் அறிமுகபடுத்தபட்ட விளைவுகளுக்கு சிங்களம் பொதி சுமக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இறுதி யுத்தத்தில் எப்படியாவது தமிழரை அழித்து தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை தமிழர் அழியணும் எனும் இன கோதாவில் ராஜபக்சா குடும்பத்தால் அறிமுகபடுத்தபட்ட விளைவுகளுக்கு சிங்களம் பொதி சுமக்கிறது .

வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.