Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..!  : பா. அரியநேத்திரன்

October 27, 2025

ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

2. 1990 அக்டோபர்  30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம்.

3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம்.

இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் மாதத்தில் இடம்பெற்றவை. யாழ்ப்பாண நகரம் 1980, தொடக்கம் 1995 வரை 15, ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான கோட்டையாக இரு ந்து வந்தது. ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் 1987 யூலை29, இலங்கை ஒப் பந்தம், 1987ஆகஷ்ட் 04ல் தலைவர் பிரபாகரனின் சுதுமலை பிரகடனம் எல்லாம் இடம்பெற்றது. 1987 அக்டோபர் 10ல் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும்  போர் ஆரம்பித்த பின்னர் சரியாக 11,  தினங்களால் 1987 அக்டோபர் 21ல்  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட மிலேச்சத்தன மான படுகொலையால் 70 தமிழர்கள் கொன்றழி க்கப்பட்டு 2025-10-21ம் திகதியுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

1990, செப்டம்பரில் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணம் அம் பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக் களப்பு மாவட்டம் கதிரவெளிவரையும் முஸ்லீம் ஊர்காவல்படையினர் இலங்கை இராணு வத்துடன் இணைந்து பல தமிழ் கிராமங்களில் இனப்படுகொலைகளை மேற்கொண்டனர் அத னால் முஸ்லீம் கிராமங்களான காத்தான்குடி, ஏறா வூர் பகுதிகளிலும் முஸ்லீம்மக்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் முஸ்லீம்மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்தால் விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர், 30ல் யாழ்ப்பாண முஸ்லீம்மக்கள் பாதுகாப்பாக ஒரே நாளில் வெளியேறிய சம்பவம் வருகின்ற 2025-10-30 ம் திகதியுடன் 35ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.

1995 ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 17 இல், இலங்கை இராணுவத்தி னர் 10,000 பேர் யாழ்ப்பாண நகரத்திற்கு  25 மைல் தொலைவில் போரை தொடரத் துவங்கினர்.

அது தொடர்ந்ததமையால் யாழ் குடா நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் 1995, அக்டோபர் 30ல் இடம்பெயர்ந்தனர். அது இடம்பெற்று 2025, அக்டோபர் 30ல் 30ம் ஆண்டு நினைவாகும்.இந்தத் தாக்குதல் 1995, திசம்பர் 05, வரை நீடித்தது. இந்த 50 நாள் போரில் 300 வரையிலான இலங்கை இராணுவ வீரர்களும், 550இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக அப் போது கூறப்பட்டது.

இறுதியில் இராணுவம் புலிகளிடமிருந்து நகரத்தையும் குடாநாட்டையும் கைப்பற்றியது. இதனால் விடுதலைப்புலிகள்  வன்னியில் சென்று தமது படைத்தளத்தை முழு மையாக பலப்படுத்தினர்.

1995 அக்டோபரில் யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் விடுதலைப்புலிக ளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாத நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று அப் போது நினைத்திருக்க வில்லை.

இலங்கைப் படையினரின் ‘ஒப்பரேசன் ரிவிரச’ இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெற்றது. இச்சண்டையைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணு வத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, வலிகாமம் பகுதி முழுமை யாகப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி முழு வதும் படையினரால் கைப்பற்றப்பட்டு, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக் கோடு 1995 அக்டோபர் 17ம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்ப ரேசன் ரிவிரச, சூரியக்கதிர் என்னும் இராணுவ நடவடிக்கையை அடுத்து இலங்கை இராணுவத் திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது.

அந்த இராணுவ நடவடிக்கை கந்தசஷ்டி விரத காலம் ஆலயங்களில் எல்லாம் விசேட பூசை வழிபாடுகள் நடந்த வேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போது பேசும் பொருளாக வடக்கு கிழக்கு முழுவதும் ஆச்சரியத்தை தந்திருந்தது.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு  விடுதலைப்புலிகள் ஒலிபெரு க்கி மூலமாக அறிவிப்பு விடுத்தனர்.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல் லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிக ளின் கைகளில் தான் மீண்டும் இருந்தது. இடப் பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.

மீண்டு இராணுவம் யாழில் விடுதலைப் புலிகளுடன் ஆங்காங்கே மோதல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விடுதலைப்புலிகள் யாழ் குடா நாட்டில் இருந்த படைமுகாங்களை வன்னிக்கு நகர்த்தினர்.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத் துக்கான யுத்தம் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், புலிகளால் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய யுத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் இராணுவம் அறிவித்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்த தாக மக்களாலும்நம்பப்பட்டது.

1995 திசம்பர் 23ல், மட்டக்களப்பு மாவட் டத்தில் இராணுவப் பிரிவு ஒன்றின் மீது விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 33 படையினர் கொல்லப்பட்ட போது போர் முடிவு க்கு வரவில்லை என்பது உறுதியானது. அடுத்த ஏழு மாதங்களில் புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைத்தனர்.

யாழ்குடா நாட்டில் இருந்து வன்னி காட்டுக் குள் தமது படைகளை மீளவும் மறுசீரமைத்த விடுதலைப்புலிகள் தாம் யாழ் குடா நாட்டில் கற்றுக்கொண்ட பாடத்தை மீள் பரிசீலனை செய்து 1996 ஜனவரி 22ல் இலங்கை வான் படையினரின்  M.J:17 உலங்குவானூர்தி பருத்தித்துறைக் கடலில் 39, படையினருடன் வீழ்ந்தசம்பவம், 1996, யூலை18ல்,   முல்லைத்தீவில் உள்ள படைத்தளத்தின் மீது  ஓயாத அலைகள் நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல் லப்பட்டதுடன் இராணுவ தளமும் அழிக்கப்பட் டது.

2000, மார்ச், 26ல் ஆனையிறவு இராணுவ முகாம் கைப்பற்றியது, இவ்வாறு இன்னும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒரு கரந்தடி தாக்குதல் அணியாக தோற்றம் பெற்ற விடுதலைப்புலிகள் மரபுப்படையணியாக வளர்ச்சிபெற்று 2009 மே 18, வரையும் போராடி மௌனித்தனர். இலங்கை இராணுவத்தால் அவர் களை தோற்கடிக்காதபோதுதான் உலகநாடுகள் 32க்கு மேல் இலங்கைக்கு உதவியதன் நிமிர்த்தம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித் தது என்பதே வரலாறு.

ஈழப்போர் வரலாற்றில் 1987, 1990, 1995, ஆகிய மூன்று வருடமும் அக்டோபர் மாதமும் மறக்க முடியாத மாதமாகும்..

https://www.ilakku.org/ஈழப்போர்-காலத்தில்-மறக்க/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.