Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Priyatharshan

07 Nov, 2025 | 07:03 AM

image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார்.

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு - செலவுத்திட்டமாகவும் அமைகின்றது.

வரவு - செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

2026  நிதியாண்டுக்கான  வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம்  26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு - செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இன்று  பாராளுமன்றத்தில்  நிகழ்த்தவுள்ளார்.

நாளை (8) முதல்  எதிர்வரும் டிசம்பர்  5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை  6  மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்  

2026 நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, கல்வி ,உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிடுகையில்,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைத்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிறைவேற்றப்படுகிறது. வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் முறையாக செயற்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டும் அவ்வாறான நிலையே காணப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும். ஆனால் தனியார் துறையினர் தொடர்பில் பேச்சளவில் மாத்திரமே நிவாரணங்கள் குறிப்பிடப்படும். ஆகவே வாழ்க்கைச் செலவினை குறைத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுடையதாக அமையும்.

வாழ்க்கைச் செலவுக்கும், மாத சம்பளத்துக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகிறது. ஆகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றனர்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம்

2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு  - செலவுத் திட்டத்தில் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வினை எதிர்பார்த்துள்ளோம் என பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பள விவகாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பெருந்தோட்ட மக்கள் வலியுறுத்துகின்றர்.

2026  நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வழக்கம் போலவே  பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி செலவீனத்திற்கான நீதி ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ள அதேவேளை, இந்த வரவு - செலவுத்திட்டத்தில் மக்களுடன் தொடர்பு பட்ட மக்கள் நலன்சார் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசின் கன்னி  வரவு - செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இரண்டாவது வரவு - செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டத்தில் செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64, 68000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில்  அரச செலவீனமாக 4 இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச  செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு  13,725,000, 000ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 3,563,000,000 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 210,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 270,000,000 ரூபா, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 300,000,000 ரூபாய்  ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக  வரவு  செலவுத் திட்டத்தில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000, 000  ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 1,350,000,000 ரூபாய், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு  204,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 178,000,000 ரூபாய், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 285,000, 000ரூபா என்ற வகையில்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்  2025 ஆம் ஆண்டை காட்டிலும்,  2026 ஆம் ஆண்டுக்கு  புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சுக்கு 77 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.  

2025 ஆம் ஆண்டுக்க்கான வரவு செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கக்கு   61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம்   2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே  50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவின் விடயதானத்துக்குள் உள்ள  பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் , டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்குமாக மொத்தம் 11, 6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக  பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு  மூன்று அமைச்சுகளுக்காக 1,105,782, 000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு  மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு  அமைச்சுகளுக்குமான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 297,49,80, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  ஜனாதிபதிக்கான செலவினமாக  1137,79,80000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 838,50,00000 ரூபா அதிகமாகும்.  அதேவேளை பிரதமர் செலவினமாக  2025 ஆம் ஆண்டுக்கு 117,0000,000 ரூபா  ஒதுக்கப்பட்ட  நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான  செலவீனமாக  97,50,00000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 19,50,00,000 ரூபா குறைவானதாகும்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட் டல் அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு  30,050,000,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  38,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 855 கோடி ரூபா மேலதிகமாக  ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு  271,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில்   2026 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு  301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கு  பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு  496,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  596,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு  99,500,000000 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 308,499,998,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  554,999,998,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 246,500,000.000 ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.

ஜனாதிபதியின் கீழுள்ள  நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு  2025 ஆம் ஆண்டுக்கு  714,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  634,782,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 79,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு  நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சு 54,106,300இ000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  58,500,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் 439 கோடி 37 இலட்சம் ரூபா  மேலதிகமாக  ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற் றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு  473,410,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம்  ஆண்டுக்கு   446,000,000,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2741 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப் பாசன அமைச்சுக்கு  208,722,000, 000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 221,300,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 125 கோடி 78 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்   நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற் றும் வீடமைப்பு அமைச்சுக்கு 101,282,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  103,500,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 22 கோடி 18 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு  16,738,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு   18,000,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 126 கோடி 20 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு 13,443,000, 000ரூபா  ஒதுக்கப்படட நிலையில்  2026 ஆம் ஆண்டுக்கு   11,500,000, 000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 194 கோடி 30 இலட்சம் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு  கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 11,440,000, 000 ரூபா ஒதுக்கப்படட நிலையில்  2026 ஆம் ஆண்டுக்கு   10,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 84 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்   சுற்றாடல் சுற்றாடல் அமைச்சுக்கு  16,040,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,300,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 226 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு  வலுசக்தி அமைச்சுக்கு  21இ142இ000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  23,100,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 195 கோடி 80 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு  21,463,000, 000 ரூபாய்' ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,000,000, 000 ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு  153 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு  2,564,000,000 ரூபாய்  ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 2,700,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 13 கோடி 60 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு  14,526,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 16,400,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு  187 கோடி 40 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு    13,623,000,000  ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு  16,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 237 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கு  தொழில் அமைச்சுக்கு  6,070,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,400,000,000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு   33 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 12,100,000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 13,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 140 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது .2025 ஆம் ஆண்டுக்கு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு  5,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,000,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 100 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/229638

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!

Published By: Priyatharshan

07 Nov, 2025 | 05:57 PM

image

வரவு - செலவுத் திட்டம் - 2026 - நேரலை பகுதி - I  - https://www.virakesari.lk/article/229638

  • புதிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்க 25 மில்லின் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சகல  தொழிற்றுறைகளிலும் கடன் பெற்றுக் கொள்ள 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறை தலங்களை அபிவிருத்தி செய்ய 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அப்புத்தளை பிரதேசத்தை பிரதான சுற்றுலாத்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி

  • சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கொழும்பு பேர வாவியை தூய்மைப்படுத்தி  சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • 2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் ஆள் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் - ஜனாதிபதி

  • அடுத்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கலின் போது சேவைக் கட்டணம் அறவிடப்படாது. நிகழ்நிலை முறைமை கொடுக்கல் ,வாங்கல் கருத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் AI திட்ட பயிற்சிக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ப்ரோவ்ட் பேன்ட் பற்றுறுதிச்சீட்டு ( வவுச்சர் ) நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் - ஜனாதிபதி

  • டிஜிட்டல் துறை ஆராய்ச்சியாளர்களுக்காக "அக்னி நிதியம் " உருவாக்கப்படும். இதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • சிறைச்சாலைகளை மறுசீரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • விசேட தேவையுடையவர்களின் நலன்களுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் - ஜனாதிபதி

  • ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி, சிற்றுச்சாண்டிச்சாலை மற்றும் வளாக பொது சேவை அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல கொடுப்பனவு 5000 ரூபா, இதர கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி

  • ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிப்பு - ஜனாதிபதி

  • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • பிரஜா சக்தித் திட்டம் ஊடாக சகல மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1350 ரூபா ,2026 ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1550 மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபா வழங்க பரிந்துரை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  1750 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும்  - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது - ஜனாதிபதி

  • கிராமிய வீதி அபிருத்திக்கு 24 ஆயிரம் மில்லியன் ரூபா, கிராமிய பாலம் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -  ஜனாதிபதி

  • யானை - மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும்,மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • வனவளத்துறை திணைக்களத்துக்கு நிரந்தர நியமனத்துக்கு அமைய 5000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம் - ஜனாதிபதி

  • யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வு காண 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • ஊடகவியலாளர்கள் உயர்கல்வி ,மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சீன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி

  • நெல்,வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் கொள்வனவு செய்து களஞ்சியம் செய்யும் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு  600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

 

  • மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு  உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி  திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கிரான் பாலம், பொன்டுகால் பாலம் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தூய்மையான குடி நீர்த் திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • நீண்ட தூர பேருந்து சேவைக்கு புதிதாக 600 பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • புகையிரத சேவைக்கு  நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • வலுச்சக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -  ஜனாதிபதி

  • வலுச்சக்தி்த் துறையை  வினைத்திறனாக்கும் வகையில் "வலுச்சக்தி பரிவர்தனை" சட்டமூலம் அடுத்தாண்டு  கொண்டு வரப்படும் - ஜனாதிபதி

  • கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி

  • திண்மக் கழிவகற்றலுக்கு  900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • வீதி நாய்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டு நாய்கள் இறந்ததன் பின்னர்  புதைத்தல், எரித்தலுக்காக  பிலியந்தலை  மற்றும் கெஸ்பேவ  பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மலையக மக்களுக்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு திட்டத்தைத் நிறைவு செய்ய 4290 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள 20 இலட்சம் ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் கடன் பெறும் எல்லை 60 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட தரவுகள் முறையாக செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி

  • அரச நிறுவனங்கள் தைரியமாக செயற்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை போன்று நிதி ஒதுக்கப்படும் - ஜனாதிபதி

  • சட்டத்துக்கமைய செயற்படுவதை எவ்வாறு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது -ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி

  • மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோர தீர்மானம் - ஜனாதிபதி

  • மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல்  முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் - ஜனாதிபதி

  • மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - ஜனாதிபதி

  • ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது  மனோ கணேசன் அதில் இல்லை என்று மேற்கோள் குறி ஊடாக குறிப்பிடுகிறேன் - ஜனாதிபதி

  • பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்  - ஜனாதிபதி வலியுறுத்தல்

  • போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி

  • வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி  சுமார் நான்கரை மணித்தியாலங்கள் நிகழ்த்தி நிறைவு செய்தார்.

    https://www.virakesari.lk/article/229734

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத் திட்ட உரையாற்றிய ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் விடுத்த வேண்டுகோள்!

07 Nov, 2025 | 06:05 PM

image

நான்கரை மணிநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சிகளிடம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு  -செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு - செலவுத் திட்ட உரையின் நிறைவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கையில்,    

வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/229795

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

Nov 8, 2025 - 07:26 AM

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. 

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும். 

வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும் என்றும் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்தது. 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

ஜனாதிபதி நேற்று 4 மணித்தியாலங்களுக்கு மேல் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmhpmv6oa01gyqplph0135vca

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி

07 Nov, 2025 | 03:17 PM

image

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக 1000 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க  இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத்திட்ட நேரலையை பார்வையிட https://www.virakesari.lk/article/229638

https://www.virakesari.lk/article/229742

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு; ரூ. 1,757 பில்லியன் பற்றாக்குறை

Published By: Vishnu

07 Nov, 2025 | 08:32 PM

image

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்த்தப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

அவர் உரையில், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டின் நிலையை இவ்வாண்டின் இறுதிக்குள் மீண்டும் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 5,300 பில்லியனாகவும், மொத்தச் செலவு ரூ. 7,057 பில்லியனாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ற வழக்கமான தேநீர் விருந்துபசாரம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதனிடையே, இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (08) தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும் எனவும், வாக்கெடுப்பு நவம்பர் 14 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் வாசிப்பு (குழுநிலை விவாதம்) நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/229802

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு - செலவு திட்டத்தில் அரச, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை - ரஞ்சித் மத்தும பண்டார

13 Nov, 2025 | 06:23 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வரவு - செலவு திட்டத்தில் அரச துறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட  வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக . மக்கள் விடுதலை முன்னணியும் விடுதலை புலிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு 60 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக செயற்பட்டு வந்தது. அதேபோன்று வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இன்று எமது வெளிநாட்டுக்கொள்கை,  கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், நாடு அபிவிருத்தியடைந்திருக்கும்.

மேலும் நாடு  வீழ்ச்சியடைவதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறும்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று நாணய நிதியத்தின் தாலத்துக்கும் ஆடும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார இருக்கிறார். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் நூற்றுக்கு 18வீதம் வரி குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறைத்தீர்களா என கேட்கிறோம். துறைமுகத்தில் இறக்கப்படும் கட்டணத்துக்கு எரிபொருள் வழங்குவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.வழங்குகிறார்களா? எமது காலத்தில் இருந்ததைவிட எரிபொருள் விலை தற்போது அதிகமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கைபொம்மையாக மாறியுள்ள இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துள்ளது. நாங்கள் அட்சியில் இருக்கும்போது நாட்டில் வறுமை வீதம் நூற்றுக்கு 10வீதமாகவே இருந்தது. தற்போது அது நூற்றுக்கு 35வீதமாக அதிகரித்துள்ளது. அதனால் திறைசேரியில் பணம் அதிகமாக இருந்தால், மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்களை வழங்குங்கள். அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி இருக்கின்றனர்.

எனவே வரவு செலவு திட்டத்தில் அரசதுறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதனால் முடிந்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தட்டும். பாெதுத் தேர்தலைவிட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு 23இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தினால் மேலும் 25இலட்சம் வாக்குகள் இல்லாமல்போகும். அதனால் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/230276

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Nov 14, 2025 - 07:26 AM

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. 

இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும். 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmhy7il7q01lho29nyz2krtk5

  • கருத்துக்கள உறவுகள்

வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

November 14, 2025

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the vote) என கட்சி முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/budget-2026-sri-lanka-tamil-government-party-decides-not-to-participate-in-the-vote/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு - 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Published By: Vishnu

14 Nov, 2025 | 07:15 PM

image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை (14 ) பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 8 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானும் ஆதரவு வாக்கை பதிவுசெய்தார்.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியினர் இன்றைய இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் பதவியிலும் உள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 7 ஆம் திகதி முன்வைத்த வரவு–செலவுத் திட்டம் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று சற்று முன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நடைமுறையுடன் தேசிய மக்கள் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு–செலவுத் திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

https://www.virakesari.lk/article/230386

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்

Nov 15, 2025 - 06:55 AM

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவு திட்டம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வரையில் வரவு செலவு திட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்று வந்தது. 

இந்தநிலையில் நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. 

குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர். 

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmhzlv7ja01mgo29nvku1ow5o

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று : வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு!

Published By: Vishnu

05 Dec, 2025 | 07:10 AM

image

(இராஜதுரை ஹஷான்)

 ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில்  கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு   சமர்ப்பித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமான மற்றும் மானியங்கள்   5,300   பில்லியன் ரூபா மொத்த செலவினம்  7,057 பில்லியன் ரூபா என்று  குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1757 பில்லியன் ரூபாவாகும்.

2026 நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள்,வைத்தியர்கள், விவசாயிகள்,கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுயையினர் குறித்துவிசேட  கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக வரிகள் ஏதும் அடுத்தாண்டுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபாய்,பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாய், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாய்,கல்வி , உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாய், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாய், அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு  வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு  500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது.

நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான  இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இலக்குகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். அரச செலவினத்துக்காக ஒத்துக்கப்பட்டுள்ள செலவினத்தை அதிகரிக்க நேரிடும். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்து புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய இக்கட்டான  நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால திட்டமிடல் குறித்து விசேட உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் வாசிப்பின் போது  வாக்கெடுப்பு கோரல் இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின்  சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல் தற்போதைய நெருக்கடியான நிலையில் வரவு - செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,எதிர்க்கட்சிகளில் எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் தாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில்  வரவு- செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/232482

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Dec 5, 2025 - 07:33 PM

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது.

இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

https://adaderanatamil.lk/news/cmisxqy2602fbo29n08z2vdsd

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.