Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 Nov, 2025 | 03:59 PM

image

மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு  மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட  படகுகள்,  நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். பின்னர், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குத் திரும்பினர்.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால் மீன் பிடித்துவிட்டு உடனடியாக மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர்.

கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான படகில்  சுமார்  3 மீட்டர் நீளம் கொண்ட  115 கிலோ நிறை  கொண்ட  மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது.

1000925890.jpg

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112  கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை  கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதில்  மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 80 ஆயிரம் ஆகும்.

இதன்போது மீனை பெற்றுச் சென்ற கேரள வியாபாரி கூறுகையில், மஞ்சள் வால் கேரை  மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்துவிடுவேன் என்றார்.

வாள் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அவை வேகமாக இடப்பெயர உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகை மீன்கள் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியவை. இந்த மீன் வழக்கமாக 3 மீற்றர் நீளமும், அதிகபட்சம் 4.55 மீற்றர் நீளமும் மற்றும் 550 கிலோ  எடை வரை வளரக்கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

1000925894.jpg

1000925896.jpg

1000925893.jpg

https://www.virakesari.lk/article/230907

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.

பாறை.... மீன் என்பது பிழை. பாரை மீன் என்றே சொல்வார்கள். அதுதான் சரி.

வீரகேசரி... அண்மையில் தமிழை பிழையாக எழுதிக் கொண்டு வருகின்றமை கண்டனத்துக்குரியது.

வருகின்ற இளைய தலைமுறைக்கு... சரியான தமிழ் சொற்களை, பத்திரிகைகள் எழுத வேண்டும். தமிழ் தெரியாத பத்திரிகையாளர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும்.

எந்த இனமும்... தமது தாய் மொழியில் வரும் பத்திரிகைகளில் எழுத்துப் பிழை விடுவதை விரும்ப மாட்டாது. ஆனால் தமிழ் இனத்தில் இந்த எழுத்துப் பிழைகளை எவரும் சுட்டிக் காட்டுவதும் இல்லை, பத்திரிகைகள் அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்பதும் இல்லை என்ற அசமந்தப் போக்கே காணப்படுகின்றமை வெட்கக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாறை.... மீன் என்பது பிழை. பாரை மீன் என்றே சொல்வார்கள். அதுதான் சரி.

ஆம், பாரை மீன், ஏனெனில் பரந்து பட்ட அதன் உருவஅமைப்பு.

பாறை மீன் - நேரடியாக மொழி பெயர்த்தால் - stone fish - இது மிகவும் விடம் உள்ள மீன்,

பாறையோடு பாறையாக பாறை தன்மை உள்ள கடலில், கடற்கரையில் மறைந்த்து இருப்பது. (இந்த மீன்கள் ஈரலிப்பு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியவை)

அதனால், பாறை த்தன்மை உள்ள கடற்கரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், அதன் முள் குத்தும் போது ஊசியினால் மருந்த்து ஏற்றுவது போல விஷத்தை ஏற்றும்

இதன் விளைவுகள் - இறப்பு, அல்லது அங்கம் (அல்லது உடல் பகுதி) அகற்ற படவேண்டிய நிலை பொதுவாக.

அருமையாகவே, இவை தவிர்க்கப்படுவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

images?q=tbn:ANd9GcRiQriXiAV1bw5mSOmfe0I images?q=tbn:ANd9GcR7cUEx5b3VApNXB51Sjt0

maxresdefault.jpg

இதுதான்... ஆபத்தான பாறை மீன்.

நாம் சாப்பிடும் பாரை மீனை, பாறை மீன் என்று குழப்பி அடிக்கும்

பத்திரிகையாளர்களை நினைக்க கடும் கோபம் ஏற்படுகின்றது. அடி முட்டாளுகள்.

1669382369.jpeg

இது...நாம் சாப்பிடும் பாரை மீன்.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.