Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய மும்முனை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

Published By: Vishnu

18 Nov, 2025 | 11:25 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) மிகவும் பரபரப்பை எற்படுத்திய மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

பிறயன் பெனெட் (49), டடிவான்ஸே மருமணி (30) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன.

மத்திய வரிசையில் அணித் தலைவர் சிக்கந்தர் ராசா ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். இந்த மூவரை விட ப்றெண்டன் டெய்லர் (14) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

1811_mhd_nawaz.png

பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது பாகிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஷிப்ஸதா பர்ஹான் (16), பாபர் அஸாம் (0), சல்மான் அகா (1), சய்ம் அயூப் (22) ஆகியோர் கவனக் குறைவான அடி தெரிவுகளால் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

எனினும் மத்திய வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பக்கார் ஸமான் (44), உஸ்மான் கான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

தொடர்ந்து உஸ்மான் கான், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தனர்.

உஸ்மான் கான் 37 ஓட்டங்களுடனும் மொஹ்ஹமத் நவாஸ் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மொஹம்மத் நவாஸ்

இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி நாளைமறுதினம் ஸிம்பாப்வேயை எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/230747

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரி20இல் ஸிம்பாப்வேயிடம் இலங்கை மிக மோசமான தோல்வி

Published By: Vishnu

20 Nov, 2025 | 11:27 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயிடம் 67 ஓட்டங்களால் இலங்கை மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

மீண்டும் அணித் தலைவர் பதவியை ஏற்ற தசுன் ஷானக்கவுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த வருடம் இலங்கையிலும் இந்தியாவிலும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த வருடம் இரண்டாவது தடவையாக ஸிம்பாப்வேயிடம் இலங்கை தோல்வி அடைந்துள்ளது.

ஹராரேயில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இருதரப்பு சர்வதேச ரி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயிடம் இலங்கை 5 விக்கெட்களால் தோல்வி அடைந்திருந்தது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இந்த தோல்விகள் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் ரி20 கிரிக்கெட்டில் ஸிம்பாப்வேயிடம் ஓட்டங்கள் ரீதியில் இலங்கை அடைந்த மிகப் பெரிய தோல்வியாகவும் இன்றைய தோல்வி பதிவானது.

அத்துடன் ஐசிசியில் பூரண அந்தஸ்து பெற்ற நாடொன்றுக்கு எதிராக ஸிம்பாப்வே ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

இப் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க களத்தடுப்பைத் தெரிவு செய்தது இலங்கைக்கு பெரும் தாக்கத்தை கொடுத்தது.

ஸிம்பாப்வேயினால்   நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.  

ஸிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச ரி20 போட்டியில் 3 மாதங்கள் இடைவெளியில் இலங்கை 100 ஓட்டங்களுக்குள் சுருண்டது இது இரண்டாவது தடவையாகும். கடந்த செப்டெம்பர் மாதம் 17.4 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு இலங்கை சுருண்டிருந்தது. அதுவே ரி20 கிரிக்கெட்டில்  ஸிம்பாப்வேக்கு எதிராக இலங்கை பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

இலங்கை துடுப்பாட்டத்தில் தசுன் ஷானக்கவும் பானுக்க ராஜபக்ஷவும் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பவர் ப்ளே நிறைவில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அதன் பின்னர் இலங்கை அணியினால் மீள முடியாமல் போனது.

பானுக்க ராஜபஷ 11 ஓட்டங்களையும் தசன் ஷானக்க 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 12 உதிரிகள் பதிவானது.

2011_brian_evans.png

பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் நிகரவா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

ப்றயன் பெனெட் 49 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.

2011_sikkandar_raza.png

மத்திய வரிசையில் ரெயான் போல் 18 ஓட்டங்களையும் டஷிங்கா முசேகிவா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி முடிவுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் ஸிம்பாப்வே அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியது.

ஆட்டநாயகன்: சிக்கந்தர் ராஸா.

https://www.virakesari.lk/article/230961

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது நேரடித் தோல்வி

23 Nov, 2025 | 04:39 AM

image
(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.


பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.


ஏற்கனவே ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த இலங்கைக்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டினால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.


சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.


துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் ஜனித் லியனகே 41 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 25 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் காமில் மிஷார 22 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.


துடுப்பாட்டத்திற்கு கடினமாக அமைந்த ஆடுகளத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது.


துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் சஹிப்ஸாதா பர்ஹான் 45 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 80  ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
சய்ம் அயூப் 20 ஓட்டங்களைப் பெற்றார்.


பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மொஹமத் நவாஸ்

https://www.virakesari.lk/article/231152

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான், பந்துவீச்சில் தாரிக் அபாரம், மும்முனை ரி20 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

Published By: Vishnu

24 Nov, 2025 | 12:10 AM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டி மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது.

பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் உஸ்மான் தாஹிர் பதிவுசெய்த  ஹெட் - ட்ரிக்கும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

2311_usman_tariq.png

மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் சய்ம் அயூப் (13) ஆட்டம் இழந்தார்.

ஆனால், சாஹிப்ஸதா பர்ஹான், முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலப்படுத்தினர்.

_DSC4669.jpg

சாஹிப்ஸதா 41 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 52 பந்துகளில் 7 பவண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களையும்  பெற்றனர்.

பக்கார் ஸமான் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட் சரிந்தது.

ஆனால், சிக்கந்தர் ராஸா (23), ரெயான் பேர்ல் ஆகிய இருவரும் ஸிம்பாப்வேயை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

சிக்கந்தர் ராஸா ஆட்டம் இழந்த பின்னர் வரிசையாக விக்கெட்கள் சரிந்தன.

இதனிடையே 10ஆவது ஓவரில் உஸ்மான் தாரிக் தனது 2, 3, 4ஆவது பந்துகளில் டோனி முனியொங்கா, டஷிங்கா முசேக்கிவா, வொஷிங்டன் மஸகட்ஸா ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

ஆனால், ரெயால் பேர்ல் தனி ஒருவராகத் திறமையை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/231237

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கைக்கு இறுதிக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி தேவை

Published By: Vishnu

25 Nov, 2025 | 10:09 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற மிகவும் தீர்மானம் மிக்க மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

ஆனால், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட இலங்கை தகுதிபெறுவதாக இருந்தால் எஞ்சியுள்ள பாகிஸ்தானுடனான இரண்டாம் கட்டப் போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டும்.

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு தொடர்களில் 6 போட்டிகளில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் அணிகள் நிலையில் ஸிம்பாப்வேயும் இலங்கையும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் ஸிம்பாப்வே தொடர்ந்தும் 2ஆம் இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது.

இன்றைய போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மிகவும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 58 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

12 ஓட்டங்களைப் பெற்ற காமில் மிஷாரவுடன் 34 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெத்தும் நிஸ்ஸன்க இட்டுக்கொடுத்தார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரெயான் பேர்ல் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 37 ஓட்டங்களையும் ப்றயன் பெனட் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி லீக் போட்டி நாளைமறுதினம் நடைபெறுவுள்ளது.

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

https://www.virakesari.lk/article/231444

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது இலங்கை

Published By: Vishnu

27 Nov, 2025 | 10:53 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற கடைசி இரண்டாம் கட்ட லீக் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கை மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியதன் மூலமே இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

காமில் மிஷார குவித்த அபார அரைச் சதமும் துஷ்மன்த சமீரவின் 4 விக்கெட் குவியலும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இந்தப் போட்டி முடிவை அடுத்து இறுதிக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஸிம்பாப்வே அணியினர் தமது சொந்த நாட்டுக்கு திரும்ப தயாராகின்றனர்.

சற்று கடினமான ஆனால் எட்டக்கூடிய 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.

மிகத் துல்லியமாக பந்துவீசிய துஷ்மன்த சமீர தனது முதல் இரண்டு ஒவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி பலம்வாய்ந்து பாகிஸ்தான் துடுப்பாட்ட வரிசையை திக்குமுக்காடச் செய்தார்.

இதன் கராணமாக பவர் ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியது.

பாகிஸ்தானின் முன்வரிசையில் சய்ம் அயூப் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 27 ஓட்டங்களைப் பெற்றார்.

சாஹிப்ஸதா பர்ஹான் (9), பாபர் அஸாம் (0), பக்கார் ஸமான் (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எவ்வாறாயினும் அணித் தலைவர் சல்மான் அகா, உஸ்மான் கான் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கட்டி எழுப்ப முயற்சித்த போது உஸ்மான் கான் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அணித் தலைவர் சல்மான் அகா தனித்து போராடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.

அவரும் மொஹமத் நவாஸம் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை அண்மிக்கச் செய்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹம்மத் வசிம் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 19ஆவது ஓவரில் ஏஷான்  மாலிங்கவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.

கடைசி ஒவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தெவைப்பட்டது. அந்த ஒவரை மிகவும் நேர்த்தியாக வீசிய துஷ்மன்த சமீர 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கையை வெற்றி அடையச் செய்தார்.

சல்மான் அகா 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4  விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைக் குவித்தது.

இளம் ஆரம்ப வீரர் காமில் மிஷார அனுபவசாலிபோல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

12ஆவது சர்வதேச ரி20 போட்டியில் விளையாடும் அவர் இந்த வகை கிரிக்கெட்டில் பதிவுசெய்த அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

குசல் மெண்டிஸ் 23 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெரேரா 6 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறினார்.

இதனை அடுத்து காமில் மிஷாரவும் ஜனித் லியனகேவும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது காமில் மிஷார களம் விட்டகன்றார்.

அதன் பின்னர் ஜனித் லியனகேவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் 5ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஜனித் லியனகே 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க 17 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/231723

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

29 Nov, 2025 | 09:04 PM

image

(நெவில் அன்தனி)
ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான மும்முனை சர்வதேச ரி20 கிரக்கெட்  போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை  அனர்த்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஷீஹீன் ஸா அப்றிடி, மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளில் இலங்கை வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

காமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற ஓரளவு பலமான நிலையில் இருந்தது.

ஆனால், குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புடன் 52 பந்துகளில் எஞ்சிய 9 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இலங்கை இழந்தது.
காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை.

காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது.

பந்தவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.

95.jpg

32.jpg

https://www.virakesari.lk/article/231978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு மும்முனை ரி - 20 தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது

Published By: Digital Desk 3

29 Nov, 2025 | 11:22 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் எதிர்பார்த்தவாறு மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஆனால், இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு இலகுவாக அமையவில்லை.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 115 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சிரமத்துக்கு மத்தியில் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பயினானது.

பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 36 ஓட்டங்களையும் சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவிச்சில் பவன் ரத்நாயக்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை துடுப்பாட்டத்தில் காமில் மிஷார மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார்.

அவரது சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது.ஆனால், இலங்கையின் எஞ்சிய 9 விக்கெட்கள் 31 மேலதிக ஓட்டங்களுக்கு சரிந்தன.

காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை.
காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 

உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது.பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

45.jpg

https://www.virakesari.lk/article/231983

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.