Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 Dec, 2025 | 03:13 PM

image

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது.

அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது.

ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-17_at_13.21.55.jp

WhatsApp_Image_2025-12-17_at_13.21.36.jp

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி

Published By: Vishnu

18 Dec, 2025 | 09:40 PM

image

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும்.

மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பங்களித்துள்ளன.

UCPM மனிதாபிமான உதவி விநியோகத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நேற்று (17) ஒரு தொகுதி மனிதாபிமான உதவிகள் கிடைத்ததுடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் இல் இருந்து இரண்டு சரக்கு விமானங்கள் கொழும்புக்கு வந்தன.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Carmen Moreno, பிரான்ஸ் தூதுவர்  Rémi Lambert மற்றும் ஜெர்மன் தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Sarah Hasselbarth ஆகியோர் மனிதாபிமான உதவிகளை இந்நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சதுர லியனாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மனிதாபிமான உதவிப் பொருட்களில் கூடாரங்கள், மெத்தைகள், சுகாதாரம் மற்றும் சமையலறைப் பொருட்கள், படுக்கைகள் மற்றும் நீர் வடிகட்டிகள் போன்ற 83 டொன் நிவாரணப் பொருட்கள் இதில் அடங்கும். இந்த பொருள் உதவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், இந்நாட்டின் அனர்த்த மதிப்பீடு மற்றும் மீட்பு செயல்முறைக்கு உதவ இத்தாலி பொறியலாளர்கள் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசர முகாமைத்துவ சேவை (EMS) விரைவான வரைபடவியல் மூலம் இதுவரை சுமார் 30 வரைபடங்களை உருவாக்கி வழங்கியுள்ளது.

WhatsApp_Image_2025-12-18_at_20.49.144.j

WhatsApp_Image_2025-12-18_at_20.49.133.j

WhatsApp_Image_2025-12-18_at_20.49.111.j

WhatsApp_Image_2025-12-18_at_20.49.12.jp

WhatsApp_Image_2025-12-18_at_20.49.14.jp

WhatsApp_Image_2025-12-18_at_20.49.11.jp

aus.jpeg

WhatsApp_Image_2025-12-18_at_20.49.09__1

https://www.virakesari.lk/article/233770

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.