Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல்

18 Dec, 2025 | 06:27 PM

image

(நெவில் அன்தனி)

மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து  பலமான நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

1812_tom_latham_and_devon_convey.png

அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

1812_tom_latham.png

91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும்.

மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

1812_devon_convey.png

கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை.

மைல்கல் சாதனைகள்

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர்.

அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும்.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும்.

இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது.

கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும்.

https://www.virakesari.lk/article/233757

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இன்னிங்ஸ்களிலும் லெதம், கொன்வே சதங்கள் குவித்து தனித்துவ சாதனை, மே. தீவுகளின் வெற்றிக்கு 419 ஓட்டங்கள் தேவை

21 Dec, 2025 | 02:39 PM

image

(நெவில் அன்தனி)

மவுன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினர்.

2112_tom_latham_twin_hunded.png

இதன் மூலம் சகல விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற தனித்துவமான சாதனை ஒன்றை நிலைநாட்டினர்.  

மேலும் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் குவித்த டெவன் கொன்வே நியூஸிலாந்து சார்பாக இந்த சாதனையை நிகழ்த்திய முதலாவது வீரரானார்.

இப் போட்டியில் மிகவும் கடினமான 462 ஓட்டங்ககளை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன. நியூஸிலாந்து ஒரு படி மேல் சென்று 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.

நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கெட்களையும் இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றது.

2112_kavem_hodge.png

கவெம் ஹொஜ் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம், டெவன் கொன்வே சதங்கள் குவித்து அசத்தினர்.

முதல் இன்னிங்ஸில் ஆரம்ப விக்கெட்டில் 323 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

2112_tom_latham_and_devon_conway_world_r

2112_devon_conway_twin_ton.png

அவர்கள் இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆரம்ப விக்கெட்டில் மொத்தமாக 515 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினர்.

இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முச்சத இணைப்பாட்டத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சத இணைப்பாட்டத்தையும் பகிர்ந்த முதலாவது ஜோடி என்ற சாதனையை டொம் லெதமும் டெவன் கொன்வேயும் நிலைநாட்டினர்.

இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதங்கள் குவித்தவுடன் ஆட்டம் இழந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 575 - 8 விக். டிக்ளயார்ட் (டெவன் கொன்வே 227, டொம் லெதம் 137, ரச்சின் ரவிந்த்ரா 72 ஆ.இ., கேன் வில்லியம்சன் 31. அஜாஸ் பட்டேல் 30, ஜஸ்டின் க்றீவ்ஸ் 83 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 100 - 2 விக்., அண்டர்சன் பிலிப்ஸ் 154 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (கவெம் ஹொஜ் 123 ஆ.இ., ப்றெண்டன் கிங் 63, ஜோன் கெம்பெல் 45, அலிக் அத்தானேஸ் 45, ஜஸ்டின் க்றீவ்ஸ் 43, உதிரிகள் 36, ஜேக்கப் டவி 86 - 4 விக்., அஜாஸ் பட்டேல் 113 - 3 விக்., மிச்செல் ரே 89 - 2 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: 306 - 2 விக். டிக்ளயார்ட்  (டொம் லெதம் 101, டெவன் கொன்வே 100, ரச்சின் ரவிந்த்ரா 46 ஆ.இ., கேன் வில்லியம்ஸ் 40 ஆ.இ., கவெம் ஹொஜ் 80 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் (ப்றெண்டன் கிங் 37 ஆ.இ.

https://www.virakesari.lk/article/234014

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.