Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை

Published By: Vishnu

22 Dec, 2025 | 08:13 PM

image

கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும்.

இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்கள்

இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. 

இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது.

எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

மத்திய மாகாணம் கடுமையாக பாதிப்பு

மத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளப்பெருக்குகளும், ஓரளவு மண்சரிவுகளுமாகும்.

உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம்

பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர், இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும். இதனால் போக்குவரத்து, சந்தை அணுகல் மற்றும் அடிப்படை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள், விவசாயம், கல்வி – கடுமையான தாக்கம்

வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் : சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம்

விவசாயம்: நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம்

பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சுமார் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவை கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன.

பாதுகாப்பற்ற சமூகங்களுக்கு அதிக அபாயம்

வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான நிர்வாகி கேவோர்க் சர்க்ஸ்யான் இதுகுறித்து கூறுகையில்,

“பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீண்டகால சமூகப் பலவீனங்கள் மக்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல குடும்பங்கள் பெண்கள் அல்லது முதியவர்கள் தலைமையிலானவையாக உள்ளன. இதனால் சமூக மையமான மீட்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன” என தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் அவசர உதவி

சூறாவளிக்குப் பின்னர் உடனடியாக உலக வங்கி குழுமம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியை திரட்டி, சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்க உதவி வழங்கியுள்ளது.

மீட்பு செலவுகள் மேலும் அதிகமாகும்

இந்த 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட, முழுமையான மீட்பு மற்றும் மீள் கட்டுமான தேவைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மனிதாபிமான தேவைகள், வாழ்வாதார மீட்பு, காலநிலைத் தாங்கும் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மீட்பு திட்டங்கள் அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள உலக வங்கி, இலங்கை அரசின் வெளிநாட்டு வளத் துறை, நிதியமைச்சகம், தேசிய திட்டமிடல் துறை மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234142

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டித்வா தாக்கம் - இலங்கையின் சேதம் தொடர்பில் உலக வங்கி அறிக்கை

Dec 22, 2025 - 07:50 PM

டித்வா தாக்கம் - இலங்கையின் சேதம் தொடர்பில் உலக வங்கி அறிக்கை

கடந்த நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தெரிவித்துள்ளது. 

உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இந்தப் புயலினால் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 மில்லியன் மக்களும் 5 இலட்சம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானதுடன் அங்கு கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள் மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் என உட்கட்டமைப்புக்கு மட்டும் 1.735 பில்லியன் டொலர் (மொத்த சேதத்தில் 42%) இழப்பு ஏற்பட்டுள்ளது. 

குடியிருப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு சுமார் 985 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

நெல், மரக்கறி பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துறைக்கு 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

இது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களுக்கு 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

வறுமை மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இந்த அனர்த்தத்தினால் மீண்டெழுவதில் அதிக சவால்களை எதிர்கொள்வதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீளமைக்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இருந்து 120 மில்லியன் டொலர்களை உலக வங்கி அவசரமாக ஒதுக்கியுள்ளது. 

நிவாரணப் பணிகளைத் தாண்டி, எதிர்காலக் கட்டுமானங்களில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான வடிவமைப்புகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 

இந்த மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தலைமைத்துவத்தை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. 

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், திறைசேரி, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனர்த்தங்கள் வறுமை கோட்டில் உள்ளவர்களையும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பெரும்பாலும் பாதிக்கின்றன. 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அணுகுமுறையானது, அனர்த்தங்களுக்குப் பின்னர் முடிவெடுப்பதற்குத் தேவையான ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் 54 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில், GRADE உலகளவில் 71 அனர்த்தத்திற்குப் பிந்தைய மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளது. 

தரையில் நேரடியாக மேற்கொள்ளப்படும் விரிவான மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, இவை சுமார் 90 சதவீத துல்லியமான தரவுகளுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன. 

இலங்கைக்கான GRADE அறிக்கையானது, உலக வங்கியின் ஒத்துழைப்புடன், வளர்முக நாடுகளில் அனர்த்த முகாமைத்துவத்தை பிரதானப்படுத்தும் உலக வங்கியின் திட்டத்தின் ஊடாக, அனர்த்தக் குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதி (GFDRR) மற்றும் ஜப்பானின் நிதி அமைச்சு ஆகியவற்றின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjh8tghp030eo29nbwlnko1j

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.