Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட சனத்துக்கு என்ன வழிகளில் எல்லாம் சாவுகள் வருகுது. மருத்துவ நண்பர் சலித்து கொள்கிறார்.

என்னாச்சு டொக்டர்?

நேற்று இரவு 40 சனத்துக்கு மேல சாகிற நிலையில் கொண்டு வந்தாங்கள். அவ்வளவு பேரும் கண்டங்கருவளலை பாம்பு கடிச்ச கேஸ். ஒரே இரவில ஒரே நேரத்தில இவ்வளவு சனமும் பாம்புக்கடியால சாக கிடக்குதுகள்.

அந்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் நடந்த சம்பவத்தை கூறத்தொடங்கினார்.

தர்மபுரம் சந்தியில இருந்து கல்மடு போற பாதையில இருக்கிற இடங்கள் எல்லாம் சனம் இருக்குதுகள். எது மேட்டு நிலம் எது தாழ் நிலம் என்று எதையும் சிந்திக்க முடியாத நிலமை. எங்கையாவது தங்கிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் மக்களுக்கு இருந்தது. சனம் தறப்பாளை போட்டு இருக்குதுகள். திடீர் என்று மழை பெய்ததும் தாழ்நிலப்பகுதி எல்லாம் தண்ணி ஏறீட்டுது. அதோட பாம்புகளும் ஏறீட்டுது. யாரும் பாம்புகள் வந்தத பெரிசா பார்க்கல்ல எங்கையாவது தங்கினா சரி என்று சனம் நினைச்சுது. சனத்தின் படுக்கைக்கு கீழையும் உடுப்புகளுக்கையும் இந்த கண்டங்கருவளளை பாம்பு சுருண்டு கிடந்திட்டு தீண்டி இருக்குது. முதலில் பலருக்கு பாம்புக் கடி என்றது கூட தெரியவில்லை ஏனென்றா இந்த வகை பாம்புகள் கடித்தால் கடி அடையாளங்கள் கூட தெரியாது.

அவர் கூறிவிட்டு வெற்று நிலத்தை வெறித்து பார்க்கிறார்.

குரலை சீர்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறார்.

இங்கே பாம்பு தீண்டுவது சாதாரணமாக இருந்தாலும் இப்பிடி பெரும் தொகையாக ஒரே நேரத்தில் தீண்டியது இல்லை. நினைக்க விசரா கிடக்கு தம்பி. ஒரு புறம் இயற்கை சீற்றம் மறுபுறம் கொடிய விலங்குகள் இன்னொருபுறம் சிங்கள வெறியனின் கொலைவெறித்தாண்டவம் சனம் எப்பிடி தாங்குறது? அவர் மௌனித்து போகிறார்.

மச்சான் இயற்கை கூட எங்கள வாழ விடாதா? நண்பன் கேட்கிறான். பதில் கூற முடியாது விக்கித்து நின்ற என்னை மீண்டும் மருத்துவரின் குரல் அசைக்கிறது.

எங்கட சனம் கிளிநொச்சிய விட்டு நகர்ந்து கொண்டிருக்குது இங்க இருக்கிறது இனி பயங்கரம் இப்ப கிளிநொச்சி ஒரு சூனிய பிரதேசம் மாதிரி எந்தநேரமும் தாக்குதல் நடக்கலாம். தெரிந்தும் பாம்புக்கடியால அங்க இருந்து சனத்த இங்க கொண்டு வந்தனாங்கள். அவர்கள காப்பாத்தியே ஆகவேணும். மருந்துகள் இல்லை எந்த மருந்து பொருட்களையும் சிங்கள அரசு எமக்கு அனுப்புவதில்லை. இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு சென்ற பின் எமக்கு முன்பிருந்ததை விட அதிகமான மருந்து பொருட் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பாம்புக்கடி நோயாளிக்கு குறைந்தது 25 க்கு மேற்பட்ட விசமுறிவு மருந்தை நாம் கொடுக்க வேண்டி வரும் இந்த நிலையில் எம்மிடம் இருக்கும் இருப்பு குறைவாக இருந்தாலும் எம்மக்களை காப்பாற்ற வேண்டி தேவை இருக்கிறது. அதனால எந்த இடரையும் சந்திக்க மருத்துவப்பிரிவும் எம் போராளிகளும் தயாராக உள்ளோம்.

ஏன் டொக்டர் பாம்பு கடிச்சா அங்க வைச்சு ட்ரீட் பண்ண முடியாதா?

முடியும் ஆனால் அதற்கு Medical Ventilator எங்களால கொண்டு போக முடியவில்ல அதனால தான் ஆக்கள இங்க கொண்டு வந்தம். அவர் கூறிய வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக்கருவி பற்றி எதுவும் விளங்காமல் திருப்ப வினவிய போது, பாம்புக்கடி பற்றி சிறு விளக்கமே தந்தார்.

இந்த வகை பாம்புகள் கடித்தால் உடனடியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். அதிலும் சுவாசநரம்பியல் தொகுதியை முற்றமுழுதாக செயலிழக்க செய்யும். இதனால் மூச்சுத்திணறலை உருவாக்கி சுவாசப்பிரச்சனையை கொண்டுவரும் அதனால் தான் சாவுகள் நடக்கும். இதற்கு உடனடி மருத்துவம் செயற்கை முறை சுவாசம் கொடுக்கப்பட வேணும் அத்தோடு உடனடியாக ASV குடுக்க வேணும் அதாவது Anti Snake Venom (விசமுறிவு மருந்து.) இது அடிப்படை பாம்புக்கடி மருத்துவ சிகிச்சை. அதோட செயற்கை சுவாசம் குடுக்க வேண்டும். அதற்காக நாம் Ambu bag முறையில் செயற்கை சுவாசத்தை கொடுத்தோம் ஆனால் தமிழீழ மருத்துவப்பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள் என்பன எமக்கு பட்டறிவைத் தந்தன. Ventilator போன்ற கருவிகளை பயன்படுத்த தொடங்கினோம் அதனூடாகவே செயற்கை சுவாசமுறமையை இலகு படுத்தினோம். இப்போதும் இந்த பாம்புக்கடி நோயாளர்களுக்கு செயற்கை சுவசம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்தது.

ஆனால் இப்போது "வென்டிலேட்டர்" கருவியை இங்கிருந்து கழற்றி உடனே நகர்த்திக் கொண்டு செல்ல முடியாத சூழல் அதனால் இவர்களை செயற்கை சுவாசம் கொடுப்பதாற்காக அங்கிருந்து இங்கே கொண்டுவந்திருக்கிறோம். அவர் கூறிய போது என்ன டொக் சொல்லுறீங்கள் இந்த சூனியபிரதேசத்துக்கா? எம் மக்கள் எவ்வகை துன்பங்களை எல்லாம் சந்திக்கிறார்கள். என்பது புரிந்தது. அத்தோடு இந்த மருத்துவ போராளிகளும் மக்களுக்காக எத்தகைய துன்பங்களை சுமக்கின்றனர் மனம் ஒரு முறை நினைத்தாலும்

டொக்டர் ஆக்களுக்கு பிரச்சனை ஒன்றுமில்லையா? ஒரே ஒரு பிள்ளை உடனடியாகவே இறந்திட்டுது. சின்ன பிள்ள இருக்கிறதுக்கு கூட இடமில்லாமல் மதகு ஒன்றுக்குள் இருந்திருக்குது. திடீர் என்று தண்ணி ஏறினதும் மதகுக்கு மேல படுத்திருக்குது பெட்சீட்டோட பாம்பு கிடந்தது தெரியாமல் இழுத்து போர்த்துக் கொண்டு கிடந்த போது பாம்பு கடிச்சிருக்கு பிள்ளைய தப்ப வைக்க முடியவில்லை. மற்ற ஆக்கள காப்பாத்திடுவம் என்று நம்புறன்.

அவர் எத்தனை காயங்களை கண்டிருப்பார்? எத்தனை மக்களை சந்தித்திருப்பார் ? ஆனாலும் மனது ஒரு நிலைப்பட முடியவில்லை. இயற்கையும் எம்மீது சாவினை திணிப்பது கண்டு நொந்திட வழியற்று நிற்கிறார். செல்களினால் சிதறிப்போகும் உறவகளின் குருதியை கண்ட போதும் தயங்காத அவர் இப்போது விழி கலங்கி நிற்கிறார். என்ன செய்ய என்று தெரியாத நாமும் மக்களின் துன்பங்களை எண்ணி அழுவதை தவிர வேறு எதுவும் இல்லை.

இது 2008 ஆம் வருடத்தின் மாரி காலம் நடந்த சம்பவம். தாயகம் இன்று மழைநீரால் மூடப்பட்டுக்கிடக்கும் நிலை கண்டு இது நினைவில் எழுந்து ஆடியது.

நன்றி தணிகை அண்ணா

இ.இ.கவிமகன்

நாள்: 06.12.2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.