Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது.  அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார்.


அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒரு பொறுப்பற்ற ஒரு நாட்டின் இறைமையை மீறும் குற்ற நடவடிக்கையாகும் Violation of sovereignty and international law ஜனநாயக விரோத ஒரு நாட்டின் இறைமையை, சர்வதேச சட்டங்களை, ஐ.நா. பிரகடன்களை மீறிய ஒரு சட்டம் அறம் அற்ற ஒரு அத்துமீறிய செயல். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தென் அமெரிக்க நாடுகள் வரை இன்னும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்க தொடர்ந்து தனது நலன் மட்டும் சார்ந்து ஆகிரமிப்பு செய்வதும் அன் நாடுகளின் தலைவர்களை சிறை பிடிப்பதும் இதன் பின் இந்த நாடுகளின் அனைத்து கட்மைப்புக்களையும் அழித்து அந்த நாடுகளை மீண்டும் வளர விடாமல் தொடர்ந்து அங்கு ஸ்திரம் Instability இல்லாத தன்மையை உண்டாக்கி விட்டு  ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு இன்னும் ஒரு நாட்டடில் அத்து மீறி நுழைந்து தனக்குத் தேவையான வழங்ககளை சூறை ஆடுவதே அமெரிக்காவின் தந்திரமாக இருக்கின்றது. பலம் மிக்கவர்களினால் செய்யப்படும் ஆட்சி மாற்றங்கள் இறுதியில் பெரும்பாலும் பெரும் ஆபத்தான நீண்டகால வன்முறை மோதல்களாக அந்த நாடுகளில் உருவாக்கி விடுவதை நடை முறையில் பார்த்திருக்கிறோம்.


ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் இங்கு ஆக்கிரமிப்பே நடைபெற்றன அரசியல் பொருளாதார மற்றும் புவிசார் சர்வதேச உறவுகளை தீர்மானிக்கும் உரிமை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் மட்டுமே உண்டு. இதை விடுத்து பலம் மிக்க நாடு பலம் இல்லாத நாடுகளை அதிகாரத்தின் மூலம் பணிய வைப்பதும் அதை தமது நலனுக்ககாக பாவிப்பதும் ஒரு புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும் Neo colonialism and Neo imperialism புதிய காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய கொள்கைக்கு ஒப்பானது. ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக செய்யப்படும் ஒரு ஆதிக்க சுரண்டலாகும். அமெரிக்காவால் இன்னும் ஒரு இறைமையுள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய இராணுவ தலையீடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பு அதன் விதி முறைகளையும் மீறுகின்றது இதனால் ஒவ்வொரு பலம் குன்றிய நாடுகள் இன்னும் பாதுகாப்பற்றதாகிறது. சக்திவாய்ந்தவர்கள் எதையும் செய்யலாம் என்ற ஒரு செய்தியை இது சொல்லி நிற்கின்றது. இனி வரக்கூடிய எந்தப் போரையும் தடுக்க நமக்கு உள்ள ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகளையும் இது வலுவிழக்கச் செய்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது.


அமெரிக்காவின் இன்றைய செயல்பாடுகள் ஏகாதிபதியத்தின் ஒரு தொடர்ச்சியே இதை சரியாக விளங்க வேண்டுமானால் காலனித்துவ ஏகாதிபத்தியம் சம்மந்தமாக அரசியல் பொருளாதார கேட்ப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் மூலம் அறிய முடியும். புதிய காலனியா திக்கம் புதிய ஏகாதிபத்யம் உலக அமைப்பு கோடப்பாடுகள் போன்ற கருத்துக்களை பல அரசியல் பொருளாதார நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் முக்கியமான சமூகவியலாளர் இமானுவேல் வால்ரஸ்டீன் (Immanuel Wallerstein) ஆவார். உலகப் பொருளாதார அமைப்பில் பலம் மிக்க நாடுகள் எப்படி சுரண்டுகின்றனர் இந்த உலகு எப்படி சமத்துவமற்று இருக்கிறது என்பதை யதார்த்தமாக உலக அமைப்பு கேட்பாடு (World system theory) மூலம் விளக்குகிறார் காலனித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டாலும் அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்க பலம் வாய்ந்த சக்கித்தியினால் அவர்கள் நலன் சார்ந்து தொடர்ந்து சுறண்டப் படுவதை பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா,  ஈராக், பனாமா, வெனிசுலா, நையீரியா இப்படி பல நாடுகளை பலம் வாய்ந்த அமெரிக்க அதன் நலன் சார்ந்து இந்த பலம் இல்லாத நாடுகளின் அதன் மூலவளங்களை ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் அங்கு ஆதிக்கம் செலுத்தி பின் அதன் வளங்களை பெரும் தனியார் கம்பெனிகள் ஊடாக சுரண்டலை மேற்கொள்ளுகின்றனர். 


இன்னும் ஒரு பிரபலமான இலக்கிய பேராசிரியரான எட்வர்ட் சயீத் (Edward Said) பாலைதீனத்தை பிறப்பிடமாக்க கொண்ட அமெரிக்காவின் பிரபல கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராக இருந்த அவர், காலனித்துவம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர் Orientalism என்ற இவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது பல பல்கலைக்கழகங்களில் பாடத் திட்ட நூலாக கற்பிக்கப்படுகின்றது. இந்த நூல் ஏகாதிபத்தியம் என்பது (Imperialism) வெறும் இராணுவ அல்லது பொருளாதார ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, கலாச்சாரம், மொழி, கல்வி, அடையாளம் என்பன ஊடகம் வழியாக மேற்கு உலக எல்லா மேற்கத்திய அறிஞர்களும் வரலாறுகளை மாற்றி தமக்கு சாதகமாக்கி கிழக்கு சமூகங்களின் உள் வேறுபாடுகளை குறைத்துக் காட்டி புவிசார் அரசியல் பொருளாதார நலனுக்காக தமக்கு வேண்டியபடி கோட்ப்பாடுகளை விபரித்தனர் சித்தனித்தனர் எழுதினர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது.


சர்வதேச சட்டங்களை மதிக்காத எல்லா அத்துமீறல்கழும் சட்டங்களை மீறி நடக்கும் செயல்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் ஆகும் எனவே இன்று அமெரிக்க தான் குற்றம் இழைத்தவர்களாக இருக்கிறார்கள். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆகிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வன்முறை மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை அகற்றுவது சிறை பிடிப்பது என்பது உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். மனித குற்றங்கள் இழைத்த எந்தத் தலைவர்களையும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களின் அடிப்படையிலேயே கைது செய்ய முடியும். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆக்கிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் பல நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்க எதிர் காலத்தில் வழி சமைக்கலாம். இது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை.


பா.உதயன்





Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.