Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 Jan, 2026 | 01:30 PM

image

டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட  பாதாள உலக கும்பல் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த பாதாள உலக கும்பல் இன்று வெள்ளிக்கிழமை (16)  அதிகாலை 05.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். 

இவ்வாறு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலில் “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான 30 வயதுடைய “சூட்டி மல்லி“ என்பவரும் , “புன்சா” என்பவரின் 52 வயதுடைய சகாவும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய  கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய “சூத்தித“ என்ற பெண்ணும் அடங்குகின்றனர்.

அதன்படி, கந்தான பிரதேசத்தில் 2025.07.03 இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ என்பவர் மேலதிக விசாரணைகளுக்காக களனி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கொலை மற்றும் பல்வேறு குற்றச் செலய்களுடன் தொடர்புடைய உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் எல்பிட்டிய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

2014 ஆம் ஆண்டில் பாரிய மோசடியில் ஈடுபட்ட கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த  “சூத்தித“ என்ற பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨

🚨 தடுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்! 🚨

written by admin January 16, 2026

BREAKINGNEWS.png?fit=900%2C499&ssl=1

 

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக  மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1.jpeg?resize=800%2C533&ssl=1

கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார்.

இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள்.

  • கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்.

2.jpeg?resize=800%2C533&ssl=1

  • எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்.

3.jpeg?resize=800%2C533&ssl=1

இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA

https://globaltamilnews.net/2026/226655/ 


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.