Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 03:34 PM

image

தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

வெளிநாட்டுப் பெண்களை ஒரு பொருளாகக் கருதி "இறக்குமதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மனித கண்ணியத்திற்கு எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அந்த நாட்டு மக்களையும், கொரியாவில் வசிக்கும் பல்லின சமூகத்தினரையும் அவமதிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட குவாங்ஜு மேயர் காங் கி-ஜங், "வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் மனிதர்களை இறக்குமதி செய்வது குறித்த கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை" என மேடையிலேயே அதிருப்தி வெளியிட்டார்.

தென்கொரியாவின் பல கிராமப்புற பகுதிகள் சனத்தொகை குறைவால் அழிவடையும் நிலையில் (Extinction risk) உள்ளன. இந்த வேதனையின் வெளிப்பாடாகவே ஆளுநர் அவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஒரு பொது மேடையில் பெண்களை வெறும் உழைப்பாளர்களாகவும், திருமணக் கூட்டாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மற்றும் இனவெறிப் பார்வை இதில் வெளிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/237899

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.