Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

articles2FJ0dad6HCQMmnhM1QWxvv.jpg?resiz

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை.

அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது.

சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார்.

https://athavannews.com/2026/1463495

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்.

தம் மக்களை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினர். தமிழருக்கெதிரான அடக்குமுறைகளை மறைப்பதற்காக அவர்களை பயங்கரவாதிகளாக்கினீர்கள். இங்கு அடக்குமுறை நடந்தது என்பதை பல அரசியல்வாதிகளும் நீங்களுமே ஏற்றுக்கொண்டே, புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென்று சர்வதேசத்துக்கு வாக்குக்கொடுத்துள்ளீர்கள். அதிகாரங்களை பகிர்ந்து வாழ மறுத்தினாலேயே நாடு இந்த அழிவை சந்தித்தது என்றும், நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது என்றும்.அரசியல்வாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றோர் அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் வழங்கியதே என்று ஒரு சிங்கள அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனும் விநாயக மூர்த்தி முரளிதரனும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தே பிழைத்தனர். கோவணத்துடன் இருந்த அவர்களை வெள்ளை ஆடை அணிவித்து அழகு படுத்தியது திரிபோலி எனும் இராணுவப்பிரிவிலுள்ள ஒரு தனிக்குழு திரிபோலி என்பது 2009 கு பின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என ஒரு இராணுவப்புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரும் இவரை சார்ந்தவர்களும் நமது சில நேர்மைவாதிகள் எனும் பெயரில் புலிகளை சாடுவோரும் இன்னும் புலிகளை சாடுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர் நாதியற்றவர்கள் ஆனார்கள். ஒரு நல்ல தலைவனே இல்லை அவர்களை தொடர்ந்து வழிநடத்த, அவர்களை வைத்து குறை கூறி தாம் பிழைப்பு நடத்துகின்றனர்.

7 hours ago, தமிழ் சிறி said:

சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை.

சுதந்திரத்தை வென்றவர்கள் இராணுவத்தினரா? பாவம் நாமலும் சில இனவாதிகளும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இனவாதம் மதவாதம் இதைத்தவிர அரசியல் செய்வதற்கு தெரியவுமில்லை, விடயங்களுமில்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் அந்த அறிவு இருந்தாற்தானே வெளிப்படுத்துவதற்கு. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைத்தானே கொடுக்க முடியும். இராணுவத்திற்கு சுதந்திர தினத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றால்; அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு நாமல் தயாரா? இந்த இராணுவத்தளபதிகளை சில நாடுகள் தடை செய்திருக்கின்றனவே அதை நீக்க இவர் என்னஉறுதியான நடவடிக்கை எடுத்தார் சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று அடம்பிடிப்பவர். இவர் இராணுவத்தினருக்காகவா அழுகிறார்? தங்களை ஓரங்கட்டி விட்டார்களேயென புலம்புகிறார், நல்லிணக்கம் மலர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்.

8 hours ago, தமிழ் சிறி said:

இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர்.

மதத்தலைவர்கள் மதத்தைப்பற்றி அதன் கொள்கைகளைப்பற்றி போதிக்காமல் அரசியல், வன்முறைகளைப்பற்றி கதைப்பது கேலிக்கூத்தே, அவர்களை யாரும் அவமதிக்கவே செய்வர். மதத்தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மதக்கோட்பாட்டின்படி நடக்க வேண்டும், இல்லையேல் காவியை கழற்றிவிட்டு போராடவேண்டும். விகாரைக்குள் பதுக்கியிருந்துகொண்டு வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு வன்முறை இரத்தம் பற்றி பேசக்கூடாது, யாரையும் அச்சுறுத்தக்கூடாது, நாட்டை அழிக்கக்கூடாது, அது மதத்துக்கே இழுக்கு.

8 hours ago, தமிழ் சிறி said:

சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர்.

அட இது வேற பெருமை பேச வேண்டுமா?

8 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆமாம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு சுதந்திரமில்லை இராணுவம் இருக்கிறது. அவர்கள் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்தமுடியவில்லை ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு விகாரைகள் எழுந்து நிற்கின்றன, அவர்கள் தொழில் வளம் அவர்களிடமில்லை, உறவுகள் இல்லை அதற்கு காரணம் இந்த சுதந்திரம். அந்நியர் நாட்டில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்குமா? சுதந்திர நாள் நம் மக்களை அடிமையாக்கிய நாள், அதை நாங்கள் அவ்வாறுதான் அனுஷ்டிப்போம். அதை எதிர்க்கும் நீங்கள், நாங்கள் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் அதனால் நமக்கு எங்கே சுதந்திரமுண்டு என்பதை நிரூபியுங்கள். முதலில் சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி கருத்து சொல்வதற்குமுன். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சட்டத்தரணி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரும் பகிடி. இவர்களால் முடிந்ததா அவர்களின் மனங்களை வெல்ல? அப்படியிருக்கும்போது இந்த விமர்சனம் அபத்தமானது. சரி சிங்களவரே உங்களை இனி தமது அரசியல் தலைவராக தெரிந்தெடுக்க மாட்டார்கள். அது நமது மக்களின் சாபம். முடிந்தால் முயன்று பாருங்கள்! உங்களை தவறை மற்றவர் மேல் சுமத்தி உங்களை புனிதர்களாக காட்ட முயல்கிறீர்கள், உங்கள் தவறு மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்வரை. அதற்காகவே சில பொய்களை பரப்பி அரசாங்கத்தின்மீது உளவியல் போராட்டம் நடத்துகிறீர்கள், உங்களை பிடித்து உள்ளுக்குள் போடும்வரை துடிப்பீர்கள். ஒன்று, அனுரா அழிவு இல்லை நீங்கள் அழிவு. அதோடு முடியும் இந்தப்போர். மல்லி! நீங்கள் ஜனாதிபதியாகவே வரமுடியாது, வீணாக கனவு கண்டு அழிந்து போகாதீர்கள். தமிழரை அழித்து ஒழித்தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால், சிங்கள இனமே அழியும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.