Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இத்திரியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுமுன்னர் TEA என்ற ஆங்கில சுருக்கத்தால் அறியப்படும் தமிழ் ஈழ இராணுவம் எனப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத அமைப்பினரால் சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள் மீது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அதனால் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள் தொடர்பிலும் தகவல் சேகரிக்கப்பட்டு பதிவிடப்படும்.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்படைப் படகு மீது கடற்கண்ணி தாக்குதல் தமிழ் ஈழ இராணுவம் நடத்தியது

  • ஆதாரம்: உதயன் - 09/12/1986

யாழ்ப்பாணம், டிச. 9

காரைநகர் கடற்படையினர் மீது நேற்று தமிழ் ஈழ இராணுவம் கடற்கண்ணி வெடித்தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் கடற்படையினர் ரோந்து சென்ற கடற்படைப் படகு முற்றாக சேதம் அடைந்ததாகவும் சில கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. காரைநகர் கடற்படை முகாமில் இருந்து மூன்று அல்லது நான்கு கூலிப்படையினரோடு ஊறுகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே தமிழீழ இராணுவம் கடற்கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து காரைநகர் முகாமிலிருந்தும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன. இரண்டு ஹெலிகாப்டர்களும் இப்பகுதிக்கு விரைந்து வந்து கடும் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல்களை எதிர்த்து தமிழ் ஈழ இராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவத்தில் பொதுமக்களது வீடுகள் சில சேதமடைந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.

(இ-10)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்படை படகு மீது கண்ணிவெடி!

தமிழ் ஈழ ராணுவம் தாக்குதல்

  • ஆதாரம்: உதயன் - 24/12/1986

யாழ்ப்பாணம், டிச. 24

காரைநகர் முகாமைச் சேர்ந்த ஆறு கடற்படைச் சிப்பாய்களுடன் வந்த கடற்படைப் படகு ஒன்று தமிழ் ஈழ இராணுவத்தின் பாரிய கண்ணிவெடிக்கு இலக்காகியது.

ஊர்காவற்றுறை மேற்கு பருத்தி அடைப்பை நோக்கி வந்த கடற்படைப் படகே இத்தாக்குதலுக்கு இலக்கானது.

இதனால் படகு முற்றாகச் சேதம் அடைந்ததாகவும் கடற்படையினர் மரணம் அடைந்தனர் என்றும் தமிழ் ஈழ இராணுவம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரச படையினர் ஷெல், துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தினர்.

தமது பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் தான் கடற்படையினர் முகாமிற்குத் திரும்பினர் என்று தமிழ் ஈழ இராணுவத்தின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

(உ-எ)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முற்றும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு கருத்து:

"காத்தடிக்குது, புயலடிக்குது

காரைநகரில ஈ.பி. அடிக்குது"🤣

என்ற சிறுவர் பாடலிற்கு பொருத்தமாக 19/07/86 அன்று யாழ் கடலில் (விதப்பாக எவ்விடத்தில் என்று கூறவில்லை🥱, பெரும்பாலும் காரைநகரென ஊகிக்கின்றேன்) வைத்து சிங்களவரின் இரு சுற்றுக்காவல் படகுகளை அழித்தாகவும் அத்தாக்குதலில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் EPRLFன் சென்னையிலுள்ள அலுவலகத்திலிருந்து பி.பிசிக்கு செய்தி அறிக்கை அனுப்பப்பட்டது, 21/07/1986 அன்று. செய்தி வெளியானதும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் வழமையாக தம்தரப்பிற்கு இழப்புகள் ஏற்படும் போது மக்கள் மீது நடத்தும் தாக்குதல் போன்றவையெதுவும் அப்பரப்பில் 19/07 அன்று சிங்களப்படையால் நடைபெறவில்லை. மேலும் ஈ.பியும் விளக்கமாக தாக்குதல் தொடர்பான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் (18/07 அன்று) இதே போன்றே காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் வந்த சிங்களப் படையினர் மீது தாம் மேற்கொண்ட கணையெக்கி (Mortar) எறிகணைவீச்சில் "ஒரு படகு சேதமானதாகவும், பல கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம்" என்றும் ஊகமான கருத்தில் உதயன் நாளேட்டிற்கு செய்தி அறிக்கையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பம்பலான தகவல் யாதெனில், இவ்வாறான அடுத்தடுத்த அறிக்கைகள் யாவும் காரைநகர் கடற்படைத்தளத்தின் இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெறுவேயம் (Cannon) பொருத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் அதிநவீன விசைப்படகொன்று அப்போதைய கடற்புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதலில் சிதறியது. இது நடந்தது சூலை 15ம் திகதி விடிசாமம் 3 மணி. தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினர் சுற்றுப்புறமெங்கும் கணையெக்கி கொண்டு எறிகணைவீச்சு மேற்கொண்டனர். புலிகளின் இத்தாக்குதலின் பின்னர் தான் ஈ.பி. அடுத்தடுத்து (சூலை 18 மற்றும் 21இல்) இதுபோன்ற காத்தடித்த செய்திகளை காற்றில் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இது போன்ற EPRLF இன் செய்தி அறிக்கைகள் காத்தடிப்பது போன்று உள்ளதால் - நம்ப கடினமாக இருப்பதால் - நான் இணைக்கவில்லை! இருப்பினும் எதிர்கால தலைமுறைகள் பிழையான வரலாற்றை அறியக்கூடாதென்பதால் இதனையும் பதிந்து உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளக்கிச் செல்கிறேன்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது நினைவில் இருப்பதன்படி.

அப்போது எல்லா இயக்கக்ங்களும் ஏதோ ஒரு வகையில் இலங்கை படைகளை அடித்தன.

டெலோ வன்னியில் புகையிரதத்தில் வந்த ஆமி மீது, டீ - இந்த படகுகள் மீது, புலிகள் - கொக்கிளாய் முகாம் உட்பட பல, ஈபி கூட காரைநகர் தளத்தை ஒரு பெளர்ணமி நிலவில், ஊருக்கே சொல்லி (நேவிக்கும் தகவல் போயிருக்கும்) அடித்து அது தோல்வியானது( இதில்தான் முதல் தமிழ் பெண் போராளி பலியானார்).

ஆனால் புளொட் மட்டும் எந்த தாக்குதலும் செய்யவில்லை (கோட்டையை சுற்றிய காவலரணில் ஒரு பகுதியை பாதுகாத்தது, ஆமி வெளி வந்தால் சங்கு ஊதுவது என சிலதை புளொட் செய்தது). மாறாக தவறாமல் மக்களிடம் சோத்து பார்சல் வாங்கியது புளொட்.

அதனால்தான்…

காத்தடிக்குது…

புயலடிக்குது….

காரைநகரில ஈபி அடிக்குது…

டி அடிக்குது,….

டைகர் அடிக்குது…

டெலோ அடிக்குது….

சோத்து பார்சலை புளொட் அடிக்குது😂

2 hours ago, நன்னிச் சோழன் said:

2 hours ago, goshan_che said:

காத்தடிக்குது, புயலடிக்குது,

காரைநகரில ஈ .பி . யடிக்குது!

போற வழியில புலியடிக்குது!

வாற வழியில டெலோ அடிக்குது!

கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது!

சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது!

த.ஈ.இ. எனக்கு பிடித்த விடையம் முதன்முதல் சக்கைலொறி தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டதும் இவர்கள் தான். மொத்தம் இரண்டு தடவை மேற்கொண்டனராம். அதில் முதலாவது கிளிநொச்சியில் அது வெடித்துச் சிதறியது. இரண்டாவது கிளி. எரிபொருள் நிரப்பு நிலையம் மீது. எனினும் அது வெடிக்கவில்லையாம்.

இதன் பிறகு தான் புலிகள் முதன் முதல் 1986ம் ஆண்டு மேற்கொண்டனர். திலீப் என்ற போராளி த.ஈ.இ. போன்றே சக்கைலொறியை ஓட்டிச் சென்று விட்டு இறங்கி ஓடிவர அது போய் மோதி வெடித்தது.

:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனது நினைவில் இருப்பதன்படி.

இது ஒரு சிறிய இயக்கம்.ஆனால் திட்டத்தை செவ்வனே செய்யக் கூடியவர்கள் இருந்தார்கள்.

புலிகளுடன் பிரச்சினை இல்லை என்றபடியால் அந்த இயக்கத்தில் இருந்த பலரை புலிகள் உள்வாங்கினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

EPRLF மெய்யில் செய்த கடற்கண்ணிவெடித் தாக்குதல்: 15/03/1986

கடற்கோட்டைக்கும் காரைநகர் கடற்படை முகாமிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சிங்களக் கடற்படையின் வள்ளம் ஒன்று சிக்கி சிதறியதோடு 6 படையினரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலின் பின்னர் சிங்களப் படைமுகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 5 வீடுகளும் பல தென்னை மற்றும் பனை மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஊர்காவற்றுறை பழைய காவல்துறை நிலையத்திற்கு பின்னாலிருந்த தேவாலயம் உட்பட மொத்தம் 3 தேவாலயங்களும் சேதமாகின.

இதே கடற்பரப்பில் தான் தமிழீழ வரலாற்றில் முதலாவது கடற்கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் பெப்ரவரி 7, 1986 அன்று மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: உதயன்- 16/03/1986

TELO செய்த கடற்கண்ணிவெடித் தாக்குதல்: 07/04/1986

காரைநகர் கடற்கோட்டைக்கு அருகில் 5/4/86 அன்று இரவு பரீட்சாத்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட கடற்கண்ணிவெடித்தாக்குதலில் 40 படையினர் பயணம் செய்துகொண்டிருந்த பீரங்கிப் படகு ஒன்று சேதமானதாக ரெலோ அறிக்கையிட்டது. இதன் பின்னர் கடற்படை முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைவீச்சில் பல கூரைகள் சேதமாகின.

ஆதாரம்: உதயன்- 07/04/1986

அம்புட்டும்தான். முடிந்தது

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

காத்தடிக்குது, புயலடிக்குது,

காரைநகரில ஈ .பி . யடிக்குது!

போற வழியில புலியடிக்குது!

வாற வழியில டெலோ அடிக்குது!

கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது!

சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது!

த.ஈ.இ. எனக்கு பிடித்த விடையம் முதன்முதல் சக்கைலொறி தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டதும் இவர்கள் தான். மொத்தம் இரண்டு தடவை மேற்கொண்டனராம். அதில் முதலாவது கிளிநொச்சியில் அது வெடித்துச் சிதறியது. இரண்டாவது கிளி. எரிபொருள் நிரப்பு நிலையம் மீது. எனினும் அது வெடிக்கவில்லையாம்.

இதன் பிறகு தான் புலிகள் முதன் முதல் 1986ம் ஆண்டு மேற்கொண்டனர். திலீப் என்ற போராளி த.ஈ.இ. போன்றே சக்கைலொறியை ஓட்டிச் சென்று விட்டு இறங்கி ஓடிவர அது போய் மோதி வெடித்தது.

:

ஒட்டுமொத்த ஆயுத போராட்ட வரலாற்றில் அதிக தவறுகள், தமிழர்கள் மீது உரிமை மீறல்கள் செய்யாத இயக்கமாக டீ இருந்தது என நினைக்க்கிறேன்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு சிறிய இயக்கம்.ஆனால் திட்டத்தை செவ்வனே செய்யக் கூடியவர்கள் இருந்தார்கள்.

புலிகளுடன் பிரச்சினை இல்லை என்றபடியால் அந்த இயக்கத்தில் இருந்த பலரை புலிகள் உள்வாங்கினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.