Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

Feb 17, 2026 - 05:45 PM

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் - சாமர சம்பத்

17 Feb, 2026 | 07:55 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக நான் திருத்மொன்றை முன்வைப்பேன். 1994ஆம் ஆண்டில் ஜே.வி.பி கட்சி ஊடாக பாராளுமன்றம் வந்த கலப்பதி உள்ளிட்ட இதுவரையில் 72 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளனர். ஆளும் தரப்பில் முன்வரிசையில் இருப்பவர்களில் பலர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டவர்களே. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொண்ட ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பணத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதேவேளை எங்களை திருடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியில் தலங்கம வட்டாரத்தில் போட்டியிட்ட ஒருவரின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி நிறுவனமொன்றை நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பெற்றுள்ளனர். இவர்களின் திருமணத்தில் ஜனாதிபதி அனுரகுமாரவே கையெழுத்திட்டுள்ளார். இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளை அடகு வைத்து அவர்களிடம் பணம் கொடுத்தவர்களும் உள்ளன. இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பில் பொலிஸ் அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். நீதியமைச்சரின் உறவினரான வாசுதேவ நாணயக்கார இன்றும் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுகிறார். ஆகவே மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/238907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமையவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர்

17 Feb, 2026 | 07:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வற்காகவோ அல்லது பிரபல்யமடைவதற்காகவோ பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை கொண்டு வரவில்லை. இந்த சட்டம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் இந்த சட்டம் ஐந்து திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் விரும்பிய ஓய்வூதியத்தை தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்தால் அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனை மாற்றியமைக்க கூடாதா, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் தான் சிறந்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும்.

ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு விடயமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/238908

ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது - தயாசிறி ஜயசேகர

17 Feb, 2026 | 07:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், சிறப்புரிமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 2024.12.02 ஆம் திகதியன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சித்ரசிறி அறிக்கையை அரசாங்கம் முழுமையாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில் முழு உள்ளடக்கத்தை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க போவதில்லை என்று ஜனாதிபதி உட்பட 159 உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று அனைவரும் சுகபோகமாக வாழ்கிறார்கள். அனைவருக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 159 பேர் தற்போது பொது போக்குவரத்து சேவையையா, பயன்படுத்துகிறார்கள். அனைவரும் ஏதாவதொரு வழியில் ஊழல் செய்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 55 ஆயிரம் ரூபா அளவில் தான் சம்பளம் கிடைக்கப்பெறுகிறது. அவ்வாறாயின் மாதாந்தம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபா ஓய்வூதிய கொடுப்பனவே கிடைக்கப்பெறும். பெரும்பாலானவர்கள் எவ்வித தொழிலும் இல்லாமல் இந்த கொடுப்பனவை நம்பியே வாழ்கிறார்கள்.

பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது.

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களின் மாத சம்பளம், அக்கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றார்.

https://www.virakesari.lk/article/238909

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்த்து வாக்களித்த அந்த இருவரும் யார், எந்தக் கட்சி என அறிய ஆவலாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.