Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

உச்சி மாநாட்டில் இடம்பெற்ற ஒரு ரோபோ

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெறும்.

41 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன.

குழப்பங்களுக்கு மத்தியில் சில பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்கள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர்.

ரோபோ நாய் குறித்த சர்ச்சை

தவிர, இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் ஏஐ உச்சிமாநாட்டில் ஒரு ரோபோ நாயைத் தன்னுடைய தயாரிப்பு என்று கூறிக்கொண்டது, ஆனால் அது சீனாவைச் சேர்ந்தது.

இது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ரோபோ நாயைத் தாங்கள் உருவாக்கவில்லை என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது. முன்பு வெளியான செய்தியை "தகவல் தொடர்பு பிழை" என்று கூறியது. மேலும் மாநாட்டில் இருந்த தனது ஸ்டாலில் இருந்து வெளியேறியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நியோசேபியன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அரங்கைக் காலி செய்யச் சொன்னதாகவும், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் எழுதியுள்ளார்.

பின்னர் நிறுவனத்தின் சில அணியக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், "யோசித்துப் பாருங்கள், நாங்கள் விமானம், தங்குமிடம் மற்றும் பூத் வரை அனைத்திற்கும் செலவழித்துள்ளோம். பலத்த பாதுகாப்பு இருந்த இடத்திலிருந்தே எங்களது அணியக்கூடிய சாதனங்கள் மாயமாகிவிட்டன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குழுவினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்றால், இது எப்படி நடந்தது? இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

ரீஸ்கில் நிறுவனர் புனீத் ஜெயின் ஆரம்பக்கால குழப்பங்களை விமர்சித்து, பல பிரதிநிதிகள் தண்ணீர் மற்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி வெளியே நின்று கொண்டிருந்ததாகக் கூறினார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை நிலைமை மேம்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார்.

தொழில்முனைவோர் பிரியான்ஷு ரத்னாகர் என்பவரும் நீண்ட வரிசைகள், அரங்குகளை அணுகுவதில் சிரமங்கள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் பதிவு தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டு, செயல்பாட்டை விட 'காட்சிப்படுத்தல்' (Show-off) அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதம்

இது ஒரு சர்வதேச நிகழ்வு மற்றும் இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையும் இந்த உச்சிமாநாட்டின் மீது உள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களில் இந்த உச்சிமாநாடு பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிறது.

அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க், "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடு இந்த வாரம் குழப்பத்தில் சிக்கியது. திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கித் தவித்தனர். ஏஐ துறையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அந்த நிகழ்விற்கு இது ஒரு பின்னடைவாகும்," என எழுதியது.

"இந்தியா ஏஐ உச்சிமாநாட்டின் முதல் நாளில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நிலைமை சீராவது தெரிந்தது. செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான கண்காட்சி வளாகத்தின் ஹால்களுக்கு இடையே தடையின்றி நடமாடுவதைக் காண முடிந்தது."

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "கென்யாவிலிருந்து வந்த மோசஸ் திகாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அளவு வியக்கத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு அவரைக் கவர்ந்தது. தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் பல மணிநேரம் வளாகத்திற்குள் அடைக்கப்பட்டு அல்லது வெளியே நிறுத்தப்பட்டதால் நிலவிய குழப்பங்கள் குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை," என்று எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி அங்கு வரும் வரை அனைத்தும் சீராக நடந்ததாக திகா கூறினார்.

மோதியுடன் வந்த பாதுகாப்புப் படை முழு வளாகத்தையும் சீல் வைத்தது. நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோதி செல்லும் வரை தாங்கள் பல மணிநேரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி உள்ளேயே இருந்ததாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,Getty Images

'திறன் குறித்து சந்தேகம்'

ராய்ட்டர்ஸ் தனது செய்தியில், இந்தியா எந்த நோக்கத்திற்காக ஏஐ உச்சிமாநாட்டை நடத்தியதோ, அதற்கு மாறாகத் திங்கள்கிழமை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எழுதியுள்ளது.

பங்கேற்பாளர்கள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் குறித்துப் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.

"பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு, சர்வதேச அளவிலான இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் என்பது வெறும் பிம்பம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மாறாக ஏற்பாட்டு ரீதியான குறைபாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் குறித்த செய்தியையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியது."

ஏஐ வாய்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'போல்னா' வின் இணை நிறுவனர் மைத்ரேய வாக் எக்ஸ் தளத்தில், "வாயில்கள் மூடப்பட்டுள்ளன, எனவே ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த பூத் வரை கூட என்னால் செல்ல முடியவில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்து போல்னா குழுவைச் சந்திக்க விரும்பினால், எனக்கு டிஎம் செய்யுங்கள்" என்று எழுதியுள்ளார்.

அவர் கிண்டலாக, "ஒருவேளை நாம் கன்னாட் பிளேஸில் உள்ள ஏதேனும் ஒரு கஃபேயில் ஒரு சிறிய மினி-பூத் அமைத்துக் கொள்ளலாம்" என்றார்.

உச்சி மாநாட்டில் ஒரு ரோபோவைக் காண குவிந்த மக்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் குழப்பமான சூழல் நிலவியது.

இந்தியா எதைச் சாதிக்க முடியும்?

பைனான்சியல் டைம்ஸ் இந்தியாவின் ஏஐ குறிக்கோள்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது செய்தியில், "இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு கடந்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது, இது சீனாவின் 2.5 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்று எழுதியுள்ளது.

"இதில் பெரும்பகுதி செலவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்குச் செலவிடப்படுகிறது, இதனால் மக்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குக் குறைந்த அளவிலான வளங்களே மிஞ்சுகின்றன. 2022-இல் மின்னணு அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிடைத்தது."

"இந்தியாவின் தனியார் துறையும் ஏஐ விவகாரத்தில் மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு வரை கூட தொழில்துறையின் சில மூத்த தலைவர்கள் இந்தியா தனது சொந்த பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினர் மற்றும் ஏஐ வளர்ச்சியை சிப் தயாரிப்பாளர்களால் பெரிதாக ஊதப்பட்ட பிரசாரம் என்று குறிப்பிட்டனர்.'' என எழுதியுள்ளது

"இந்தியா உலகத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து வளர்ச்சிக்காக ஏஐ-யை ஆதரிக்க முடியும். ஆனால் நிகழ்வை நடத்துவதால் மட்டும் ஏஐ பந்தயத்தில் சமநிலையைப் பெற முடியாது,"

"ஏஐ உச்சிமாநாட்டை ஒரு ராஜீய காட்சியிலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்தியா உறுதியான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சூழலைச் சார்ந்து இருந்துகொண்டு இந்தியா உலகளாவிய தெற்கு பகுதியில் செயற்கை நுண்ணறிவில் முன்ன்னிலையில் இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது." என பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

உச்சி மாநாட்டு வளாகம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் துணை அதிபர்கள் டெல்லி ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டிற்கு வந்துள்ளனர்

'சவால் விடுவதற்கான ஒரு படி'

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ், "அமெரிக்கா மற்றும் சீனாவுடனான ஏஐ இடைவெளியைக் குறைப்பதற்கான பந்தயத்தில், இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்த ஒரு பிரமாண்டமான புதிய 'டேட்டா சிட்டி' திட்டத்தைத் தீட்டி வருகிறது." என கூறியுள்ளது.

பெய்ஜிங் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தின் மனித-இயந்திர தொடர்பு மற்றும் அறிவாற்றல் பொறியியல் ஆய்வகத்தின் இயக்குநர் லியூ வெய் செவ்வாய்க்கிழமை குளோபல் டைம்ஸிடம், ''இந்த உச்சிமாநாடு உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியாவின் தீவிரப் பங்களிப்பு முயற்சிகளையும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கான ஒரு படியாகும்'' என்றார்.

"ஏஐ துறையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது,

"இந்தியா ஈர்க்கக்கூடிய ஒரு செயல் திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அடிப்படை ஆராய்ச்சி, கணினி ஆதாரங்கள், திறமைகளின் ஆழம் மற்றும் சூழல் அமைப்பின் முதிர்ச்சி தொடர்பான சவால்கள் காரணமாகத் தனது முழுமையான ஏஐ திறனை அடையத் தொடர்ச்சியான முயற்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படும்," என்று லியூ கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xy8jqpjyzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் டெல்லி உச்சிமாநாடு!

Feb 19, 2026 - 09:07 AM

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் டெல்லி உச்சிமாநாடு!

செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகைப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு பலமான சக்தியாக மாறி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மனித குலத்தின் நன்மைக்காக AI-ஐப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact Summit 2026' புதுடெல்லியில் நடைபெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மாநாடு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

"People, Planet, Progress" – கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்

“People, Planet, Progress” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, AI மூலம் பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. விசேடமாக வளரும் நாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தின் அணுகலை விரிவுபடுத்துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெறுகின்றன.

இம்மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜென்சன் ஹுவாங் போன்ற தலைவர்கள் பிரதான உரைகளை நிகழ்த்தினர். மேலும் அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள் எனப் பெருமளவானோரும் இதில் இணைந்துள்ளனர்.

மாநாட்டுக்கு இணையாக AI Expo, Hackathon போட்டிகள், ஆராய்ச்சி மாநாடு மற்றும் கொள்கை உரையாடல் தொடர்களும் நடைபெற்று வருவதுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'AI Impact Summit 2026' இல் கலந்துகொள்வதற்காக நேற்று (18) புதுடெல்லியைச் சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று (19) மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது பல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இணைந்துள்ளனர்.

உலகளாவிய கொள்கைகள் மற்றும் பொறுப்புகள்

AI இன் தாக்கம் எல்லையற்றது என்பதால், அதனைப் பொறுப்புடனும் நியாயமாகவும் பயன்படுத்துவது குறித்த சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், G20 AI கொள்கைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) போன்ற செயற்திட்டங்கள், AI இற்கான பொறுப்பான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.

இந்த அனைத்து முயற்சிகளும் AI என்பது ஒரு நாட்டுக்கு மாத்திரம் சொந்தமான தொழில்நுட்பம் அல்ல, மாறாக முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

AI – ஒரு வாய்ப்பா? ஆபத்தா?

AI மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிதிச் சேவைகள் மற்றும் அரச நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு "விரைவான முன்னேற்றத்தை" அடைவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. பன்மொழி மற்றும் பல்லூடக திறன்கள் ஊடாக, இதற்கு முன்னர் அணுகலைப் பெறாத மக்கள் கூட்டங்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்த முடியும்.

எனினும், அந்த வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தரவுச் சார்புநிலை, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் சக்தி நுகர்வு போன்ற ஆபத்துகளும் உள்ளன. எனவே AI தொடர்பான பதில் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் அளவிடக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நோக்கி நகர்வது அத்தியாவசியமானதாகும்.

'AI Impact Summit 2026' அந்த உரையாடலை உலகளாவிய மட்டத்திற்குக் கொண்டு சென்று, செயற்கை நுண்ணறிவு ஊடாக எதிர்கால உலகைக் கட்டியெழுப்பும் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தளமாக முன்னோக்கி வருகிறது.

https://adaderanatamil.lk/news/cmlswpp2r000m356n0ga6ovvg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

உச்சி மாநாட்டில் இடம்பெற்ற ஒரு ரோபோ

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெறும்.

41 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன.

குழப்பங்களுக்கு மத்தியில் சில பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்கள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர்.

ரோபோ நாய் குறித்த சர்ச்சை

தவிர, இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் ஏஐ உச்சிமாநாட்டில் ஒரு ரோபோ நாயைத் தன்னுடைய தயாரிப்பு என்று கூறிக்கொண்டது, ஆனால் அது சீனாவைச் சேர்ந்தது.

இது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ரோபோ நாயைத் தாங்கள் உருவாக்கவில்லை என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது. முன்பு வெளியான செய்தியை "தகவல் தொடர்பு பிழை" என்று கூறியது. மேலும் மாநாட்டில் இருந்த தனது ஸ்டாலில் இருந்து வெளியேறியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நியோசேபியன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அரங்கைக் காலி செய்யச் சொன்னதாகவும், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் எழுதியுள்ளார்.

பின்னர் நிறுவனத்தின் சில அணியக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், "யோசித்துப் பாருங்கள், நாங்கள் விமானம், தங்குமிடம் மற்றும் பூத் வரை அனைத்திற்கும் செலவழித்துள்ளோம். பலத்த பாதுகாப்பு இருந்த இடத்திலிருந்தே எங்களது அணியக்கூடிய சாதனங்கள் மாயமாகிவிட்டன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குழுவினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்றால், இது எப்படி நடந்தது? இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

ரீஸ்கில் நிறுவனர் புனீத் ஜெயின் ஆரம்பக்கால குழப்பங்களை விமர்சித்து, பல பிரதிநிதிகள் தண்ணீர் மற்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி வெளியே நின்று கொண்டிருந்ததாகக் கூறினார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை நிலைமை மேம்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார்.

தொழில்முனைவோர் பிரியான்ஷு ரத்னாகர் என்பவரும் நீண்ட வரிசைகள், அரங்குகளை அணுகுவதில் சிரமங்கள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் பதிவு தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டு, செயல்பாட்டை விட 'காட்சிப்படுத்தல்' (Show-off) அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதம்

இது ஒரு சர்வதேச நிகழ்வு மற்றும் இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையும் இந்த உச்சிமாநாட்டின் மீது உள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களில் இந்த உச்சிமாநாடு பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிறது.

அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க், "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடு இந்த வாரம் குழப்பத்தில் சிக்கியது. திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கித் தவித்தனர். ஏஐ துறையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அந்த நிகழ்விற்கு இது ஒரு பின்னடைவாகும்," என எழுதியது.

"இந்தியா ஏஐ உச்சிமாநாட்டின் முதல் நாளில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நிலைமை சீராவது தெரிந்தது. செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான கண்காட்சி வளாகத்தின் ஹால்களுக்கு இடையே தடையின்றி நடமாடுவதைக் காண முடிந்தது."

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "கென்யாவிலிருந்து வந்த மோசஸ் திகாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அளவு வியக்கத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு அவரைக் கவர்ந்தது. தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் பல மணிநேரம் வளாகத்திற்குள் அடைக்கப்பட்டு அல்லது வெளியே நிறுத்தப்பட்டதால் நிலவிய குழப்பங்கள் குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை," என்று எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி அங்கு வரும் வரை அனைத்தும் சீராக நடந்ததாக திகா கூறினார்.

மோதியுடன் வந்த பாதுகாப்புப் படை முழு வளாகத்தையும் சீல் வைத்தது. நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோதி செல்லும் வரை தாங்கள் பல மணிநேரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி உள்ளேயே இருந்ததாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,Getty Images

'திறன் குறித்து சந்தேகம்'

ராய்ட்டர்ஸ் தனது செய்தியில், இந்தியா எந்த நோக்கத்திற்காக ஏஐ உச்சிமாநாட்டை நடத்தியதோ, அதற்கு மாறாகத் திங்கள்கிழமை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எழுதியுள்ளது.

பங்கேற்பாளர்கள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் குறித்துப் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.

"பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு, சர்வதேச அளவிலான இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் என்பது வெறும் பிம்பம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மாறாக ஏற்பாட்டு ரீதியான குறைபாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் குறித்த செய்தியையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியது."

ஏஐ வாய்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'போல்னா' வின் இணை நிறுவனர் மைத்ரேய வாக் எக்ஸ் தளத்தில், "வாயில்கள் மூடப்பட்டுள்ளன, எனவே ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த பூத் வரை கூட என்னால் செல்ல முடியவில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்து போல்னா குழுவைச் சந்திக்க விரும்பினால், எனக்கு டிஎம் செய்யுங்கள்" என்று எழுதியுள்ளார்.

அவர் கிண்டலாக, "ஒருவேளை நாம் கன்னாட் பிளேஸில் உள்ள ஏதேனும் ஒரு கஃபேயில் ஒரு சிறிய மினி-பூத் அமைத்துக் கொள்ளலாம்" என்றார்.

உச்சி மாநாட்டில் ஒரு ரோபோவைக் காண குவிந்த மக்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் குழப்பமான சூழல் நிலவியது.

இந்தியா எதைச் சாதிக்க முடியும்?

பைனான்சியல் டைம்ஸ் இந்தியாவின் ஏஐ குறிக்கோள்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது செய்தியில், "இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு கடந்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது, இது சீனாவின் 2.5 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்று எழுதியுள்ளது.

"இதில் பெரும்பகுதி செலவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்குச் செலவிடப்படுகிறது, இதனால் மக்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குக் குறைந்த அளவிலான வளங்களே மிஞ்சுகின்றன. 2022-இல் மின்னணு அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிடைத்தது."

"இந்தியாவின் தனியார் துறையும் ஏஐ விவகாரத்தில் மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு வரை கூட தொழில்துறையின் சில மூத்த தலைவர்கள் இந்தியா தனது சொந்த பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினர் மற்றும் ஏஐ வளர்ச்சியை சிப் தயாரிப்பாளர்களால் பெரிதாக ஊதப்பட்ட பிரசாரம் என்று குறிப்பிட்டனர்.'' என எழுதியுள்ளது

"இந்தியா உலகத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து வளர்ச்சிக்காக ஏஐ-யை ஆதரிக்க முடியும். ஆனால் நிகழ்வை நடத்துவதால் மட்டும் ஏஐ பந்தயத்தில் சமநிலையைப் பெற முடியாது,"

"ஏஐ உச்சிமாநாட்டை ஒரு ராஜீய காட்சியிலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்தியா உறுதியான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சூழலைச் சார்ந்து இருந்துகொண்டு இந்தியா உலகளாவிய தெற்கு பகுதியில் செயற்கை நுண்ணறிவில் முன்ன்னிலையில் இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது." என பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

உச்சி மாநாட்டு வளாகம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் துணை அதிபர்கள் டெல்லி ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டிற்கு வந்துள்ளனர்

'சவால் விடுவதற்கான ஒரு படி'

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ், "அமெரிக்கா மற்றும் சீனாவுடனான ஏஐ இடைவெளியைக் குறைப்பதற்கான பந்தயத்தில், இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்த ஒரு பிரமாண்டமான புதிய 'டேட்டா சிட்டி' திட்டத்தைத் தீட்டி வருகிறது." என கூறியுள்ளது.

பெய்ஜிங் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தின் மனித-இயந்திர தொடர்பு மற்றும் அறிவாற்றல் பொறியியல் ஆய்வகத்தின் இயக்குநர் லியூ வெய் செவ்வாய்க்கிழமை குளோபல் டைம்ஸிடம், ''இந்த உச்சிமாநாடு உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியாவின் தீவிரப் பங்களிப்பு முயற்சிகளையும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கான ஒரு படியாகும்'' என்றார்.

"ஏஐ துறையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது,

"இந்தியா ஈர்க்கக்கூடிய ஒரு செயல் திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அடிப்படை ஆராய்ச்சி, கணினி ஆதாரங்கள், திறமைகளின் ஆழம் மற்றும் சூழல் அமைப்பின் முதிர்ச்சி தொடர்பான சவால்கள் காரணமாகத் தனது முழுமையான ஏஐ திறனை அடையத் தொடர்ச்சியான முயற்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படும்," என்று லியூ கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xy8jqpjyzo

இந்தியனுக்கு சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்தக் கூடிய.. பொறுப்பான குணம் அறவே இல்லை.

எல்லாவற்றிலும் ஊழல், களவு, ஏமாற்று வேலைகளை செய்வது… அவர்களின் இரத்தத்தில் ஊறிப் போனது. இந்தக் குணங்கள் நிச்சயமாக அரசியல்வாதிகளிடம் இருந்து தொற்றி இருக்க வேண்டும். அது, மாறி நல்ல குணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது அறவே இல்லை.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில்… வீரர்கள் தங்குவதற்கான வீடுகளில்… தண்ணீர் இணைப்புகள் சரியாக கொடுக்கப் படவில்லை, கட்டிலில் பழைய மெத்தைகளை போட்டு இருந்தார்கள் என்று பல முறைப்பாடுகள்.

போதாக் குறைக்கு அந்த வீடுகளில் பாம்புகளின் நடமாட்டமும் இருந்ததாம்.

இந்தியனுக்கு…. சினிமாவையும், கிரிக்கெட்டையும் தவிர உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது… அதற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல  இலங்கை தயார் - AI Impact மாநாட்டில் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

19 Feb, 2026 | 03:42 PM

image

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று வியாழக்கிழமை (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact 2026' மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுடன் இணைந்ததாக புதுடில்லி பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் அரச தலைவர்கள் பார்வையிட்டனர். அத்துடன், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.

AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு:

செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது.

எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம்.

AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.

தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த முயற்சி, AI இன் நன்மைகளை பரந்த மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமையில், தேசிய மற்றும் பிராந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறனுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை இலங்கை ஆராய்ந்து வருகிறது.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது.

எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் ம் கவனத்தில் கொண்டு, புது டில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்'' எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239059

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.