Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

Published By: Digital Desk 3

19 Feb, 2026 | 04:36 PM

image

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தான் என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம் காலை நோர்போக்கில் உள்ள 'சாண்ட்ரிங்ஹாம்' எஸ்டேட்டிற்கு பொலிஸ் வாகனங்கள் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன.

2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரர் ஆண்ட்ரூவிடமிருந்து 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' ஆகிய கௌரவப் பட்டங்களை உத்தியோகபூர்வமாக பறித்தார். இதனால் அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுகிறார்.

தனது தரப்பு நியாயமாக, ஆண்ட்ரூ அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

https://www.virakesari.lk/article/239064

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது - இதுவரை தெரிந்தது என்ன?

பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

19 பிப்ரவரி 2026, 10:40 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் நோர்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்திற்கு காவல் துறையின் கார்கள் வந்தடைந்த படங்கள் இன்று காலை வெளியாகியுள்ளன.

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை முன்னாள் இளவரசர் மவுண்ட்பேட்டன் - வின்ட்சர் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரை விசாரித்து வருவதாக, தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை கூறியதைத் தொடர்ந்து இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கடுமையாக மறுத்துவருகிறார்.

ஆண்ட்ரூ தங்கியிருந்த சாண்ட்ரிங்ஹாமில் பல வாகனங்கள் காணப்பட்டன. அவை அடையாளங்கள் இல்லாத போலீஸ் வாகனங்கள் என்று நம்பப்படுகிறது.

பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது ஏன்?

பட மூலாதாரம்,Bav Media

படக்குறிப்பு,இன்று காலை ஆண்ட்ரூவின் சாண்ட்ரிங்ஹாம் வீட்டிற்கு அருகில் போலீசார் இருப்பதாக நம்பப்படும் படம்

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.

தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்து அவர் ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

இருப்பினும், ஆண்ட்ரூ எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சமீபத்தில் அவரது இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிபிசி நியூஸ் புரிந்துகொள்கிறது.

ஆண்ட்ரூவின் சாண்ட்ரிங்ஹாம் வீட்டிற்கு அருகில் போலீசார் இருப்பதாக நம்பப்படும் படம்

பட மூலாதாரம்,Bav Media

காவல்துறை கூறியது என்ன?

ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டது தொடர்பாக தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "விசாரணையின் ஒரு பகுதியாக இன்று நோர்ஃபோக்கில் ஒருவரை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்‌ஷயர் மற்றும் நோர்ஃபோக்கில் உள்ள முகவரிகளிலும் சோதனைகளை நடத்தியுள்ளோம். தற்போது அந்நபர் போலீஸ் காவலில் உள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயரை தேசிய வழிகாட்டுதலின்படி நாங்கள் வெளியிடவில்லை." என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக உதவி தலைமை கான்ஸ்டபிள் ஆலிவர் ரைட் கூறுகையில், "முழுமையான ஆய்வைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த வழக்கு மீதான பொது நலனின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் புரிந்துகொள்கிறோம், தகுந்த நேரத்தில் இதுகுறித்து மேலதிக தகவல்களை வழங்குவோம்." என தெரிவித்தார்.

யார் இந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்?

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம்,Max Mumby/Indigo/Getty Images

படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் பிரிட்டனின் அரசர் சார்லஸின் சகோதரர் ஆவார். அவர் கடந்த ஆண்டு தனது இளவரசர் பட்டத்தை இழந்தார். (கோப்புப்படம்)

பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் தான் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன், கடந்தாண்டு அவர் தன்னுடைய இளவரசர் பட்டத்தை இழந்தார், பின்னர் விண்ட்சர் கோட்டையில் உள்ள அரச இல்லத்திலிருந்து (Royal Lodge) வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக பல வாரங்கள் நிகழ்ந்த தீவிரமான விவாதத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரசரின் சகோதரர் இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் - விண்ட்சர் என்று மட்டுமே [இளவரசர் அல்ல] அறியப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy67wp5vgqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.