Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிம் மீள்பதிவு வர்த்தமானி: தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பா? - முஜிபுர் ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிம் மீள்பதிவு வர்த்தமானி: தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பா? - முஜிபுர் ரஹ்மான்

Published By: Vishnu

20 Feb, 2026 | 05:24 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2019 காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு, குறித்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, சிவராம், எக்னெலிகொட, போத்தல ஜயந்த மற்றும் தாஜுதீன் போன்றவர்களின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில் 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்கள் அந்த நிறுவனங்களில் இல்லாமை காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு அது பிரச்சினையாக இருப்பதால், 2019ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை மீள பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும்போது, குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறித்த நிறுவனங்களுக்கு நிபந்தனையாக தெரிவித்தே, அந்த நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அனுமதியை வழங்கி இருக்கிறது. அதனால்தான் நாங்கள் சிம் அட்டை பெற்றுக்காெள்ளும்போது எமது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்குகிறோம். அப்படியானால் யாரை பாதுகாக்க ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்த பல கொலைகள் 2019லே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்க, தாஜுதீன் போன்றவர்களின் வழக்கு விசாரணை, தொலைபேசி அறிக்கை இல்லாமையாலே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் அது தொடர்பில் 60க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சென்றுள்ளன. அதனை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்போது டயலாேக் நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரியாக இருந்தவர்தான் ஹான்ஸ் விஜேசூரிய. அவர் தற்போது ஜனாதிபதியின் பொருளாதார ஆலாேசகர். அதேபோன்று தாஜுதீனின் கொலையை விபத்து என வழக்கின் பீ அறிக்கையை மாற்றிய பொலிஸ் குற்றப்பிரிவு எஸ்.பி. தற்போது பாெலிஸுக்கு பொறுப்பான அமைச்சின் ஆலோசகராக இருக்கிறார். இவ்வாறான நிலையில் தாஜுதீனின் கொலையாளியை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அதிகமான கொலைகளுக்கு அரசியல் தொடர்பு காணப்படுகிறது. அதேபோன்று அது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு தொலைபேசி தகவல் பெறவேண்டியதாகும். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் இந்த கொலைகளுடன் தொடர்புபுடைய யாராவது, மீண்டும் அந்த சிம் அட்டையை பதிவு செய்வார்களா?இது இடம்பெறப்போவதில்லை. அப்படியானால், குறித்த தொலைபேசி நிறுவனங்கள் அந்தபொறுப்பில் இருந்து நீங்கிக்கொள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

சிம் அட்டை விநியாேகித்த நிறுவனத்திடம், சிம் அட்டை உரிமையாளரின் தகவல்கள் இல்லை என அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாது. அப்படியென்றால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் புதிதாக சிம் அட்டைகளை பதிவு செய்த பின்னர், வழக்கு விசாரணைகளின்போது குறித்த தொலைபேசி நிறுவனங்கள், தங்களிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவிக்கும், அப்போது அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடியாகும். அதனால் ஜனாதிபதி இந்த தொலைபேசி நிறுவனங்களை பாதுகாப்பதற்கா இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என கேட்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/239111

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்கு பாவித்த சிம்மை தலையை சுற்றி கடலுக்குள் எறிவார்களா?

அல்லது….

அனுர சொல்லிபோட்டார் என்பதால் மீள பதிந்து, கொலை கேசில் மாட்டி கொள்வார்களா😂.

இது கொம்பெனிகளை அல்ல…இந்த கொலைகளை செய்தோரை…ஆதாரம் இல்லை என சொல்லி பாதுகாக்கும் முயற்சி.

ஏன் என்றால் இந்த கொலைகள் பல இனவாத நோக்கில் நடந்தவை, அதை அனுரவும், அவர் கட்சியும் அன்றும், இன்றும் ஆமோதித்தன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.