Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சாலேக்குள் மறைந்துள்ள பல மர்மங்கள் - கைது தொடர்பில் அரசு வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சாலே கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு முன்கூட்டியே முழுமையான தகவல்கள் கிடைத்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சுரேஷ் சாலேக்குள் மறைந்துள்ள பல மர்மங்கள் - கைது தொடர்பில் அரசு வெளியிட்ட தகவல் | Reason For Suresh Sales Arrest

இதனடிப்படையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தீர்மானிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

இங்கு அத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலேக்குள் மறைந்துள்ள பல மர்மங்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25 இல் பரிசீலனை!

Mar 23, 2026 - 01:01 PM

சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25 இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

https://adaderanatamil.lk/news/cmn2v87h2000k356pe5a761p4

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.