Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Mar 5, 2026 - 04:06 PM

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் பாராளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வௌியிட்டார்.

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

இரான் - அமெரிக்கா சண்டை, இங்கைதான் நடக்குது.

இந்திய மீனவர்களையும்... இலங்கை கடற்பரப்புக்கு வர வேண்டாம் என்று சொல்ல வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!

05 Mar, 2026 | 05:09 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. நாங்கள் எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இது எமது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த 6 நாட்களாக தேடப்பட்டனர். இந்நிலையில் இந்திய கரையோர பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த பல நாட்களாக இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த மீனவர்களின் தற்போதைய நிலைமை என்ன? ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்? என்ற விடயங்கள் தெரியவந்த பின்னர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்போம் என்றார்.

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.