Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2026-03-06-at-10.49.12.jp

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்.

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1467362

  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி

Mar 6, 2026 - 12:05 PM

குருநகர் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

குருநகர் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி

  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது

Mar 6, 2026 - 03:26 PM

குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (6) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 23 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். படகு விபத்து ; அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் கடற்றொழில் அமைச்சர்

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 03:07 PM

image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

விபத்துக்குள்ளான படகு கடற்பயணத்திற்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா?, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைந்திருந்ததா?, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் (உயிர் காப்பு அங்கிகள் போன்றவை) முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக்கூடாது. கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார்.

யாழ். படகு விபத்து ; அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் கடற்றொழில் அமைச்சர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE <span class=🛑"

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPDATE 02

இன்றையதினம் யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இருவர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில் “இன்றையதினம் குருநகர் இறங்குதுறையில் இருந்து படகு ஒன்றில் பலர் பாலைதீவு நோக்கி சென்றனர். இதன்போது குறித்த படகு தண்ணீரில் கவிழிந்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

WhatsApp-Image-2026-03-06-at-11.11.09-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.09.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.10-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.10-2.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.10.jpeg?resize=600%2C338&ssl=1

UPDATE 03

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) ஆகியோரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள் 8 ஆண்கள் என 13 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WhatsApp-Image-2026-03-06-at-11.11.11-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.11-2.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.12-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.13-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2026-03-06-at-11.11.13.jpeg?resize=600%2C338&ssl=1

UPDATE 04

யாழ்ப்பாணத்தில் கடலில் காணாமல் போன மீனவர்கள் தேடும் பணியில் களமிறங்கிய சுழியோடிகள்!

யாழில் கடலில் காணாமல்போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் பாலைதீவு திருவிழாவுக்கு படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.

படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இன்னும் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

IMG-20260306-WA0034.jpg?resize=600%2C338&ssl=1 IMG-20260306-WA0032.jpg?resize=600%2C338&ssl=1 IMG-20260306-WA0035.jpg?resize=600%2C371&ssl=1 IMG-20260306-WA0029.jpg?resize=600%2C338&ssl=1 IMG-20260306-WA0037.jpg?resize=600%2C378&ssl=1

 https://athavannews.com/2026/1467362

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.