Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2026-03-13-at-22.33.57-1.

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார்.

நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.

கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர்.

https://athavannews.com/2026/1468417

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான மர்மப்பொருள் கரையொதுங்கியது: பொதுமக்கள் ஆர்வம்!

14 Mar, 2026 | 04:08 PM

image

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை கரையொதுங்கியுள்ள இந்த மர்மப்பொருள், சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்டதாகக் காணப்படுகிறது.

இது முழுமையாக 'ரெஜிபோம்' (மென்புடைப்பு மீள்மம்) எனப்படும் ஒருவகை இலகுவான பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் கரையில் தரைதட்டும்போது அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடும்போது, கப்பலின் மேலோட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தடுப்பாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படும் இப்பொருளைப் பார்வையிடுவதற்காகப் பெருமளவிலான பொதுமக்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/240951

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி தலிபான்களுக்கு...

ஈரானில் இருந்து ஆயுதங்கள் வந்து இறங்கி உள்ளது போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.