Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

Mar 15, 2026 - 01:48 AM

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.


இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60  
மோட்டார் சைக்கிள்கள்  : 5  
வேன்கள் : 40 
மோட்டார் வாகனங்கள் : 15 
மோட்டார் லொறிகள்: 200 
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15 
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5


நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmqre9bq000t356pv7bj2q3a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது : இன்று முதல் அமுல் - எவ்வாறு QR குறியீட்டை பெறுவது !

15 Mar, 2026 | 06:35 AM

image

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய புவியியல் - அரசியல் சூழ்நிலையால் பெற்றோலியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், கிடைக்கும் எரிபொருளை சீராக நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில தரப்பினர் சட்டவிரோதமாக அதிகளவு எரிபொருளை வாங்கி குவித்து வருகின்றனர் என்பது அண்மையில் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காகவே QR குறியீட்டு முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் செல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் எரிபொருள் வழங்காது என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

QR குறியீட்டை பெறும் முறை

ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும்.

வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு

வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

* பேருந்துகள் – 60 லீற்றர்

* மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்

* வேன் – 40 லீற்றர்

* மோட்டார் கார் – 15 லீற்றர்

* லொறி – 200 லீற்றர்

* வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர்

* முச்சக்கர வண்டி – 15 லீற்றர்

* விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்

* குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர்

தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/240978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய QR முறை - சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு!

Mar 15, 2026 - 10:10 AM

புதிய QR முறை - சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 இந்தத் திட்டத்தின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmr9g01y0013356pit1k9bjw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களுக்கு தடை

Published By: Digital Desk 3

15 Mar, 2026 | 12:08 PM

image

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.Geographic Reference

இன்றையதினம் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அனைத்து நிலையங்களும் இந்தத் தொழில்நுட்ப முறைமையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செல்லுபடியாகும் கியூ.ஆர் குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

முறையாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே நேரடியாக எரிபொருள் விநியோகிக்கப்படும்.

கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் நுகர்வோர் வருகை தர வேண்டும். வேறொருவரின் குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது மாற்று வாகனத்தில் வந்தோ எரிபொருள் பெற முயற்சித்தால், எரிபொருள் வழங்கப்போவதில்லை என உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் சில நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், தற்போது முறைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த குமார ராஜபக்ஷ , புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் இன்னும் கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த முறையைச் சரியாக அமுல்படுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எமது ஊழியர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/241017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் (National Fuel Pass) ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை, தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு தடையின்றி இயங்கி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்கால எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கமைய, வாகன உரிமையாளர்கள் தமக்குரிய பிரிவைத் தெரிவு செய்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்பற்ற வேண்டிய 3 முக்கிய படிநிலைகள்:

  1. மாற்றங்கள் இல்லாதவர்கள்: ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திலோ எவ்வித மாற்றமும் இல்லாதவர்கள், தங்களின் பழைய QR குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  2. QR குறியீட்டைத் தொலைத்தவர்கள்: முன்னர் பதிவு செய்து, தற்போது அந்த QR குறியீட்டைத் தொலைத்தவர்கள் அல்லது தொலைபேசியிலிருந்து நீக்கியவர்கள் (தகவல்கள் மாறாத பட்சத்தில்) மீண்டும் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை. இணையத்தளத்தில் உள்நுழைந்து (Login), தொலைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் பழைய QR குறியீட்டை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  3. புதிய பதிவுகள் மற்றும் மாற்றங்கள்: இதுவரை பதிவு செய்யாதவர்கள், புதிதாக வாகனம் வாங்கியவர்கள் (உரிமை மாற்றம் செய்தவர்கள்) அல்லது முன்னர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தைத் தற்போது பயன்படுத்தாதவர்கள், இணையத்தளத்தில் புதிதாகப் பதிவு செய்தல் அவசியமாகும்.

எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்தவும் இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு, அரச தகவல் மையத்தின் 1919 என்ற விசேட இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.

QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.