Pandeeyan Madurai ·pSsondoetr3970Lu21lgu67m21u0rccmm0:92gasm 2117aà062 8e4cha ·
கேள்விகளும் கவியரசர்கண்ணதாசன் பதில்களும்...
1. உடல்நிலை சரியில்லாமல் தாங்கள் சமீபத்தில் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடந்த போது இந்த கலை உலகைப் பற்றியும் கவி உலகை பற்றியும் ஏதாவது நினைத்தீர்களா?
'செய்ய வேண்டிய காரியங்களை காலத்தால் செய்யாமற் போனோமே' என்று வருந்தினேன். 'என்னை எழுத விடாமல் தடுத்த சூழ்நிலைகளை எண்ணிப் பொருமினேன்' 'கடந்து போன காலங்களை வீணாக்கி விட்டோமே என்று கண்ணீர் வடித்தேன்' அடுத்த பிறவியிலும் கவிதை கலையில் இதே திறமையை வழங்கும்படி ஆண்டவனை வேண்டினேன். அடடா.. சிந்திப்பதற்க்கு ஆஸ்பத்திரி எவ்வளவு அற்புதமான இடம்?
2. காதலில் தோல்வியுற்ற தாங்கள், தங்கள் மகன் காதல் திருமணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக உத்தரவு அளிப்பீர்கள் என்று என் தோழி பந்தயம் கட்டுகிறாள். "அன்புள்ள அத்தானில்" ஹீரோவை பார்த்ததன் விளைவு?
இது, அவரவர் ஜாதகத்தை அவரவரே கணித்துக் கொள்ளும் யுகம்.
அவன் தலையெழுத்து அப்படி இருந்தால் சிவன் கூட மறுக்க முடியாது.
3. அரசன் அன்றே கொல்வான், அதனால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் தெய்வம் நின்றுக் கொல்லும். இதனால் பிரச்சனை பெரிதாக உருவாகி விடும் அல்லவா?
பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும் சந்தேகமே இல்லை. நோயை முற்றவிட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு 'அந்த நோய்' வரவே வராது.
4. தாங்கள் எப்போதும் 'காமத்தை' மையமாக வைத்தே எழுதிகிறீர்களே ஏன்?
காமம் எப்போதும் "மைய"மாகத் தான் இருக்கும்.
5. "காமதாசன்" என்ற பட்ட பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்று இருக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களா?
நல்லது.. இடையிலே "ராஜ" என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் "காமம்" என்றால் "அன்பு " என்றொரு பொருளும் உண்டு.
6. இவ்வளவு காலம் அரசியலில் மாட்டித் தவித்தீர்கள். இரண்டு வரிகளில் அந்த அனுபவத்தை படம் பிடியுங்களேன்?
அரசியல் எனது உருவத்தைச் சிதைத்து காட்டி இருக்கிறது. ஆனால், என் சுயசரிதத்தின் பக்கங்களை அதிகரித்திருக்கிறது.
7. இலக்கியம் ஏற்றம் பெறுவது கருத்தாலா? கற்பனையாலா?
வெறும் கருத்தும் இலக்கியம் அல்ல, வெறும் கற்பனையும் இலக்கியம் இல்ல… மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவம் சேர்ந்துதான் கோழி பிறக்கிறது. 'ஏற்றம்' என்பதும் இரண்டும் சேர்த்து தான் பெற முடியும்.
8. கவிஞன் வாக்கு பொய்க்காது என்னும் கூற்று பற்றித் தங்கள் கருத்து யாது? தங்கள் வாக்கு எத்தகையது?
மனப்பூர்வமாக, லாபம் கருதாது, தோன்றுகின்ற உணர்ச்சியை அப்படியே வடித்து வைக்கும் யாருடைய நேர்மையான வாக்கும் பொய்க்கவே பொய்க்காது.
9. நான் பெண்களுக்கு வாக்குரிமையே கொடுக்கக் கூடாது என்கிறேன். இதுப் பற்றி தாங்கள் கூறுவதென்ன?
வாக்குரிமை கொடுப்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் அவர்கள் கணவன்மார்களுக்கு மட்டும் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று விதி வைக்க வேண்டும். அப்போதுதான் இனம் தெரிந்து போட்டதாக அர்த்தம்.
10. "சந்தைக் கடை இரைச்சலில் நானும் சேர்ந்து கூவிடத் தயார் இல்லை" என்று கூறி சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தங்கள் கைவிட்டீர்களே!' தாங்கள் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம் என்பது என் ஹேஷ்யம் ....தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மைதான். நான் போட்டியிட்டிருந்தால் எம்.எல்.ஏ. ஆகி இருப்பேன். ஆனால், சிஷ்யர்கள் மந்திரிகளாகவும், குரு எம்.எல்.ஏ.வாகவும் அசெம்பிளியில் இருக்கலாமா? நல்லவேளை நான் தேர்தலில் நிற்காதது.
11. கம்பராமாயணம் பரவிய அளவுக்குச் சிலப்பதிகாரம் பரவ வில்லையே ஏன்?
கற்பனையிலும், கருத்தோட்டத்திலும் கம்பன் வியப்புக்குரியவனாக் காட்சியளிக்கிறான். இளங்கோ மதிப்புக்குரியவனாக காட்சியளிக்கிறான்.
12. தங்களின் குரு யார்?
நான் செய்த முட்டாள் தனமே...
நன்றி...
கண்ணதாசன் பதிப்பகம்...
வலைபகிர்வு.....!
By
suvy ·