Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவாலே சமாளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வசிக்கும் ஜேர்மனியின் Baden-Wuerttemberg மாநிலத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது,   Alliances 90/ The Greens கட்சி 30.3 சதவீத வாக்குகளையும், Christian Democratic Union கட்சி 29.7 சதவீத வாக்குகளையும் பெற்றன. இரு கட்சிகளுக்கும் மாநில நாடாளுமன்றத்தில் தலா 56 இருக்கைகள் கிடைத்ததால், மாநில நாடாளுமன்றம் இன்னும் சிக்கலானதாக மாறியிருக்கின்றது.

ஆனால் இந்தத் தேர்தலைப் பற்றி அதிகமாக பேச வைத்தது வேறு ஒரு சம்பவம்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட  Free Democratic  Party(FDP) கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்  Nicole Buettner (41), ஜனவரி மாதத் தொடக்கத்தில்  Schwaebische Zeitung பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். “இந்தத் தேர்தலில் எப்படியும் எங்கள் கட்சி மாநில நாடாளுமன்றத்தில் நுழையும். அப்படி நுழையாவிட்டால் நான் மொட்டையடித்துக் கொள்வேன்!” என்று அவர் தைரியமாகக் கூறியிருந்தார்.

தன் கட்சி குறைந்தபட்சம் ஒரு இருக்கையாவது கைப்பற்றும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கிருந்தது.

ஆனால் அரசியல் கணக்கு எல்லாக் காலமும் எதிர்பார்த்தபடி இருக்காது. தேர்தல் முடிவுகள் வந்தபோது FDP கட்சி வெறும் 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பாரிய தோல்வியைச் சந்தித்தது. மாநில நாடாளுமன்றத்தில் அமர அவர்களுக்கு ஒரு இருக்கை கூடக் கிடைக்கவில்லை.

பல அரசியல்வாதிகள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் பழைய வார்த்தைகளை மறந்து விடுவது வழக்கம். ஆனால்  Nicole Buettner அப்படி செய்யவில்லை.

Untitled Artwork

ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) மாலை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. அதில் அவர் விருப்பமில்லாத புதியமுடி அலங்காரத்தை”  அதாவது முழுக்க மொட்டையடித்த தலையை  காட்டிக்கொண்டே,“நான் ஒரு பந்தயம் கட்டினேன். அதில் தோற்றுவிட்டேன். அந்தத் தோல்விக்காக என் தலைமுடியை தருகிறேன்,” என்று சிரித்தபடி கூறினார்.

அதோடு அவர் மேலும்  ஒன்றைப் பகிர்ந்து கொண்டார், “நான் என் வார்த்தையில் உறுதியாக இருப்பவள். நான் நினைப்பதைச் சொல்கிறேன். நான் சொல்வதைச் செய்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுகிறேன். இப்போது என் புதிய சிகை அலங்காரத்தோடு அதையே நிரூபிக்கிறேன்.”

அரசியலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் கரைந்துவிடுவது புதிய விசயம் அல்ல. ஆனால் சொல்லியதைச் செய்து காட்டும் அரசியல்வாதிகள் அரிது.

தமிழ்நாட்டிலும் மாநிலத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிடும் ஒரு தலைவருக்காவது இப்படிப்பட்ட சவால் விடும்  ‘தில்இருக்கிறதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.