Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

Mar 18, 2026 - 04:10 PM

மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கற்கும் மாணவன், மாணவி ஒருவரது புகைப்படத்தையும் மற்றுமொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் டிக்டொக் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். 

இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தை நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர். 

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmmvwr4rd000i356p5yii0qf1

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தள அவதூறு: மாணவன் மற்றும் தந்தை கைது – தாக்குதல் சம்பவம் பரபரப்பு

adminMarch 17, 2026

TamilNews2-55.png?fit=630%2C840&ssl=1

பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு பரப்பிய மாணவனையும்  காவல்துறையினா்  சுமார் 20 நாட்களின் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூரிய ஆயுதங்களால் தாக்கிய மாணவனின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சாதாரண தர கணித பாடத்தில் சித்தி பெறாதமையால் , கணித பாடத்திற்கு தோற்றுவதற்காக சாதாரண தர கணித வகுப்பிற்காக தனியார் வகுப்பில் கல்வி கற்றுள்ளாா்.

அந்த கணித வகுப்பில் கற்கும் மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இரு மாணவிகளின் (profile) புகைப்படங்களை எடுத்து , மற்றுமொரு மாணவி தனது தாயாரின் தொலைபேசி இலக்கம் ஊடாகவே வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருந்தமையால் மாணவியின் தொலைபேசி இலக்கம் என மாணவியின் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து , இரு மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து , மாணவியின் தாயரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு , அந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போலி “ரிக் ரொக்” தளத்தில் பதிவிட்டுளளார்.

அதனால் மாணவியின் தாயாரின் இலக்கத்திற்கு பல தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான நோக்குடன் தொலைபேசி அழைப்புக்கள் வந்த நிலையில் , மாணவியின் மூத்த சகோதரன் அது தொடர்பில் விசாரித்த வேளை , ரிக் ரொக் தளம் ஒன்றில் இருந்தே இலக்கத்தை பெற்றதாகவும் , குறித்த தளத்தின் இணைப்பினையும் தொடர்பு கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் குறித்த ரிக் ரொக் தளம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அது தனது சகோதரியுடன் கணித வகுப்பில் கற்கும் மாணவனுடையது என்பதனையும் , மாணவன் வேலணை பகுதியை சேர்ந்தவர் என்பதனையும் கண்டறிந்து மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு சென்று மாணவனின் தகப்பனிடம் மாணவனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்து , மாணவனின் தொலைபேசியை பரிசீலித்த வேளை மாணவனே , அந்த ரிக் ரொக் தளத்தினை இயக்கி வருவதனை கண்டறிந்து தகப்பனிடம் காட்டி, மாணவனின் தொலைபேசியுடன் , காவல்  நிலையத்திற்கு சென்று முறையிட போவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன் கூறிய வேளை , தந்தை அவர்களுடன் முரண்பட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கூட சென்றவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , ரிக் ரொக் தளத்தில் அவதூறு ஏற்படுத்திய மாணவனும் ,  தந்தையும் ஊர்காவற்துறை  காவல்  நிலையம் சென்று தனது மகனை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஊர்காவற்துறை காவல்துறையினா்  மாணவனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவனை கைது செய்ததுடன் , ஏனையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையும் எடுத்து இருந்தனர்.  கைது செய்யப்பட்ட இளைஞனை மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றில் மாணவனின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் முற்படுத்தினர். அதனை அடுத்து இளைஞனை நீதிமன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மாணவிகள் தொடர்பில் ரிக் ரொக் தளத்தில் பரப்பப்பட்ட தகவல் தொடர்பில் நியாயம் கேட்க சென்ற வேளை வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு , இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , விளக்கமறியலில் உள்ள இளைஞனுக்கு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து , பிணையில் இளைஞன் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை , மாணவிகளின் புகைப்படத்தினை பயன்படுத்தி , மாணவி ஒருவரின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட்டு , ரிக் ரொக் தளத்தில் தவறான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் ஏன் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊர்காவற்துறைகாவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரிய வேளை , முறைப்பாடு அளிக்க சென்ற தம்மை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில்  காவல்  நிலையத்தில் காவல் காக்க வைத்திருந்தும் முறைப்பாட்டை காவல்துறையினா்  ஏற்காது , தவறான தகவல்களை பரப்பிய மாணவனின் தந்தையின் முறைப்பாட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றில் தெரிவித்தனர்.  அது தொடர்பில் சத்திய கடதாசி முடித்து தருமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மன்று அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் , பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் முறைப்பாடு செய்ய சென்ற வேளை இது சைபர் க்ரைம் பிரிவில் முறையிட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவினர் “ரிக் ரொக்” தளம் தொடர்பில் தாம் முறைப்பாட்டை ஏற்க மாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை காவல்   நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெப்ரவரி மாதம் இறுதியில் முறைப்பாடு செய்த நிலையில் , காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் மாணவனையும் அவரது தந்தையும் கைது செய்து, தந்தையை மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் , மாணவனை சமூக ஊடகத்தில் அவதூறு ஏற்படுத்தினார் என குற்றச்சாட்டின் கீழும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த மன்று தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவன் 18 வயதினை பூர்த்தி செய்யாதமையால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு திகதியிட்டது.

மாணவிகளின் புகைப்படங்களை தவறான நோக்குடன் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் அவதூறு தவறான தகவல்களை பகிர்ந்த மாணவனுக்கு எதிராகவும் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு நபர் ஒருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய மாணவனின் தந்தைக்கும் எதிராக முறைப்பாடு பதிவு செய்து சுமார் 20 நாட்களின் பின்னர் அவர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளமையும் சந்தேகநபர்கள் முன்னர் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக கைது நடவடிக்கையையும் மேற்கொண்டமை காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/230611/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் வேலை செய்கிறதோ?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.